Posts

Showing posts from October, 2022

துர்கா தேவி சிலை ஊர்வலம் : முஸ்லிம்களின் வீடுகளை எரித்த ஹிந்துத்துவாவினர் !

Image
துர்கா தேவி சிலை ஊர்வலம் : முஸ்லிம்களின் வீடுகளை எரித்த ஹிந்துத்துவாவினர் ! உத்திரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள, இப்ராஹிம்பூர் கிராமத்தில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது, ஒரு மஸ்ஜித் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஹிந்துத்வா சாமியாரான அஜய்குமார் பிஷ்த் என்கிற யோகி ஆதித்யானந்த் ஆட்சி செய்து வரும் மாநிலத்தில் முஸ்லிம் சமூகம் தினமும் அச்ச சூழலுக்குள் தான் வாழ்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த விஜயதசமி விழாவை முன்னிட்டு, சுல்தான்பூரில் இந்துத்வாவினர் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தை (நம்மூர் விநாயகர் சதுர்த்தி போல) முன்னெடுத்தனர். முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கின்ற இப்ராஹிம்பூர் கிராமம் வழியாக ஊர்வலம் சென்ற இந்துத்வா கும்பல் கைகளில் வாட்கள் மற்றும் கொடூர ஆயுதங்களை ஏந்தி இருந்தது. இப்ராஹிம்பூர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்த கும்பல் அவர்களின் வீடுகளையும் தீக்கிரையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்வா குண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அல்லது குறைந்தபட்சம் வன்முறைத் தாக்குதல்களை கட்

தமிழை புறக்கணிக்கும் வித்யாலயா பள்ளிகள்!

Image
தமிழை புறக்கணிக்கும் வித்யாலயா பள்ளிகள்!   ஒன்றிய அரசின் கல்வித்துறையால் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரேயொரு தமிழாசிரியர் கூட இல்லை என்றும், சமஸ்கிருதத்தை கற்பிக்க 53 ஆசிரியர்கள் இருப்பது தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தால் நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா என்ற பெயரில் தேசிய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்தியா முழுவதும் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாட்டில் 3 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு மாவடங்களில் மொத்தம் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. ஒட்டு மொத்தமாக நாடு முழுவதிலும் உள்ள  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் 14.35 லட்சம் மாணவ மாணவிகள் கல்வி  பயின்று வருகிறார்கள். இந்த பள்ளிகளில் பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு பணியில் இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகளும் பயின்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய பாடத்திட்டத்துடன் கல்வித்தரமும் க

Makkal Report 22-28,2022 Weekly October

Image
 

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு: வகுப்பு பதட்டத்தை உண்டாக்கும் நோக்கம் கொண்டது! -எதிர்வினையாற்றும் பினராயி விஜயன்

Image
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு: வகுப்பு பதட்டத்தை உண்டாக்கும் நோக்கம் கொண்டது! -எதிர்வினையாற்றும் பினராயி விஜயன் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் ஒரு விரிவான மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையை நாடு வடிவமைக்க வேண்டும். மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு பிரச்சினை சிறுபான்மையினருக்கு ஆபத்தானதல்ல என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருந்தார். Courtesy: Times Of India சமூக அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு குறித்த மோகன் பகவத்தின் கருத்திற்கு எதிர்வினையாற்றியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், நாட்டில் வகுப்புவாத குரோதத்தை தூண்டி விடக் கூடிய பொய்யான பரப்புரையாகும் இது எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ் தலைவரின் விஜயதசமி விழா பேச்சில் எந்தவித உண்மையோ புள்ளி விவரங்களோ இல்லை. மாறாக, எதிர்வரும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்கான பொய் மட்டுமே அதிலிருக்கிறது” என விஜயன் தெரிவித்துள்ளார். Bhagawat Vijayan முன்னதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் தனது பேச்சில், சமூகம் சார்ந்த அல்லது சமூக அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு என்பது ஒரு முக்கியமான

திரிபுரா: கிறித்தவர்களின் வழிபாட்டு தளத்தை அப்புறப்படுத்திய கிராமத்தினர் !

Image
  திரிபுரா: கிறித்தவர்களின் வழிபாட்டு தளத்தை அப்புறப்படுத்திய கிராமத்தினர் ! திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்திற்குட்பட்ட அமர்பூருக்கு அருகிலுள்ள ஜமாதியா என்கிற பழங்குடியினர் வசிக்கின்ற கம்லாய் கிராமத்தில் கூடாரம் போன்று அமைக்கப்பட்ட தற்காலிக பிரார்த்தனை கூடத்தில் அப்பகுதி பழங்குடியின கிறித்தவர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். கிராம ஹிந்துக்களால் அக்கற்றப்பட்டிருக்கிறது.   இது, பாரம்பரியமாக ஆகஸ்டு மாதத்தில் கெஹர் பூஜை நடத்தப்படும் இடம் என்றும் கெஹர் பூஜை நடத்தப்படுகின்ற பகுதியின் வரம்பிற்குள் கிறித்தவர்களின் பிரார்த்தனை கூடம் வருகிறது என்று கூறி அது அகற்றப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் துர்கா பூஜையோடு தொடர்பு கொண்டிருக்கிறது. போலீஸ் அதிகாரிகளோ, கிறித்தவர்களின் அந்த பிரார்த்தனை மண்டபம், அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் அது அகற்றப்பட்ட வேண்டியிருந்தது. சட்டத்தின்படி ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது என்று சட்டத்தை காரணம் காட்டியுள்ளனர். “அந்த கிராமத்தில் நிலவும் பதட்டமான சூழல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இரு சமூக மக்களுக்கு மத்தியில் சமாதான க

அம்னெஸ்டி வழக்கு: ஒன்றிய அரசுக்கு அன்னெஸ்டி மேல் ஏன் இவ்வளவு கோபம்?

Image
அம்னெஸ்டி வழக்கு: ஒன்றிய அரசுக்கு அன்னெஸ்டி மேல் ஏன் இவ்வளவு கோபம்? இந்தியாவின் அமலாக்கத்துறை, பிரபல மனித உரிமை மற்றும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை என அறியப்படுகின்ற Indians for Amnesty International Trust என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான 1.54 கோடி ரூபாய்கள் பண மோசடி வழக்கில்தற்காலிகமாக பறிமுதல் செய்திருக்கிறது.பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்ற இந்த சொத்துக்கள் வங்கிக் கணக்குகளில் டெபாஸிட் வடிவத்தில் இருக்கின்றன. அதாவது வைப்புத் தொகையாக உள்ளன. இந்த வழக்கில்இதுவரை பறிமுதல் செய்யப்பட வேண்டிய மொத்த தொகை 21.08 கோடி என்கிறது அமலாக்கத்துறை. Amnesty Bangalore Office FCRA என்று சொல்லப்படும் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை ஒழுங்குமுறைச் சட்டம்2010ன் கீழ் சிபிஐ அம்னெஸ்டிக்கு எதிராக பதிவு செய்திருந்த வழக்கின் அடிப்படையில்அமலாக்கப் பிரிவு இதனை விசாரித்து  வருகிறது. இந்த வழக்கில் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல்  இந்தியா ஃபவுண்டேஷன் (AIIFT) 2011-2012 காலக்கட்டத்தில் FCRA வின் கீழ் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் யு.கே (பிரிட்டன்) விடமிருந்து வெளிநாட்டு பங்களிப்பை பெறுவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தது. ஆனால், இது பின்னர் ரத்து

சிறையில் மரணமடைந்த கேரள முஸ்லீம் இளைஞர்

Image
 சிறையில் மரணமடைந்த கேரள முஸ்லீம் இளைஞர்   ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கேரள செயல்பாட்டாளராக என்ஐஏவால் விசாரிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தில்லி மன்டோலி  திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 27 வயது முஹம்மது ஆமீன் மரணமடைந்தார் என கடந்த அக்.8ம் தேதி அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறது போலீஸ். கடந்த 2021 மார்ச் மாதம், இந்தியாவின் கறுப்புச் சட்டமான யுஏபிஏவின் கீழ் வழக்குபதியப்பட்டு அமீன்  கைது செய்யப்பட்டடிருந்தார். பல்வேறு சமூக வலைதளங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை பிரச்சாரம் செய்யும் வெவ்வேறு விதமான சேனல்களை நடத்தி வந்தார்; புதிய உறுப்பினர்களை ஐஎஸ் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார் அமீன். Amin அமீன் இறந்துவிட்டதாக போலீசார் தகவல் அளித்தனர் என அமீனின் தந்தை மியான் குட்டி, மக்தூப் மீடியா என்ற இணையதள ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். கடந்தஅக்.7ம் தேதி இரவு அமீன் தனது பெற்றோர்களுடன் பேசியிருக்கிறார். அதாவது இறந்து போவதற்கு முந்தைய நாள். அப்போது, தனது கடுமையான தலைவலியிலிருந்து நிவாரணம் பெற்றதாகவும் அவர்களிடம் சொல்லியிருக்கிறார். அமீனின் சக சிறைவாசி. &quo

இந்துக்கள் ஆயுதம் ஏந்துங்கள் ! -வன்முறை வெறியைத் தூண்டிவிடும் பிஜேபி எம் எல் ஏ !!

Image
இந்துக்கள் ஆயுதம் ஏந்துங்கள் !   -வன்முறை வெறியைத் தூண்டிவிடும் பிஜேபி எம் எல் ஏ !! ஆன்மிக நம்பிக்கையோடு ஆயுதங்களுக்கு பூஜை போடும் இந்து சமூகத்தினரின் விழாவின்போது இந்துக்களை நோக்கி ஆயுதங்களை ஏந்துங்கள் என வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார் பிஜேபியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான சங்கீத் சோம்! Sangheet Som கடந்த அக்டோபர் 5ம் தேதி, உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டிற்கு உட்பட்ட கேடா கிராமத்தில் ‘ராஜ்புத் உத்தான் சபா’ என்கிற ராஜபுத்திர சமூக அமைப்பு விஜயதசமியை முன்னிட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டுதான் வன்முறைப் பேச்சை பேசியிருக்கிறார் சங்கீத் சோம். சங்கீத் சோம்தான் 2013 ம் ஆண்டு    முஸாஃபர்நகர் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்ட முக்கிய குற்றவாளி. மீரட்டின்  சர்தானா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இவர். ஆயுத பூஜை விழாவில் பேசிய இந்த முஸாஃபர் நகர் கலவர வழக்கின் குற்றவாளி, முஸ்லிம்களை மறைமுகமாக குறிப்பிட்டு, ‘தேச விரோத சக்திகள் தேசத்தின் மீது தாக்குதல் நடத்து கிறார்கள்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார். “ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள் தொகை

தில்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று -குடிமக்களின் குழு அறிக்கை!

Image
தில்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று -குடிமக்களின் குழு அறிக்கை! ஓய்வு பெற்ற புகழ்பெற்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட இந்தியாவின் குடிமக்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறுப்புணர்வு கொண்ட அறிக்கைகள், பொதுத் தளங்களில் வெறுப்புப் பேச்சு முதலானவற்றுக்கு எதிராக அரசின் நடவடிக்கையின்மை ஆகியவை  நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன எனக்  கூறி அவர்கள் ஆழமான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். நிச்சயமற்ற நீதி ( Uncertain Justice ) என்கிற தலைப்பில், 2020ல் வடக்கு தில்லியில் நடந்த முஸ்லிம்களுக்குஎதிரான கலவரம் பற்றிய குடிமக்கள் குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோகுர் தலைமையில், நீதிபதி ஏ.பி.ஷா (மதராஸ் மற்றும் தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் சட்டக் கமிஷனின் முன்னாள் தலைவர்) நீதிபதி ஆர்.எஸ்.சோதி (தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி), நீதிபதி அஞ்சனா பிரகாஷ் (பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி), ஜி.கே. பிள்ளை ஐஏஎஸ் (முன்னாள் உள்துறை செயலாளர்)

மஸ்ஜித்தில் நுழைந்த இந்துத்வா கும்பல்! ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு இந்து மத சடங்கு நிறைவேற்றம்!!

Image
கர்நாடகா:  மஸ்ஜித்தில் நுழைந்த இந்துத்வா கும்பல்! ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு இந்து மத சடங்கு நிறைவேற்றம்!! கர்நாடகாவின் பிதாரில் அமைந்துள்ள 15ம் நூற்றாண்டின் முஹம்மது கவான் மஸ்ஜித் மதரஸாவிற்குள் வன்முறையாக புகுந்த இந்துத்வா கும்பல், "ஜெய் ஸ்ரீராம்";  'இந்து தர்மா ஜெய்' முதலான முழக்கங்களுடன் இந்துமத சடங்குகளை நிறைவேற்றியுள்ளது. மதரஸாவை சேதப்படுத்தி விட்டனர் என முஸ்லிம் தரப்பினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கடந்த அக்.5ம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அக்டோபர் 6ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ  பதிவுகள் சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கில் பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவில், இந்துத்வா கும்பல் மதரஸாவின் படிக்கட்டுகளில் பெரும் கூட்டமாக நின்று கொண்டு, டிரம்ஸ் அடித்து  பாடல்களை  உரத்து ஒலிக்கவிட்டு  அதனூடே அவர்கள் முழக்கங்களை எழுப்புகின்றனர். மதரஸாவின் ஒரு மூலையில் இறுதி சடங்குகளை நிறைவேற்றுகின்றனர்.  Mohamed Kawan Moque & Madarasa  இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹைதராபாத் எம்.பி. அசத்துத்தீன

ஆயிரக்கணக்கில் பவுத்தத்தை தழுவிய தலித் சமூகம் ! அதிர்ந்து போன பிஜேபி

Image
டெல்லி: ஆயிரக்கணக்கில் பவுத்தத்தை தழுவிய  தலித் சமூகம் ! அதிர்ந்து போன பிஜேபி சமீபத்தில் 7000 பேர் வரை பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்வில் கலந்துகொண்டார் என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து  , தில்லி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம்  கடந்த அக் 9  ம் தேதி ராஜினாமா செய்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சரான கவுதம் வெகுஜன மதமாற்றத்தால் கலந்துகொண்டது பிஜேபியின் அரசியல் கருவியாக மாறி அவரது  ராஜினாமாவை கோரியது பிஜேபி . பாபா சாஹேப் அம்பேத்கரின் 22 சபதங்களை எடுத்துக்கொண்ட மதம் மாறிய கூட்டம்  ஹிந்து கடவுளர்களையும் பெண் தெய்வங்களையும் வழிபட மாட்டோம்  என முழங்கியுள்ளனர். இந்த சம்பவத்தை பயன்படுத்திக்கொண்ட பிஜேபி ஆம் ஆத்மி கட்சியினர்  மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஹிந்துக்களை வெறுக்கிறார்கள் என்று  கூறி வருகிறது. அந்த நிகழ்வின் போது அமைச்சர் கவுதம், அரசியல் சாசனத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள படி எனது மதத்தை கடைப்பிடிக்க எனக்கு உரிமை உள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியோ தில்லி அரசாங்கமோ இந்த நிகழ்வுக்கோ அல்லது  பிஜேபியின் கோரிக்கைக்கோ எந்த எதிர் வினையும்

காரைக்கால் : விநாயகர் கோவிலில் மதமாற்ற முயற்சியா? -ஹிந்து முன்னணியின் புகாரும் விளக்கம் தரும் சிறுத்தைகளும் !

Image
காரைக்கால் : விநாயகர் கோவிலில் மதமாற்ற முயற்சியா? -ஹிந்து முன்னணியின் புகாரும் விளக்கம் தரும் சிறுத்தைகளும் !   காரைக்கால் மாவட்டம்  T.R  பட்டினம் வாஞ்சூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில்  உள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் கடந்த 05-10-2022 அன்று நாகூர் மொய்தீன் பள்ளி ஜமாஅத் நிர்வாகிகளும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் கூட்டாக சேர்ந்து மதமாற்ற கும்பலாக மாறி அத்து மீறி உள்ளே நுழைந்து ஹிந்துக்களை மூளைச் சலவை செய்து இஸ்லாமியராக மத மாற்றம் செய்யும் பொருட்டு குரான் மற்றும் இஸ்லாமிய நூல்களை உள்ளே வைத்து வழங்கியுள்ளனர். எனவே , ஹிந்து ஆலயத்தையே மதமாற்ற கூடாரமாக மாற்றிய ஜமாத்தார்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் மீது உரிய சட்டப்பிரிவின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.. - இப்படி ஒரு புகார் மனு காரைக்கால் மாவட்ட காவல் அலுவலகத்தில் காரைக்கால் நகர ஹிந்து முன்னணி அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதி மற்றும் அதன் உள்ளடக்கம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கிறது. நமது பார்வைக்கும் இந்த புகார் மனு வரவே அது குறித்து விசாரிக்கத் தொடங்கினோம். இந்த புகார் மனு