Posts

Showing posts from December, 2022

44 முஸ்லிம் குடும்பங்கள் வீடுகளை காலி செய்ய உ.பி அரசு நோட்டீஸ்

Image
44 முஸ்லிம் குடும்பங்கள் வீடுகளை காலி செய்ய உ.பி அரசு நோட்டீஸ் உ.பி மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் உள்ள பத்ருனா தாலுகாவின் நுதன் ஹர்டோ கிராமத்தில் உள்ள 44 முஸ்லிம் குடும்பங்களை தங்கள் வீடுகளை காலி செய்யும்படி உத்தரபிரதேச அரசு கேட்டுள்ளது. 'ஆக்கிரமிப்பு நிலங்களில்' வீடுகள் கட்டப்பட்டதாக கூறி, நிர்வாகம் அவர்களுக்கு வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முஸ்லிம்களை கிராமத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்த லெக்பால் என்ற உள்ளூர் இந்துத்வா செயல்பாட்டாளர்  சில வீடுகளையும் சேதப்படுத்தியதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். தனது மளிகைக் கடை சேதப்படுத்தப்பட்டதாக முகமது சபீர் அலி சித்திக் என்பவர் , இந்தியா டுமாரோ இணையதள ஊடகத்திடம் கூறியுள்ளார்.  “நான் ஒரு  வேலையாக வெளியே சென்றிருந்தேன்.   திரும்பி வந்தபோது, ​​எனது கடை சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டேன்.  சுவர் இடிக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.  லெக்பால் மற்றும் அவரது ஆட்கள் கடையை சூறையாடி பொருட்களை கொள்ளையடித்ததாக என்னிடம் கூறப்பட்டது. " எனத் தெரிவித்துள்ளார். லெக்பால் ஆசப் அலியின் வீட்டையும் சேதப்படுத்தி

 லப் போ பே ஆத்தி ஹை துவா! இக்பாலின் கவிதையை சொன்னதற்காக வழக்குப் பதிவு!

Image
 லப் போ பே ஆத்தி ஹை துவா!   இக்பாலின் கவிதையை  சொன்னதற்காக வழக்குப் பதிவு! லப் பே ஆத்தி ஹை துவா(உதடுகள் பிரார்த்திக்கின்றன)   என்ற அல்லாமா இக்பாலின் உருது கவிதையை மாணவர்களுக்கு  பாடச். சொன்னதற்காக  உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள   அரசு பள்ளி முதல்வர் மற்றும் ஷிக்ஷா மித்ரா ஆசிரியர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ்! பள்ளியின் காலை அசெம்ளியின் போது மாணவர்கள் முஹம்மது இக்பாலின் "லப் பே ஆத்தி ஹை துவா" கவிதையை வாசிக்கும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலானது.  இதையடுத்து, பள்ளி முதல்வர் நஹித் சித்திக் மற்றும்  சிக்ஷா மித்ரா ஆசிரியர் வசீருதீனை இடைநீக்கம் செய்த கல்வித்துறை அவர்களுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களை மதம் மாற்றும் முயற்சியில் அரசுப் பள்ளியில் மத பிரார்த்தனை நிகழ்தப்பட்டதாக  உள்ளூர் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) நிர்வாகி சோம்பல் சிங் ரத்தோர் அளித்த புகாரின் பேரில்தான் சித்திக் மற்றும் வசீருதீன் மீது ஃபரீத்பூர் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. “லபோ பே ஆதி ஹை துவா” என்பது 1902 இல் முஹம்மது இக்பாலால்

உமர் காலித் - சித்தீக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

Image
உமர் காலித் - சித்தீக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்! பிரபல மனித உரிமை ஆர்வலர் உமர் காலித் 832 நாட்களுக்குப் பிறகு தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த டிச 23ம் தேதி காலை ஒரு வார இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். காலை 8.30 மணிக்கு வீட்டை அடைந்த உமர் காலித், ஊடகங்களுடன் பேச அனுமதிக்கப்படவில்லை.   2020ல் வடகிழக்கு டெல்லியில் இந்துத்வாவினர் நடத்திய கலவரம் மற்றும் படுகொலைகள் தொடர்பான  சதி வழக்கில் காலித் போலீசாரால் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.  இந்த வழக்கில், டிசம்பர் 12 அன்று, டெல்லி நீதிமன்றம், காலித்துக்கு ஒரு வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.  கர்கார்டூமா நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலத்திற்கு காலித் ஜாமீன் வழங்கினார். அவர் டிசம்பர் 30-ம் தேதி சரணடைய வேண்டும். திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இரண்டு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார்.காலித் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல, UAPA வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு அமலாக்கத்துறையின் பண

இந்திய கிறித்தவர்கள் மீது அதிகரிக்கும் இந்துத்வா தாக்குதல்கள்!

Image
இந்திய கிறித்தவர்கள் மீது அதிகரிக்கும் இந்துத்வா தாக்குதல்கள்! கிறிஸ்துமஸ் பொதுவாக நயோமி கிரேசிக்கு ஆண்டின் விருப்பமான தருணமாகும்  ஆனால் இந்த ஆண்டு, கிரேசி மகிழ்ச்சியை விட பயத்தை வெகுவாக உணர்கிறார்.  வலதுசாரி இந்துத்வா குழுக்கள் சமீபத்தில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் அவரது கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்குகின்றன. கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் தனது சொந்த நகரமான பெங்களூரில் உள்ள தேவாலயத்திற்குச் செல்லும்போது, ​​​​சபைக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.  ‘இது ஒரு மன சித்திரவதை.  நாங்கள் தேவாலயத்திற்கு செல்ல முடியாது அல்லது அவர்கள் எங்களை கொன்றுவிடுவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் போலீசார் எங்களை பாதுகாப்பதாகவும் எங்களுக்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளனர், ”என்று கிரேசி கூறுகிறார். இந்தியாவின் வரலாற்று பூர்வமான கிறிஸ்தவ சமூகம் கி.மு 52க்கு முந்தையது.   தாமஸ் என்று அழைக்கப்படும் அப்போஸ்தலன் தாமஸ், தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு வந்து ஒரு சிறிய குழு குடியிருப்பாளர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் என்று நம்பப்பட

 சத்தீஸ்கர் கிறித்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்!

Image
 சத்தீஸ்கர் கிறித்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்! சத்தீஸ்கரில் உள்ள நாராயண்பூர் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் உள்ள 20 கிராமங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாற மறுத்ததற்காக தீவிர இந்துத்வாவினரால்  இந்த வாரம் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 18 அன்று கிறிஸ்தவர்கள் வழிபாட்டிற்காகக் கூடியிருந்த வேளையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  தாக்குதல் நடத்தியவர்கள் பல கிறிஸ்தவர்களின் வீடுகளை சூறையாடி அழித்ததோடு, மூன்று தேவாலயங்களை அசுத்தப் படுத்தியுள்ளனர். இந்துத்துவாவினர்,  கிறிஸ்தவர்களைத் தாக்க மூங்கில் தடிகளை பயன்படுத்தியதாக இன்டர்நேஷ்னல் கிறஸ்டியன் கன்சர்ன்  (ஐசிசி) என்ற அமைப்பிடம் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றவர்கள் காட்டிற்குள் ஒடிவிட்டதாகவும் சிலர் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு சென்றதாகவும் தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தாக்குதல்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, ​​நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள் என  போ

மனிதாபிமான உதவி செய்தால் யுஏபிஏ சட்டம் - என்ஐஏவின் அடாவடி!

Image
மனிதாபிமான உதவி செய்தால் யுஏபிஏ சட்டம் - என்ஐஏவின் அடாவடி! பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மஸ்ஜித்தின்  இமாம் ஜாவித் அகமது லோனுக்கு தில்லி நீதிமன்றம்  கடந்த டிச 20 ம் தேதி ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 15 பிப்ரவரி 2022 அன்று கைது செய்யப்பட்ட ஜாவித் லோனுக்கு ஜாமீன் வழங்கியபோது" ​​​​ஒரு நபருக்கு வீடு கட்ட உதவுவது அல்லது  மகளின் மருத்துவ சிகிச்சைக்காக ஒருவருக்கு நிதி உதவி வழங்குவது குற்றமாகக் கருத முடியாது" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாவித் லோன் கந்தர்பாலில் உள்ள ஒரு மஸ்ஜிதில் இமாமாக இருந்தார். லோன் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி காஷ்மீரின் உறுப்பினர் என்று என்ஐஏ குற்றம் சாட்டியிருந்தது. லோனின் வசம் இருந்து ஜமாத்-இ-இஸ்லாமி காஷ்மீர் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை மீட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து லோன் ரூ.15 லட்சம் நன்கொடை பெற்றதாகவும்  அதிலிருந்து  ஒருவருக்கு வீடு கட்ட நிதியுதவி அளிப்பதாக வாக்குறுதி  அளித்ததாகவும், இன்னொருவரின் மகளின் நோய்க்கு சிகிச்சை அளிக்

மதுரா: ஷாஹீ ஈத்கா மஸ்ஜிதில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு! - மீறப்படும் 1991 சட்டம்!!

Image
மதுரா: ஷாஹீ ஈத்கா மஸ்ஜிதில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு! - மீறப்படும் 1991 சட்டம்!! உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜனம்பூமி கோவிலை ஒட்டி அமைந்துள்ள  ஷாஹி ஈத்கா மசூதியில்   அமீனா  (நீதிமன்ற ஊழியர்) மூலம் ஆய்வு செய்ய கூடுதல் சிவில் நீதிபதி மூன்றாவது மதுரா நீதிமன்றத்தின் மூன்றாவது கூடுதல் சிவில நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்து சேனா என்ற இந்துத்வா அமைப்பு தொடர்ந்த ஒரு வழக்கை அடுத்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி மதுரா நீதிமன்றத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி விவகாரம் தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வழக்கின் அடுத்த தேதி ஜனவரி 20, 2023 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஷாஹி ஈத்கா மஸ்ஜித் வளாகத்தின் அனுபோகத்தைக்  கோரியும், அங்குள்ள தற்போதைய மஸ்ஜித்தை இடித்துத் தள்ளக் கோரியும் இந்து சேனாவின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கறிஞர் ஷைலேஷ் துபே மூலமாக  தாக்கல் செய்த மனு மீது சிவில் நீதிபதி  சோனிகா வர்மா தீர்ப்பளித்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ணா கோவிலை இடித்து 13.37 ஏக்கரில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடத்தில் ம

Makkal Report Weekly Dec 31,2022-Jan 06,2023

Image
 

இந்து பெண்ணோடு பழகுவதா? - வெறியான ஏபிவிபியினர் !

Image
இந்து பெண்ணோடு பழகுவதா? - வெறியான ஏபிவிபியினர் ! கர்நாடகாவின் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்தில் உள்ள   PU கல்லூரியின் 18 மாணவர்கள் இந்த வார தொடக்கத்தில் ஒரு இந்து பெண்ணுக்கும் ஒரு முஸ்லீம் பையனுக்கும் இடையேயான சமய உறவு காரணமாக நடத்திய மோதல்களைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். நீக்கப்பட்ட 14 ஆண்களும் நான்கு பெண்களும் விட்டலா பியு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு அறிவியல் பாடப்பிரிவைச் சேர்ந்தவர்கள். கல்லூரி முதல்வர் ஆதர்ஷா ராய், "மூன்று மாதங்களுக்கு முன்பு விஷயம் வெளிச்சத்திற்கு வந்தபோது, ​​பெண்ணுக்கும் பையனுக்கும் இடையிலான உறவை இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடைய சில மாணவர்கள் எதிர்த்தனர். அந்த மாணவி மற்றும் மாணவனின்   பெற்றோர்கள் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் முன் இருவரும்  எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்கிறார்" இருப்பினும், ஒரு சோதனையின் போது சிறுமியின் பையில் காதல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.  இது வளாகத்தில் உள்ள இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே பதற்றத்தைத் தூண்டியது. அந்த பெண்ணுடன் தொடர்ந்து தொடர்பில்  இரு

 பிரியாணி கடையில் இந்துத்வாவினர் வன்முறை!

Image
 பிரியாணி கடையில்  இந்துத்வாவினர் வன்முறை! மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் உள்ள ஒரு பிரியாணி விற்பனை நிலையத்தின் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த பகதூர் ஷா ஜாபரின் உருவப்படம் இந்துத்துவாவினரால்  அடித்து  நொறுக்கப்பட்டுள்ளது கடைசி முகலாய பேரரசரான பஹதூர்ஷா அவுரங்கசீப்பின் வழித்தோன்றல் என்று  கூறி இந்துத்வாவினர் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 14 அன்று இரவு நடந்த இந்த சம்பவம் குறித்து யாருக்கும் எதிராக புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கோலாப்பூரின்  ராஜாராம்புரி காவல் நிலைய அதிகாரி  மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார். “இந்துத்வா வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் பிரியாணி கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு சுவரில் தொங க விடப்பட்டிருந்த பகதூர் ஷா ஜாபரின் உருவப்படத்தைப் பார்த்து  அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அவர்கள், ‘அவுரங்கசீப்பின் வழித்தோன்றல்’ படத்தை ஏன் சுவரில் தொங்கவிட்டிருக்கிறீர்கள்  என்றும், அதை அகற்றுமாறும் உணவக ஊழியர்களிடம்  கேட்டுள்ளனர்," என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஊழியர்கள் இதற்கு ஒப்புக்கொண்ட பின்பும்   பஹதூர் க்ஷாவின் உருவப்பட

தர்காக்களை இடித்த உத்ரகாண்ட் அரசு!

Image
தர்காக்களை இடித்த  உத்ரகாண்ட் அரசு! உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் பவுரி மாவட்டங்களில் வன நிலத்தில் கட்டப்பட்டிருந்த சட்டவிரோத கல்லறைகள் மற்றும் சமாதிகள்  இடிக்கப்பட்டுள்ளன.  நடவடிக்கை எடுப்பதற்கு முன், வனத்துறையினர் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 15 கல்லறைகள் மற்றும் சமாதிகளை அடையாளம் கண்டு பின்னர் இவை அனைத்தும் இடிக்கப்பட்டன.  மாநில அரசின் உத்தரவு வந்தவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பவுரியில் மாவட்ட வனத்துறை நிலத்தில் கட்டப்பட்ட சமாதியும்(தர்கா) அகற்றப்பட்டுள்ளது.  இது பீர் பாபாவின் சமாதி ஆகும. இதற்கு பாவ்ரி எம்எல்ஏ ராம்குமார் போரி, எம்எல்ஏ நிதியில் இருந்து இந்த சமாதிக்கு தகர கொட்டகை அமைக்க இரண்டு லட்சத்தை ஒதுக்கீடு செய்தார்.  ஆனால், எம்.எல்.ஏ.வின் இந்த செயலுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமாதியை அகற்றக்கோரினர்.  சமாதியை அகற்றாவிட்டால் விஎச்பி சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் எச்சரித்திருந்தனர்.  வனத்துறையின் இந்த நடவடிக்கை குறித்து டேராடூன் கஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், பொது இடத்தில் கல்லறை அல்ல

 ஷாருக்கான் படப்பிடிப் புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சங்பரிவார்!

Image
 ஷாருக்கான் படப்பிடிப் புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சங்பரிவார்! ஷாருக்கான் நடிக்கும் ‘டுங்கி’ படத்தின் படப்பிடிப்பு மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்று வருவதாக அறிந்த இந்துத்துவா அமைப்புகளான பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இந்த மூன்று நாள் படப்பிடிப்பின்போது கான் உட்பட முக்கிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், படப்பிடிப்பு கடந்த டிச 15 அன்றே முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.திரைப்படத்தின் துணை நடிகர்கள், திரைப்பட உதவியாளர்கள் ஆகியோருக்கு எதிராக இந்துத்வாக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதாவது, ஆளில்லாத கடையில் டீ ஆத்தியிருக்கிறார்கள். ஷாருக்கானின் வரவிருக்கும் படமான ‘பதான்’ க்கு எதிராக இந்துத்துவா குழுவினர்  வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட திரைப்படத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பதான் திரைப்படம்  இந்து உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகக் இந்துத்துவாவினர் கூறிவருகினரறனர். குறிப்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட பதான் திரைப்படப்

 சிறுபான்மையினருக் கான பெல்லோஷிப்பை நிறுத்திய மத்திய அரசு - புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்!

Image
 சிறுபான்மையினருக் கான பெல்லோஷிப்பை நிறுத்திய மத்திய அரசு - புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்! சிறுபான்மையினர் போன்ற சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் விரோத அணுகுமுறைக்கு எதிராக, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கடந்த டிச 13 ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. டிசம்பர் 08 அன்று, மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், முஸ்லிம், சீக்கியர், பார்சி மாணவர்களுக்காக யுஜிசியால் செயல்படுத்தப்படும் சிறுபான்மையினருக்கான மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப்பை (MANF) அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.  அறிவியல், மனிதநேயம், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் M.Phil./Ph.D பட்டப்படிப்பை தொடரும் பௌத்த, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சிறுபான்மை சமூகங்களின் ஆராய்சிப் படிப்புக்கு இது வழங்கப்படுகிறது. பெல்லோஷிப்பை நிறுத்துவதற்கான மத்திய அரசின் முடிவு, நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகங்களின் ஆராய்ச்சி  மாணவர்ளுக்கு வருத்

 மராட்டியம்: சாதி ஒழிப்பு-மதக் கலப்பு திருமணங்களை ஒழிக்க அரசு திட்டம்!

Image
 மராட்டியம்: சாதி ஒழிப்பு-மதக் கலப்பு திருமணங்களை ஒழிக்க அரசு திட்டம்!   ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கை அடுத்து 13 பேர் கொண்ட குழுவை அமைக்க மராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது. எதற்காக இந்த கமிட்டி? சாதி ஒழிப்பு திருமணம் மற்றும் கலப்புத்திருமணம் ஆகியவற்றுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவரத்தான் இந்த கமிட்டி. மகாராஷ்டிர அரசாங்கத்தின் சாதி ஒழிப்பு மற்றும் கலப்பு ஜோடிகளைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைக்கும் அரசின் முடிவிற்கு எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம் வெளிப்பட்டுள்ளது.  ஆனால் பிஜேபி மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் ஆளும் கூட்டணிக்கு, இது விரைவில் நடைபெறப்போகும் உள்ளாட்சி தேர்தலுக்கு அதன் பெரிய அரசியல் நோக்கங்களை முன்வைக்கிறது.    இந்த உள்ளாட்சித் தேர்தல்  2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மிக முக்கியமான பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான முன்னோட்டம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும் மும்பை பாஜகவின் முன்னாள் தலைவருமான மங்கள் பிரபாத் லோதா தலைமையிலான 13 பேர் கொண்ட குழு, எதிர்காலத்தில் மத மாற்ற எதிர்ப்பு

 பயன் தரும் முதல்வரின் முத்தான திட்டம்

Image
 பயன் தரும் முதல்வரின் முத்தான திட்டம் 'நம்ம ஸ்கூல்' திட்டம்' என்ற அற்புதமான திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.  இது பொதுமக்கள் மற்றும் அரசு இணையும் திட்டம்  என்று அழைக்கப்படுகிறது. டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனை தலைவராகவும், செஸ் கிராண்ட் மாஸ்டர் திரு.விஸ்வநாதன் ஆனந்தை நல்லெண்ணத் தூதராகவும் இந்த முயற்சியில் இணைத்துள்ளார் முதல்வர். "நீங்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டிலும் உங்கள் சொந்த ஊரிலும் உங்கள் வேர்கள் வலுப்படவேண்டும். உங்களை வளர்த்த உங்கள் மண்ணுக்கு  அதை நீங்கள் திருப்பிச் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு நம்ம ஸ்கூல் திட்டம் வாயிலாக, நம்ம பள்ளி வாயிலாக நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. நம்முடைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும், பெருநிறுவனங்களையும், தமிழ்நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள் அவர்கள் நம் வளத்தையும், நம்பிக்கையையும் திட்டங்களையும் வளர்த்தெடுப்பார்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்களும் அரசுடன் கை கோர்க்க வேண்டும். தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2வது இடம். தரமான கல்வி வழங்க

December 24-30,2022

Image