அம்னெஸ்டி வழக்கு: ஒன்றிய அரசுக்கு அன்னெஸ்டி மேல் ஏன் இவ்வளவு கோபம்?

அம்னெஸ்டி வழக்கு: ஒன்றிய அரசுக்கு அன்னெஸ்டி மேல் ஏன் இவ்வளவு கோபம்?

இந்தியாவின் அமலாக்கத்துறை, பிரபல மனித உரிமை மற்றும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை என அறியப்படுகின்ற Indians for Amnesty International Trust என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான 1.54 கோடி ரூபாய்கள் பண மோசடி வழக்கில்தற்காலிகமாக பறிமுதல் செய்திருக்கிறது.பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்ற இந்த சொத்துக்கள் வங்கிக் கணக்குகளில் டெபாஸிட்
வடிவத்தில் இருக்கின்றன. அதாவது வைப்புத் தொகையாக உள்ளன. இந்த வழக்கில்இதுவரை பறிமுதல் செய்யப்பட வேண்டிய மொத்த தொகை 21.08 கோடி என்கிறது அமலாக்கத்துறை.

Amnesty Bangalore Office

FCRA என்று சொல்லப்படும் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை ஒழுங்குமுறைச் சட்டம்2010ன் கீழ் சிபிஐ அம்னெஸ்டிக்கு எதிராக பதிவு செய்திருந்த வழக்கின் அடிப்படையில்அமலாக்கப் பிரிவு இதனை விசாரித்து  வருகிறது. இந்த வழக்கில் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல்
 இந்தியா ஃபவுண்டேஷன் (AIIFT) 2011-2012 காலக்கட்டத்தில் FCRA வின் கீழ் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் யு.கே (பிரிட்டன்) விடமிருந்து வெளிநாட்டு பங்களிப்பை பெறுவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தது.
ஆனால், இது பின்னர் ரத்து செய்யப்பட்டது. அனுமதியும் பதிவும் அதற்கு
மறுக்கப்பட்டது. இதனால் FCRA விலிருந்து தப்பிக்க, தொண்டு நிறுவன
நடவடிக்கைகளை மேற்கொள்ள சேவை ஏற்றுமதி மற்றும் நேரடி அந்நிய முதலீடு என்ற போர்வையில் 2013-14ல் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் இந்தியா பிரைவேட் லிட் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் டிரஸ்ட் (AIT) ஆகியவை உருவாக்கப்பட்டன” என்கிறது அமலாக்கத்துறையின் அறிக்கை.

ED

AIIFTக்கான FCRA உரிமம் ரத்துசெய்யப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதற்கு அம்ெனஸ்டி நிறுவனங்கள் மூலம் புதிய முறை
நடைமுறைப்படுத்தப்பட்டது தனது விசாரணையில் தெரிய வருவதாக அமலாக்கத்துறை கூறுகிறது. அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் யு.கே. 51.72 கோடி ரூபாய்களை சேவை ஏற்றுமதி மற்றும் நேரடி அந்நிய முதலீடு என்ற போர்வையில் AIIPL க்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது
ஏற்றுமதி என்று கூறப்படுவதற்கான இன்வாய்ஸ்கள் மற்றும் ஒப்பந்தத்தின் பிரதிகள் என எந்தவிதமான ஆவண ஆதாரங்களும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவில்லைஎன்று குற்றம் சாட்டுகிறது. அமலாக்கத்துறை.கட்டாயமாக மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் என்ற வடிவத்தில், அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் யுகே, AIPILல் முதலீடு செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. அடுத்து,இன்னொரு இந்திய நிறுவனமான IAIT, AIPLன் 10 கோடி பிக்ஸட் டெபாஸிட் பிணையமாக வைத்து 14.25 கோடிக்கான ஓவர் டிராஃப்ட் வசதியை ஏற்படுத்திக் கொண்டது. இந்த ஓவர் டிராஃப்ட் வசதி, அம்னெஸ்டி இந்தியாவின் தொண்டு நிறுவன நடவடிக்கைக்காக IAITயால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஆக, AIIPL மூலம் பெறப்பட்ட நேரடி அந்நிய முதலீடு பெங்களூரு அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் அறக்கட்டளைக்கான இந்தியர்கள் (IAIT) மூலம் தொண்டு நிறுவன நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப் பட்டுள்ளது என்று கூறுகிறது அமலாக்குத்துறை. 

சரி ஒன்றிய அரசுக்கு அன்னெஸ்டி மேல் ஏன் இவ்வளவு கோபம்?
-ஃபைஸ்

Comments