ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு: வகுப்பு பதட்டத்தை உண்டாக்கும் நோக்கம் கொண்டது! -எதிர்வினையாற்றும் பினராயி விஜயன்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு:
வகுப்பு பதட்டத்தை உண்டாக்கும் நோக்கம் கொண்டது!
-எதிர்வினையாற்றும் பினராயி விஜயன்


அனைத்து சமூகக் குழுக்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் ஒரு விரிவான மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையை நாடு வடிவமைக்க வேண்டும். மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு பிரச்சினை சிறுபான்மையினருக்கு ஆபத்தானதல்ல என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருந்தார்.

Courtesy: Times Of India

சமூக அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு குறித்த மோகன் பகவத்தின் கருத்திற்கு எதிர்வினையாற்றியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், நாட்டில் வகுப்புவாத குரோதத்தை தூண்டி விடக் கூடிய பொய்யான பரப்புரையாகும் இது எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ் தலைவரின் விஜயதசமி விழா பேச்சில் எந்தவித உண்மையோ புள்ளி விவரங்களோ இல்லை. மாறாக, எதிர்வரும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்கான பொய் மட்டுமே அதிலிருக்கிறது” என விஜயன்
தெரிவித்துள்ளார்.

Bhagawat
Vijayan



முன்னதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் தனது பேச்சில், சமூகம் சார்ந்த அல்லது சமூக அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு என்பது ஒரு முக்கியமான விஷயமாகும். இது புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். “இது, எதிர்காலத்தில் இந்துக்கள்
நாட்டில் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்கிற சங்பரிவாரின் நீண்ட கால பழைய பொய்யாகும்” என்று முதல்வர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தொகை வளர்ச்சி என்பது- மொத்த கருவுறுதல் விகிதத்தை அளவுகோலாகக் கொண்டதாகும் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

Representational Image


மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2019- 21ன்
படி, ஏனைய மதங்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம் சமூகத்தின் கருவுறுதல்
விகிதம் கணிசமாக குறைந்து உள்ளது என மேற்கண்ட தரவுகளை மேற்கோள்
காட்டியுள்ள பினராயி விஜயன், தனது கூற்றுக்கு ஆதாரமாக மொத்த கருவுறுதல் விகிதம் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் முறையே 1.9, 2.3 என்ற அளவில் உள்ளதாக 2019-21ம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதோடு, 2015-16ம் ஆண்டின் அறிக்கையில் முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதம் 2.6 ஆகும். இதுவே 1992-93ம் ஆண்டில் 4.4 என்ற விகிதத்தில் இருந்துள்ளது. ஆக, இப்போது முதல் முஸ்லிம் சமூகத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் 46.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேவேனை இந்து சமூகத்தின் கருவுறுதல் விகிதம் 41.2 சதவிகிதமாகக்
குறைந்துள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்னும், மக்கள் தொகை புள்ளிவிவரத்தின்படி, இந்து சமூகத்தின் மக்கள் தொகை பெருக்கம் 3.1 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. அதே சமயம் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தொகை பெருக்கம் 4.7ஆக சரிந்துள்ளது. இப்படி பொதுவெளியில் உண்மையான தரவுகள் கிடைக்கும் நிலையில் பொய்யான கூற்றுகள் மூலம் ஆர்.எஸ்.எஸ் வகுப்புவாதத்தை பரப்புகிறது. தேர்தல் ஆதாயத்திற்காக வகுப்புவாத வெறுப்பு அரசியலை ஊக்கப்படுத்துகின்ற
இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளை மதச்சார்பற்ற சமூகம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் பினராயி விஜயன்.




 

Comments