Posts

Showing posts from November, 2022

Makkal Report Tamil weekly December 03-09,2022

Image
 
Image
இது பாஜகவின் சதி! -பாயும் ஜார்கன்ட் முதல்வர்!! அமலாக்க இயக்குனரகம் (ED) முன் ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சட்டவிரோத சுரங்க வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தனது அரசாங்கத்தை சீர்குலைக்கும்  சதி என்று குற்றம் சாட்டியுள்ளார். Hemant Soran "1,000 கோடி ரூபாய் அளவிற்கு  சட்டவிரோத சுரங்கப் புள்ளிவிவரங்கள் எவ்வாறு எட்டப்பட்டன என்பது எனக்குப் புரியாத ஒன்று.  இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் சாத்தியமில்லை.  நான் அரசியல் சாசன பதவியில் இருக்கிறேன், சம்மன் அனுப்பப்படும் விதத்தைப் பார்த்தால், அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும் போல்  தெரிகிறது.  இது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதி” என்று  .செப் 17ம்தேதி செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் முதல்வர் சோரன்! ஜார்கண்ட் முக்தி மோர்சாவின் தலைவரான முதல்வர் சோரன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். "அது நடக்க, 8 கோடி மெட்ரிக் டன் கற்கள் வெட்டப்பட வேண்டும், இது சட்டப்பூர்வமாக வெட்டப்பட்ட அளவை விட நான்கு மடங்கு அதிகம்" என்று விளக்கமளிக்கிறார் சோரன். இந்த
Image
Bulozer Rally With Yogi குஜராத்: புல்டோசர் பேரணியுடன் வரவேற்கப்பட்ட யோகி! உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குஜராத்தின் மோர்பி வான்கனேர் தொகுதிக்கு  தேரதல் பிரச்சாரம  செய்ய கடந்த செப் 10ம்தேதி  வந்தபோது இந்துத்துவாவினரால் புல்டோசர்கள் மற்றும் "புல்டோசர் பாபா" , "ஜெய் ஸ்ரீராம்" ஆகிய கோஷங்களுடன் வரவேற்கப்பட்டிருக்கிறார். புல்டோசர் பேரணியின் போது, ​​இந்துத்துவாவினர் முஸ்லிம்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  அவர்கள் யோகியின் (முஸ்லிம்கள்) வீடு இடிப்புக் கொள்கைகளைப் பாராட்டி, "யோகி அதை முல்லாக்களுக்கு எதிராக (முஸ்லிம்கள்) திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்" என்று உரத்து முழங்கியுள்ளனர். பாஜகவுக்காக பிரச்சாரம் செய்யும் போது, ​​இந்துத்துவா வெறியரான புல்டோசர்பாபா  ராமர் கோயில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ததைக் பாராடரடினார். "காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் இன்று ராமர் கோவில் நிற்குமா?  நரேந்திர மோடியும், அமித் ஷாவும் காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நிராகரித்தனர்” என்று யோகி ஆதித்யநாத் பேசியிருந்தார். மோர்பியில் யோகி ஆதியநாத்
Image
 ஆசிரியர் சங்கம் கலைப்பு! அராஜகத்தில் ஜாமியா பல்கலைக்கழகம்!! ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பல்கலைக்கழகம் கடந்த நவ 17ம்தேதி , தற்போதைய ஜாமியா ஆசிரியர் சங்கத்தை (ஜேடிஏ) கலைத்ததுடன், பேராசிரியை சோனியா சுரபி குப்தாவை இடைநீக்கம் செய்துள்ளது. அவர், நிர்வபத்தின் அனுமதியில்லாமல்  ஆசிரியர் சங்கத் தேர்தலுக்கு அறிவிப்பு செய்தாரம். கல்வி நிறுவனங்கள்  இன்று முழுமையக காவிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. மறுநாள், இப்போது கலைக்கப்பட்ட JTA, இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க பொதுக்குழுக் கூட்டத்தை (GBM) கூடரடியிருந்தது, ஆனால் இப்போது கலைக்கப்பட்ட அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆசிரியர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது.  பல்கலைக்கழகத்தின் சுமூகமான செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையில் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, JTA அலுவலகமும் பல்கலைக்கழக நிரவாகத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழல் ஜாமியா நிர்வாகத்திற்கும் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கும் இடையிலான விரிசலை மேலும் ஆழமாக்கியுள்
Image
அஸ்ஸாம்: பாலிவுட் இயக்குனருக்கு உங்கள் கதையை அனுப்புங்கள்! -போலீஸை போட்டுத் தாக்கிய நீதிமன்றம் அசாம் மாநிலம்.  நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ராவா காவல் நிலையத்திற்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து முஸ்லிம்களின் வீடுகளை இடித்ததற்காக காவல்துறையை கவுகாத்தி உயர் நீதிமன்றம்  கடுமையாக கண்டித்துள்ளது. Guwahathi High Court "விசாரணை என்ற பெயரில் எனது நீதிமன்ற அறையை தோண்டி எடுப்பீர்களா?”எனக் கேட்டிருக்கிறார் நீதிபதி! நீதிமன்றத்தின் அடியில் ஏதோ இருப்பதாக நீங்கள் சொல்லிக்கொண்டு விசாரணை என்ற பெயரில் என் நீதிமன்ற அறையைத் தோண்டி எடுப்பீர்களா?" ஜேசிபி மற்றும் புல்டோசர்களைப் பயன்படுத்தி விசாரணை என்ற போர்வையில் வீடுகளை இடிப்பது எந்த குற்றவியல் சட்டத்திலும் அனுமதிக்கப்படவில்லை" என்று தலைமை நீதிபதி ஆர்.எம். சாயா போலீஸை வறுத்தெடுத்துள்ளார். மேலும்,  "இந்த நாட்டில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்று தெரிகிறது. இதுபோன்ற விஷயங்கள் [தண்டனையாக புல்டோசர்] ரோஹித் ஷெட்டி படங்களில் மட்டுமே நடக்கும்.  உங்கள் எஸ்பியின் கதையை இயக்குனர் ரோஹித் ஷெட்டிக்கு அனுப்புங்கள். காலனித்துவ ஆட்சியின் போது தண்
Image
பேரூந்து நிறுத்தத்தையும் விட்டு வைக்காத மதவெறி! மைசூரு-ஊட்டி சாலையில், குவிமாடம் வடிவிலான (மஸ்ஜிதைப் போன்ற தோற்றம் கொண்ட) பேருந்து நிலையத்தை இடிப்பது தொடர்பாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நவம்பர் 15ஆம் தேதி, உள்ளாட்சி பிரிவுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  அந்த பேரூந்து நிறுத்தத்தை இடிக்க 3 நாள் கெடுவும் விதித்திருந்தது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நெடுஞ்சாலை நிர்வாகச் சட்டம் 2003ன் படி NHAI நடவடிக்கை எடுக்கும்" என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மீடியா செய்திபளின்படி, கர்நாடக பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா 'மஸ்ஜித் போன்ற' பேருந்து நிலையத்தை புல்டோசர் கொண்டு இடிக்கப்போவதாக மிரட்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த இடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது நெடுஞ்சாலைத்துறை ! Bus Stop With Domes "சமூக வலைதளங்களில் நான் பார்த்திருக்கிறேன்.  பஸ் ஸ்டாண்டில் மூன்று குவிமாடங்கள் உள்ளன, நடுவில் பெரியதும் மற்றும் அதன் அருகில் இரண்டு சிறியவைகளும் உள்ளன.  அது ஒரு மஸ்ஜித் தான்" என்று சிம்ஹா டிவிட்டரில் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த கிருஷ்ணராஜா தொகுதி
Image
300 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் இடிப்பு! AD 709 பானிபட்-கத்திமா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த 300 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை சாலை விரிவாக்கத்திற்காக என்று கூறி கடந்த  செப் 17 ம்தேதி இடித்துள்ளது உ.பியின் யோகி அரசு! 300 years old mosque இது ஷேர்பூரில் பானிபட்-காத்திமா நெடுஞ்சாலையைத் தடுக்கும் வகையில. இருந்ததாக இடிப்புக்கு அரசு காரணம் கூறியுள்ளது. "இப்பகுதியில் வசிப்பவர்கள் மத வழிபாட்டுத்தலத்தை இடமாற்றம் செய்யுமாறு பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், காலக்கெடு முடிவதற்குள் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை  எனவே அதிகாரிகள் மசூதியை இடிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியதாயிற்று." என்று சப் - டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்  (SDM)பர்மானந்த் ஜா மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார். அரசு நிலத்தில் உள்ள மேலும் இரண்டு கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என்று பர்மானந்த் ஜா மேலும் குறிப்பிட்டுள்ளார். "அரசு நிலத்தில் கட்டப்பட்ட மேலும் இரண்டு மதக் கட்டமைப்புகள் நெடுஞ்சாலையின் அதே பகுதியில் இடிக்கப்பட உள்ளன தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு வசதியாக இது ஒரு வளர்ச்சி நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறியுள
Image
 தண்ணீர் தொட்டிக்கு தீட்டு கழித்த சாதி வெறியர்கள் ! Water Tank Purified With Cow Urine B y Upper Caste கர்நாடகாவில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் இருக்கும ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து ஒரு தலித் பெண் தண்ணீரைக் குடித்துவிட்டார் என்பதற்காக அந்த தொட்டியில்  இருந்து குடிநீரை வெளியேற்றிய உயர் சாதி இந்துக்கள்,     பிறகு  தொட்டியை கோமியம் கொண்டு சுத்தப்படுத்தியுள்ளனர் கிராமத்தில் கடந்த நவ 18ம்தேதி நடந்த ஒரு தலித் தம்பதிகளின் திருமணத்தின் போது இந்த சம்பவம் நடந்தது. திருமண விழாவிற்கு மணமகளின் உறவினர்கள் அந்த கிராமத்திற்கு வந்திருந்தனர். திருமண விருந்துண்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது அதிலிருந்த பெண் ஒருவர் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்துள்ளார் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சாதிய இந்து  மற்றவர்களை அழைக்க, அவர்கள் அனைவரும் சேர்ந்து தொட்டியில் உள்ள தண்ணீரை அசிங்கப்படுத்தியதற்காக அந்தப் பெண்ணைத் திட்டியுள்ளனர். அந்தப் பெண் கிராமத்தை விட்டு வெளியேறிய பிறகு, லிங்காயத் பீடி பகுதியில்  வசிப்பவர்கள் தொட்டியின் குழாய்களைத் திறந்து, தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி கோமியம் கொண்டு அ
Image
  கவலைப்பட வைக்கும் முஸ்லிம்,சீக்கிய மற்றும் கிறித்தவ சமூகங்களின் நிலை! -ஆய்வறிக்கை கூறும் உண்மை! இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான கவுன்சில் (CMRI) ஞாயிற்றுக்கிழமை பிரஸ் கிளப்பில் "இந்தியாவில் மத சிறுபான்மையினர் அறிக்கை (2021)" என்ற ஆவணத்தை வெளியிட்டது.  236 பக்க அறிக்கை இந்திய சமூகத்தில் முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் உறுப்பினர் அந்தஸ்து குறைந்து வருவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது! CMRI Report 2021 இளம் மற்றும் சுயாதீன ஆய்வாளர்களின் ஆண்டுகால முயற்சியின் விளைவாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.  இந்தியாவில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படும் நிலைமைகளைப் பற்றி விவாதிக்கும் பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட இரண்டு பகுதிகளை இந்த ஆய்வு கொண்டுள்ளது.  சிறுபான்மையினரை எதிர்மறையாக சித்தரிப்பது தொடர்பாக பிரைம் டைம் விவாதங்கள் மற்றும் செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகங்களின் பங்கையும் இது எடுத்துக்காட்டுகிறது.  “பகுப்பாய்வு செய்யப்பட்ட மூன்று டிவி நிகழ்ச்சிகளில் இரண்டு மத சிறுபான்மையினருக்கு எதிரான சதி கோட்பாடுகளை  ஒளிபரப்பியிருக்கின்றன” என்று அறிக்கை கூறுகிறது. ம
Image
 ஸ்ரீரங்கபட்டினம் ஜாமியா மஸ்ஜித் விவகாரம்: நீதிமன்றம் சென்ற பஜ்ரங் தள்! கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்திலுள்ள   ஜாமியா மஸ்ஜிதை காலி செய்யக் கோரி பஜரங் தளம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்ததன் மூலம் மீண்டும் இந்த விவகாரத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மஸ்ஜித் ஒரு காலத்தில் இந்து கோவிலாக இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது. Jamia Masjid “மாண்டியா மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீரங்கப்பட்டனம் நகரத்தின் ஜாமியா மஸ்ஜிதில் இந்துக் கடவுள்கள் மற்றும் கோயில் அமைப்புகளின் தடயங்கள் உள்ளன.  எனவே, மஸ்ஜிதை உடனடியாக காலி செய்ய வேண்டும், மேலும்,மஸ்ஜித்  வளாகத்தில் அமைந்துள்ள கல்யாணியில் ( நீர்த்தடாகம்) இந்து பக்தர்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. பஜ்ரங் தள் தொண்டர்கள் மேலும் மஸ்ஜிதை வாரணாசி கியான்வாபி மஸ்ஜித் போன்று மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  பஜ்ரங்தளத்தின் மாநிலத் தலைவர் மஞ்சுநாத் கடந்த செப் 16 அன்று மனு தாக்கல் செய்ததுள்ளார்.  மஞ்சுநாத் உள்பட 108 அனுமன் பக்தர்கள் மனு அளித்துள்ளனர். இந்த

விலகி நில்லுங்கள்" -ஆர்எஸ்எஸ்-பிஜேபியை எச்சரித்த சீக்கிய அமைப்பு!

Image
Gurcharan singh Grewal  " விலகி நில்லுங்கள்" -ஆர்எஸ்எஸ்-பிஜேபியை எச்சரித்த சீக்கிய அமைப்பு! ஷிரோமணி குருத்வாரா பிர்பந்தக் கமிட்டி (SGPC)   ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவை சீக்கிய விவகாரங்களில் தேவையற்ற தலையீட்டை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது. உச்ச பட்ச குருத்வாரா  (SGPC)  அமைப்பின் ஸ்தாபக நாளில் ,  அதன் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் கிரேவால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எழுதிய கடிதத்தில்,  பெரும் தியாகங்களுக்குப் பிறகு எஸ்ஜிபிசி உருவானது என்றும், அதன் உருவாக்கத்திற்காக தொடங்கப்பட்ட போராட்டம் நாட்டின் சுதந்திரத்திற்கு அடித்தளம் அமைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆனால் கெடுவாய்ப்பாக, பாஜக ஆளும் மத்திய அரசும், பாஜக தலைவர்களும் எஸ்ஜிபிசி விவகாரங்களை சிக்கலாக்க நேரடியாக தலையிடுகின்றனர்.  நவம்பர் 9 ஆம் தேதி SGPC யின் ஆண்டுத் தேர்தலின் போது இந்த குறுக்கீடு நிகழ்ந்த்தை உதாரணமாகச் சொல்லலாம்  என்றும் கிரேவால் குற்றம் சாட்டியுள்ளார். இன்னும், பிஜேபியின் சித்தாந்த ஊற்றுமுனை ஆர்எஸ்எஸ் ஆகும் என்றும் பிஜேபி தலைமையிலான யூனியன

Makkal Report Weekly November26-December 02,2022

Image
 

 குஜராத் சட்டமன்றத்தில் துடைத்தெறியப்பட்ட முஸ்லிம் பிரிதிநிதித்துவம்!. 

Image
 குஜராத் சட்டமன்றத்தில் துடைத்தெறியப்பட்ட முஸ்லிம் பிரிதிநிதித்துவம்!.   குஜராத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 10% மக்கள் இருக்கிறார்கள்.  ஆனால் மந்திரி சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இல்லாமல் உள்ளனர்.   இந்துத்வா தேசியவாத பாரதிய ஜனதா கட்சி 1998 முதல் குஜராத்தில் ஆட்சி செய்து வருகிறது, அப்போது முதல் அதற்கு ஒரு முஸ்லீம் அமைச்சர் கூட இல்லை. குஜராத்தில்  முஸ்லிம்கள் தோராயமாக 11 சதவிகிதம் ள்ளனர்.  25 சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமான இருப்பைக் கொண்டுள்ளனர். குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சியின்  வரலாற்றில் போட்டியிட்ட ஒரே முஸ்லீம் உறுப்பினர் 24 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார், அதே நேரத்தில் காங்கிரஸ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முஸ்லிம்களை குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கடைசியாக 1995 இல் நிறுத்தியது. வரவிருக்கும் தேர்தல்களில், காங்கிரஸ் இதுவரை பரிந்துரைத்துள்ள 140 வேட்பாளர்களில் ஆறு முஸ்லிம்கள் உள்ளனர், அதேசமயம்,  பாஜக அறிவித்துள்ள 166 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. Gujrat Muslim Women Casting Vote குஜராத் சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சி அடைந்திள்ளது 1980 ஆம் ஆ
Image
 மக்கள் வரவேற்கும் திட்டம்! ரேஷன் கடைகள் அனைத்திலும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருப்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். குறிப்பாக இல்லத்தரசிகள் இதனை வரவேற்பார்கள். ரேஷன் கடைகளில் மக்களுக்கு சிரமமில்லாமல் அதேசமயம், எளிதாக ரேஷன் பொருட்கள் கிடைக்கவும், திருட்டு, தவறுகள் நடக்காமல் இருக்கவும் அரசின் பொருட்கள் வீணாகாமல் இருக்கவும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது தமிழக அரசு.. அண்மையில்தான் தமிழக அரசு ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடைகளில் குப்பை இருக்க கூடாது. அதேபோல் பொருட்கள் வைத்து இருக்கும் பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும். தரையில் அரிசி, சர்க்கரை இறைந்து இருக்க கூடாது. அதை திரட்டி மக்களுக்கு கொடுக்க கூடாது. சுத்தத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் அரசு உத்தரவிட்டிருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட