திரிபுரா: கிறித்தவர்களின் வழிபாட்டு தளத்தை அப்புறப்படுத்திய கிராமத்தினர் !

 திரிபுரா: கிறித்தவர்களின் வழிபாட்டு தளத்தை அப்புறப்படுத்திய கிராமத்தினர் !

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்திற்குட்பட்ட அமர்பூருக்கு அருகிலுள்ள ஜமாதியா என்கிற பழங்குடியினர் வசிக்கின்ற கம்லாய் கிராமத்தில் கூடாரம் போன்று அமைக்கப்பட்ட தற்காலிக பிரார்த்தனை கூடத்தில் அப்பகுதி பழங்குடியின கிறித்தவர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். கிராம ஹிந்துக்களால் அக்கற்றப்பட்டிருக்கிறது.
 

இது, பாரம்பரியமாக ஆகஸ்டு மாதத்தில் கெஹர் பூஜை நடத்தப்படும் இடம் என்றும் கெஹர் பூஜை நடத்தப்படுகின்ற பகுதியின் வரம்பிற்குள் கிறித்தவர்களின் பிரார்த்தனை கூடம் வருகிறது என்று கூறி அது அகற்றப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் துர்கா பூஜையோடு தொடர்பு கொண்டிருக்கிறது. போலீஸ்
அதிகாரிகளோ, கிறித்தவர்களின் அந்த பிரார்த்தனை மண்டபம், அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் அது அகற்றப்பட்ட வேண்டியிருந்தது. சட்டத்தின்படி ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது என்று சட்டத்தை காரணம் காட்டியுள்ளனர்.

“அந்த கிராமத்தில் நிலவும் பதட்டமான சூழல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இரு சமூக மக்களுக்கு மத்தியில் சமாதான கூட்டத்தை ஒருங்கிணைத்தோம். மீறலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உறுதியானநடவடிக்கை எடுக்கும்படி அம்பி பகுதியின் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சமாதான கூட்டத்திற்குப்பின், இந்த பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டது. மேற்கொண்டு எந்தவித தொந்தரவும் ஏற்படக்கூடாதென்று திரிபுரா மாநில ரைபிள் படையினர் மற்றும் காவல் துறையினர் அங்கு அனுப்பப்பட்டு அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்” என்கிறார் அம்பியின் எஸ்டிபிஓ (Sub Divisional Police Officer) உத்தம் பனிக்.

கிராமத்து கிறிஸ்தவர்கள் தங்களுடைய பிரார்த்தனைக்காக அரசு நிலத்தில்
தற்காலிகமான ஒரு மண்டபத்தை (கூடார வடிவில்) அமைத்துள்ளனர்.
அருகாமையிலுள்ள இந்துக்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அவர்கள், தங்களின் கெஹ்ர் பூஜை நடத்தும் நிலத்தின் வரம்பிற்குள் கிறித்தவர்களின் பிரார்த்தனை மண்டபம் வருகிறது என வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உள்ளூர் ஹிந்துக்கள் தாங்களாகவே  அந்த பிரார்த்தனை மண்டபத்தை வன்முறையாக அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த காட்சிகள் வீடியோ பதிவுகளாக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, வதந்திகளும் சேர்ந்து பரப்பப்பட்டதால் இரு சமூக மக்களுக்கிடையில் வகுப்புப் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இரு
சமூகங்களுக்கும் மத்தியில் வன்முறை ஏற்பட்டதாகவும் வதந்திகள் பரவியுள்ளன.ஆனால், காவல்துறையோ இரு சமூகங்களுக்கு மத்தியில் எந்தவித மோதலும் ஏற்படவில்லை என்கிறது.

Make Shift Prayer Hall
Prayer Hall Removed

“அங்கு எவ்வித கலவரமும் ஏற்படவில்லை. கிறித்தவர்கள்
அமைத்திருந்த பிரார்த்தனை மண்டபம் மூங்கில் கட்டைகளால் ஆனது. ஜாமாதியா இனத்தைச் சார்ந்த இந்துக்கள் தங்கள் நிலத்தின் எல்லையை விட்டு (கிராமத்தின்) வேறுபகுதிக்கு பிரார்த்தனை மண்டபத்தை நகர்த்தி கொள்ளுமாறு கிறித்தவத் தரப்பை கேட்டுக் கொண்டுள்ளனர். கருத்து வேறுபாடு முற்றாத அளவிற்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக
காவல்துறையினர்  சென்று சமாதானப்படுத்தியுள்ளனர்” என்கிறார் கோமதி மாவட்ட எஸ்.பியான சஸ்வத் குமார் என்று செய்தி வெளியிட்டுள்ளது ஈஸ்ட் மோஜோ என்கிற இணையதள ஊடகம்.

'ஜமாதியா ஹோடா' என்கிற ஜமாதியா பழங்குடியின சமூகத்தின் உச்சபட்ச அமைப்பின் ஒருங்கிணைப்பு செயலாளரான சுவர்ணா கர் ஜமாதியா, ஜமாத்தியாவின் பாரம்பரியம்படி, இது போன்ற பிரார்த்தனைக் கூடங்கள், கேஹ்ரா பூஜை செய்யப்படும் நிலத்தின் வரம்பிற்குள் கட்டப்படக்கூடாது என்கிறார்.

Kher Puja

 ‘கெர்’ என்ற கொக்போரோக் மொழி வார்த்தைக்கு சுத்திகரிப்பு என பொருள்படும். இந்த கெர் என்பது திரிபுரா பழங்குடியின்  ஒரு பண்டிகையாகும். கிராம மட்டத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு ஒரு
வாரத்திற்கு பின் அரச மாளிகையில் இந்த திருவிழா கொண்டாடப்படும். இந்த விழாவின் பூஜை காலத்தில் மக்களின் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். அதோடு, விழாவல்லாத ஏனைய காலங்களில் கூட, வேறு மத நம்பிக்கையாளர்கள் கெர்  நிலத்தின் வரம்பிற்கு வெளியே தான் தமது மத அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டும். இது,பாரம்பரிய நடைமுறையாகும். கிராம மக்கள் தங்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர்” எனத் தெரிவிக்கிறார்.

கெர் பூஜை சடங்குகள் சமூகத்திற்கு சமூகம் வேறுபடும் என்று கூறுகிற புகழ் பெற்ற பழங்குடியின அறிஞரும் எழுத்தாளருமான சந்திர காந்தா முராசிங், "கெர் பூஜாவின் போது மட்டும் கிராம எல்லையிலிருந்து  எவரும் வெளியேறவோ எல்லைக்கு உள்ளே நுழையவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். கெர் பூஜை முடிந்த சில நாட்களுக்குப்பின் சில சடங்குகளைத் தொடர்ந்து இந்த எல்லைகள் உருவாக்கப்படும். இப்போது, அந்த
கிராமத்தில் நடந்தது என்ன என்பது பற்றி எனக்கொன்றும் தெரியாது. ஆனாலும் கெர் பூஜைக்கான விதிமுறைகள் சமூகத்திற்கு சமூகம் மாறுபடும்” என்று விளக்கமளித்துள்ளார்.

ஜம்பய் மலைப்பிரதேச பாப்திஸ்ட் கிறிஸ்டியன் யூனியன் சர்ச்சின் தலைவரான ஜேடி மாவியா  கிறித்தவர்களுக்கு எதிராக நடந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றுகையில், "அந்த சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை இன்னும் நாங்கள் பெறவில்லை. அது எங்களது சர்ச்சா இல்லையா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால்,
நாங்கள் நடந்த சம்பவம் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். மதத்தின் பெயரால் இதுபோன்ற முரண்பாடுகள் எந்த நாகரிக சமூகமும் தவிர்க்க வேண்டும்” என சமூக அக்கறையுடன் பேசியுள்ளார்.

அமர்பூர் பரிஷ் சர்ச்சின் ஃபாதர் லீஜேஷ்  இந்த சம்பவம் பற்றி, “பிரச்சினை தீர்த்துவிட்டது. மக்கள் அந்த பிரார்த்தனை கூடத்தை ‘சர்ச்’ என்று சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அது, மூங்கில் கட்டைகள் மற்றும் குச்சிகளைக் கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு பிரார்த்தனைக் கூடம். அரசு அதிகாரிகளின் முன்னிலையில் அந்தப்பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. அப்பகுதி வாழ் கிறித்தவர்கள் அருகாமை கிராமத்தில்
உள்ள சர்ச்சிற்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதிக்கு நான் நேரில் சென்று பார்வையிட்டேன். தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடமும் பேசினேன்” என்கிறார் பொறுப்புடன்.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் தான் பெருமளவில் வகுப்புப்
பதட்டத்திற்கும், சமய முரண்பாடுகளுக்கும் பெரிதும் காரணமாக அமைகின்றன.இதுபோன்ற பொய்யான சமூக வலைதளப் பதிவுகளை சைபர் பிரிவு போலீசார்உடனடியாக நீக்கி அவை தொடர்பான கணக்குகளை முடக்கி சம்மந்தப்பட்டவர்களுக்குஎச்சரிக்கை விடுப்பதை அதிகப்படுத்தினாலே நாட்டில் அசம்பாவிதச் சம்பவங்கள், வகுப்பு



மோதல்கள் பெருமளவில் குறைந்துவிடும்.
-அபு

Comments