ஆயிரக்கணக்கில் பவுத்தத்தை தழுவிய தலித் சமூகம் ! அதிர்ந்து போன பிஜேபி

டெல்லி:
ஆயிரக்கணக்கில் பவுத்தத்தை தழுவிய  தலித் சமூகம் !
அதிர்ந்து போன பிஜேபி


சமீபத்தில் 7000 பேர் வரை பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்வில் கலந்துகொண்டார் என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து  , தில்லி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம்  கடந்த அக் 9  ம் தேதி ராஜினாமா செய்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சரான கவுதம் வெகுஜன மதமாற்றத்தால் கலந்துகொண்டது பிஜேபியின் அரசியல் கருவியாக மாறி அவரது  ராஜினாமாவை கோரியது பிஜேபி .

பாபா சாஹேப் அம்பேத்கரின் 22 சபதங்களை எடுத்துக்கொண்ட மதம் மாறிய கூட்டம்  ஹிந்து கடவுளர்களையும் பெண் தெய்வங்களையும் வழிபட மாட்டோம்  என முழங்கியுள்ளனர். இந்த சம்பவத்தை பயன்படுத்திக்கொண்ட பிஜேபி ஆம் ஆத்மி கட்சியினர்  மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஹிந்துக்களை வெறுக்கிறார்கள் என்று  கூறி வருகிறது. அந்த நிகழ்வின் போது அமைச்சர் கவுதம், அரசியல் சாசனத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள படி எனது மதத்தை கடைப்பிடிக்க எனக்கு உரிமை உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியோ தில்லி அரசாங்கமோ இந்த நிகழ்வுக்கோ அல்லது  பிஜேபியின் கோரிக்கைக்கோ எந்த எதிர் வினையும் ஆற்ற வில்லை. பிஜேபியின் தில்லி பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு தில்லி போலீஸ் கமிஷ்னரைச் சந்தித்து அமைச்சர் கத்தமிற்கு எதிராக புகார் மனு அளித்தி ருக்கிறது. கடந்த அக்  5 ம் தேதி புதுதில்லியின் ஜந்தேவாலன் பகுதியில் உள்ள அம்பேத்கர் பவனில் அசோகா விஜயதசமி கொண்டாட் டங்களின் ஒரு பகுதியாக பத்தாயிரம் பேர் பாத்ததிற்கு மஹம் மாறிய நிகழ்வு நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த சந்தோஷ் (32) என்பவர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.  "நான் ஒரு தலித், நான் தொடர்ந்து மாணவர்களிடமிருந்து சாதிய அவதூறுகளை எதிர்கொண்டேன். நான் ஆசிரியர்களிடம் புகார் அளித்தேன், ஆனால் பலனளிக்கவில்லை, "என்று கூறும்  சந்தோஷ் குடும்பத்தில் பள்ளிக்குச் சென்ற முதல் நபர் அவர்தான், அதை  ஏதோ ஒரு சாதன நினைக்கிறார்.



 அக்டோபர் 5, வியாழன் அன்று, தில்லியின் ஜாண்டேவாலன் பகுதியில் உள்ள அம்பேத்கர் பவனுக்குள் சந்தோஷ் "ஜெய் பீம்" கோஷங்களை எழுப்பிபடியே, இனி நிலைமை மாறும் என்ற நம்பிக்கையுடன் நடந்தார்.எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் புத்த மதத்தைத் தழுவுவதற்காக இங்கு வந்திருந்தார்.டெல்லியின் பஹர்கஞ்சில் ரிக்சா இழுக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார்  சந்தோஷ்  .

சந்தோஷ் தவிர, டெல்லி மற்றும் அதன் அருகாமை பகுதிகளான NCR முழுவதிலும் இருந்து, உ.பியின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான தலித்துகள் புத்த தம்ம தீக்ஷா சமரோவிழாவின் ஒரு பகுதியாக புத்த மதத்தைத் தழுவினர். டெல்லி  அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான வழக்கறிஞர் ராஜேந்திர கௌதம் நிறுவிய ஜெய் பீம் மிஷன் இந்த மதமாற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது  "நான் ஜாதியற்ற சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். பாபாசாகேப் (அம்பேத்கர்) பாடுபட்டதைப் போல அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு சமூகம் இது என்கிறார் கௌதம் என்கிறது தி குயின்ட் இணையதள ஊடகம்.

இந்த நிகழ்வில் சில ஆயிரம் பேர் கலந்து கொண்டனர், ஆர்வலர் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மருமகன் ராஜ்ரத்னா அம்பேத்கரும் கலந்து கொண்டார்.

"பானைகளில் தண்ணீர் குடிப்பதற்காகவோ, மீசை வைத்ததற்காகவோ அல்லது குதிரைகளை வைத்திருந்ததற்காகவோ அல்லது குதிரை சவாரி செய்ததற்காகவோ நம் குழந்தைகள் கொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்றால், நாம் நம்மை ஒழுங்கமைக்க வேண்டும், நமது சமூகம் ஒழுக்கமான முறையில் ஒன்றுபட வேண்டும்."  "பௌத் தரம் கி க்யா பெஹ்சான்?  மானவ், மானவ் ஏக் சமான் !" (பௌத்தத்தின் அடையாளம் என்ன? மனிதர்கள் அனைவரும் சமம்) மற்றும் "ஸாத்   ச்சோடோ, சமாஜ் ஜோடோ" (சாதி அமைப்பை உடைத்து, சமூகத்தை ஒன்றிணைப்போம்).

45  வயதான  லலித்,  மற்றும் 38 வயதான  நிஷா ஆகிய தம்பதிகள்  காஜியாபாத்தில் பால் பண்ணை வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் மூன்று குழந்தைகளுடன் மதமாற்ற விழாவில் கலந்து கொண்டனர். முழு குடும்பமும் மதமாற்றத்திற்கான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளது. அவர்கள் வசிக்கும் இடத்தில், தனது சாதியைச் சேர்ந்த குழந்தைகள் நாற்காலியில் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுகிறார் நிஷா.

"இனிமேல் சாதி பாகுபாடு நடக்காது என்று சொல்பவர்கள் வந்து நமது சமுதாயத்தைப் பார்க்க வேண்டும். எங்கள் சாதியைச் சேர்ந்த குழந்தைகளை நாற்காலியில் உட்கார அனுமதிப்பதில்லை. என் பிள்ளைகள் அதை எதிர்கொள்ளவில்லை என்றாலும், என்னைச் சுற்றி நடப்பதை நான் பார்க்கிறேன், இந்த  நேரம், நாங்கள் இங்கே இருக்கிறோம், ஏனென்றால் எங்கள் குழந்தைகள் அப்படி நடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை," என்றும் கூறுகிறார் நிஷா."எங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் புத்த மதத்தைத் தழுவினோம்," என்கிறார் நிஷாவின் கணவரான லலித்.


தென்கிழக்கு டெல்லியில் உள்ள துக்ளகாபாத்தில் இருந்து வந்திருந்த வர்ஷா (29) என்ற பெண்ணுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. "பகுஜன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எப்போதும் உச்சத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும் செய்திகளில், பெண்கள் தங்கள் சாதியின் காரணமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதைப் பற்றி படிக்கிறோம். இது என்னை பௌத்த மதத்தைத் தழுவ வேண்டும் என்று நினைக்க வைக்கிறது, ஆனால் சில சமயங்களில் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் பிரச்சனைகளுக்குத்  இதுதான் தீர்வு" என்று  தனது தாய் மற்றும் தம்பியுடன் அம்பேத்கர்பவன் வாசலில் நின்றபடிகூறுகிறார். "நான் அநேகமாக நிகழ்வில் பங்கேற்று அடுத்த முறை மாறுவேன்," என்று ம் கூறுகிறார் வர்ஷா.

வர்ஷா கூறுவதற்கு மாறாக, 17 வயதான தினேஷ், தனது நடவடிக்கையில் நம்பிக்கையுடன் இருக்கிறார். "பௌத்த மதத்தைத் தழுவுவது பெருமைக்குரிய விஷயம். மற்ற மதங்களில் உள்ள மக்களிடையே ஒற்றுமை இல்லை. அவர்கள் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் - இது நமது அரசியலமைப்பின் ஆன்மாவிற்கு  எதிரானது" என்கிறார்  தினேஷ்."நீங்கள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், பாபாசாகேப் (அம்பேத்கர்) போன்ற ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும்," என்றும் உறுதியாக கூறுகிறார் தினேஷ்
86 வயதான மோகன் லால் என்பவர் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் புத்த மதத்திற்கு மாறியவர் . "நான் 1934 இல் பிறந்தேன். நான் பாபாசாகேப் உடன் சில ஆண்டுகள் பணியாற்றி பின்னர் கிராமம் கிராமமாகச் சென்று அவரது செய்தியை மக்களுக்கு எடுத்துச் சென்றேன். பாபாசாகேப்பின் கருத்துக்களை எளிமைப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல நாங்கள் உருவாக்கிய பாடல்கள் அடங்கிய கேசட்டுகள் இன்னும் என்னிடம் உள்ளன. நான் அவற்றை அடிக்கடி கேட்கிறேன்," என்கிறார் லால மோகன் லால்  1970களில் புத்த மதத்திற்கு மாறியுள்ளார் .

"அவர்கள் (சாதிய ஹிந்துக்கள் ) எங்களை வீடுகள் கட்டவோ, நல்ல ஆடைகளை அணியவோ, பள்ளிக்குச் செல்லவோ, கிணறுகளில் இருந்து தண்ணீர் குடிக்கவோ அனுமதிக்கவில்லை. பள்ளிக்கு அருகில் கூட செல்ல அனுமதிக்கவில்லை. இப்போது அப்படி இல்லை நிலைமைகள்  சிறப்பாக உள்ளன, ஆனால் எங்கள் அடுத்த தலைமுறைக்கு சாதியத்தளைகளில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும்," என்றார் லால்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்ஷபூமியில் 1956ல் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான தலித்துகள் பவுத்த மதத்தை தழுவியிருப்பது பிஜேபி மற்றும் சங்பரிவார முகாமில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் ஹிந்து ராஷ்டிரக் கனவிற்கு இதெல்லாம் ஒரு தடையாக என்பதால் தன் பதறுகிறது சங்பரிவாரம்

நன்றி : The Quint
-பைசல்

Comments