Posts
- Get link
- Other Apps
லக்னோ: சிவாலயா மஸ்ஜித் இந்து கோவில் தான்! -புதிய பிரச்னையை கிளப்பும் இந்துத்வா!! லக்னோ சிவாலய மஸ்ஜித் இந்துக் கோயிலின் மீது கட்டப்பட்டதாகக் கூறி இந்து மகாசபை புகார் அளித்ததை அடுத்து லக்னோ மேம்பாட்டு ஆணையம் (எல்டிஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கியான் வாபி மஸ்ஜித் விவகாரம் எழுந்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் கோவில்-மஸ்ஜித் தொடர்பான சர்ச்சை விவாதத்தில் உள்ளது. சமீபத்திய வழக்கு லக்னோவின் ஹுசைங்கஞ்சில் அமைந்துள்ள ஒரு மஸ்ஜித். அது ஒரு கோவில் என்று இந்துத்வாக்கள் கூறுகின்றன. பாஜக யுவமோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த அபிஜத் மிஸ்ரா இதனைத் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அபிஜத் மிஸ்ரா கூறுகையில், இந்தியா முழுவதும் இதுபோன்ற 50,000 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன, அவை இடிக்கப்பட்டு மஸஜிதுகள் கட்டப்பட்டன. ஹுசைங்கஞ்ச் காவல் நிலைய சரகத்திற்ஹ லகு உட்பட்ட பகுதியில் கும்பத்துடன் கூடிய மஸ்ஜித் இருப்பதாகவும், அங்கு கும்பம் இருப்பதாகவும், அதனை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து முஸ்லிம் சமூகத்தினர் மஸ்ஜிதை உருவாக்கியுள்ளனர். என்றும் கூறி பவருகின்றனர்.
- Get link
- Other Apps
மாநில உரிமைகளை ஆளுநர் மதிக்க வேண்டும்! - ஆளுநர் ஆர். என் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் வெளிப்படையாக சட்டசபையிலேயே மோதல் வெடிக்கும் அளவிற்கு சென்றுள்ளது என்று மீடியாக்கள் எழுதுகின்றன. உண்மைதான் இருவருக்குமான மோதல் அடுத்த கட்டத்தைதான் எட்டியுள்ளது. இதற்கு காரணம் ஆளுநர் தான். முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டே செல்கிறார் ஆளுநர் ரவி். தமிழ்நாடு சட்டசபை கூடும் முன்பே பரபரப்பான சூழ்நிலைதான். ஆளுநர் ஆர். என் ரவி சட்டசபையில் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆளுநர் ஆர். என் ரவியின் உரை கடந்த 9ந்தேதி சட்டசபை எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது. சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவியின் உரை சர்ச்சையாக 3 காரணங்கள் உள்ளதாக மீடியாக்கள் சொல்கின்றன தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் படிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் ஆளுநர் அதை படிக்காமல் தானாக சில வார்த்தைகளை சேர்த்து, சில வார்த்தைகளை நீக்கி உள்ளார். அடுத்து, ஆளுநர் ஆர். என் ரவி தொடக்கத்தில் மட்டும் தமிழ்நாடு என்று கூறிவிட்டு கடைசி கட்டங்களில் தமிழ்நாடு என்று சொல்லாமல் இந்த அரசு என்று கூறியுள்