இந்துக்கள் ஆயுதம் ஏந்துங்கள் ! -வன்முறை வெறியைத் தூண்டிவிடும் பிஜேபி எம் எல் ஏ !!

இந்துக்கள் ஆயுதம் ஏந்துங்கள் ! 

-வன்முறை வெறியைத் தூண்டிவிடும் பிஜேபி எம் எல் ஏ !!

ஆன்மிக நம்பிக்கையோடு ஆயுதங்களுக்கு பூஜை போடும் இந்து சமூகத்தினரின் விழாவின்போது இந்துக்களை நோக்கி ஆயுதங்களை ஏந்துங்கள் என வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார் பிஜேபியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான சங்கீத் சோம்!

Sangheet Som

கடந்த அக்டோபர் 5ம் தேதி, உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டிற்கு உட்பட்ட கேடா கிராமத்தில் ‘ராஜ்புத் உத்தான் சபா’ என்கிற ராஜபுத்திர சமூக அமைப்பு விஜயதசமியை முன்னிட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டுதான் வன்முறைப் பேச்சை பேசியிருக்கிறார் சங்கீத் சோம்.


சங்கீத் சோம்தான் 2013 ம் ஆண்டு    முஸாஃபர்நகர் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்ட முக்கிய குற்றவாளி. மீரட்டின்  சர்தானா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இவர். ஆயுத பூஜை விழாவில் பேசிய இந்த முஸாஃபர் நகர் கலவர வழக்கின் குற்றவாளி, முஸ்லிம்களை மறைமுகமாக குறிப்பிட்டு, ‘தேச விரோத சக்திகள் தேசத்தின் மீது தாக்குதல் நடத்து கிறார்கள்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.


“ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. பிரிவினை பற்றிய பேச்சு பேசப்படுகிறது. தலை துண்டிப்பது பற்றி பேசப்படுகிறது. இவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமானால் அதிகாரத்துடன் ஆயுதங்களும் எதிர்காலத்தில் தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அதோடு, “ராஜபுத்திர சமுதாயம் மறுபடியும் ஆயுதங்களைக் கையில் ஏந்த வேண்டும்” என வன்முறையைத் தூண்டி விட்டுள்ளார் சங்கீத் சோம்.

“பிரதமர் நரேந்திர மோடியின் பிஜேபியில் மூத்த தலைவராக இருக்கின்ற சங்கீத் சோம் முஸ்லிம்கள் மீது தாக்கல் நடத்த ஆயுதங்களை ஏந்துங்கள் என இந்துக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்” என இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் என்ற அமைப்பு டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. “மதத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த தியாகம், அர்ப்பணிப்பு, தவம் ஆகியவை தேவை. தேசவிரோத சக்திகள் நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கின்றன.அதனால், ஆயுதங்களின் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது” என்றும் சங்கீத் சோம்
பேசியுள்ளார் என்கிறது பி.டி.ஐ செய்தி நிறுவனம்.

வன்முறையை தூண்டிவிடும் பேச்சுக்களினூடாக காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோயாத்திரையையும் வகுப்புவாதமயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். “இஸ்லாத்தோடு சம்மந்தப்பட்ட பச்சை நிற கொடிகள் கேரளாவில் பாரத் ஜோடோ பேரணியின் போது பார்க்க முடிந்தது. ஆனால், அங்கு தேசியக் கொடியைக் காணவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இப்படி பேசியதோடு அல்லாமல், “மேற்கு உத்திரப்பிரதேசம் முழுவதிலும் பச்சை நிற கொடிகள் தெரியக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்குள் அறிவார்ந்து செயல்படுங்கள்” என்று கூறி இன்னொரு முஸாஃபர் நகர் கலவரத்திற்கு வித்திட்டிருக்கிறார்.

Inspector Subhofh Kumar

மேலும், “திரைப்படங்களில் ராஜபுத்திரர்களை தவறாகச் சித்தரிப்பது உட்பட அவர்களை களங்கப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. உண்மை என்னவென்றால் கடவுள்களர் களான ராமனும், கிருஷ்ண னும் இந்த பூமிக்கு வர ராஜபு த்திரர்களாக பிறப்பெடுத்தார்கள்” என ராஜபுத்திரர்களை வன்முறை நோக்கத்தோடு தனது பேச்சால் உசுப்பேற்றியுள்ளார் சங்கீத் சோம்.

சங்கீத் சோமிற்கு குற்றப்பின்னணி உண்டு. ஒரு கிரிமினல் குற்றவாளியாக வலம் வரும் சங்கீத் சோம், ராஜபுத்திர சமூகத்தின் வாக்குகளை குறி வைத்து இப்படி மதவாதத்தை, வன்முறை வெறியைத் தூண்டி விட்டுள்ளார்.கடந்த 2012 முதல் 2022 வரை சர்தானா தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். கடைசியாக பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெற்ற உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தலின் போது, சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் அதுல் பிரதானிடம் தோல்வியடைந்தார்.

2012ல் முதன்முறையாக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே முஸாஃபர் நகர் கலவரத்தை தூண்டிவிட்ட குற்றத்திற்காக அப்போதே கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டிவிடும் பேச்சுகளைப் பேசினார்; அது முஸாஃபர் நகர் கலவரத்திற்குக் காரணமானது என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. கடந்த மார்ச் 2021ல், உத்திரப்பிரதேச சிறப்பு புலனாய்வுக் குழு முஸாஃபர் நகர் கலவர வழக்கில் சங்கீத் சோமுக்கு எதிரான இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த இறுதி
அறிக்கையை ஆட்சேபித்து அதற்கு எதிராக மனு எதுவும் தாக்கல் செய்யப்படாததால், புலனாய்வுக் குழுவின் அறிக்கையை உள்ளூர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

Muzafer Nagar Riot 2013

 இந்த முஸாஃபர் நகர் கலவரத்தின் புகார்தாரர் யார் என்றால், அப்போது நேர்மையாக, துணிச்சலாக சங்கீத் சோம் உள்ளிட்ட கலவர குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் சுபோத்குமார் சிங்.  அப்போது சுபோத் குமார் பூலந்த்ஷெஹர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தார். முஸாஃபர் நகர் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தார் என்ற காரணத்திற்காக அவர் மீது
கறுவிக்கொண்டிருந்த இந்துத்வாவினர் 2018ல் பூலந்த்ஷெஹர் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி இன்ஸ்பெக்டர் சுபோத்குமார் சிங்கை சுட்டுக்கொன்றனர்.
-ஃபைஸ்

Comments