சிறையில் மரணமடைந்த கேரள முஸ்லீம் இளைஞர்

 சிறையில் மரணமடைந்த கேரள முஸ்லீம் இளைஞர்

 ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கேரள செயல்பாட்டாளராக என்ஐஏவால் விசாரிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தில்லி மன்டோலி  திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 27 வயது முஹம்மது ஆமீன் மரணமடைந்தார் என கடந்த அக்.8ம் தேதி அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறது போலீஸ்.

கடந்த 2021 மார்ச் மாதம், இந்தியாவின் கறுப்புச் சட்டமான யுஏபிஏவின் கீழ் வழக்குபதியப்பட்டு அமீன்  கைது செய்யப்பட்டடிருந்தார். பல்வேறு சமூக வலைதளங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை பிரச்சாரம் செய்யும் வெவ்வேறு விதமான சேனல்களை நடத்தி வந்தார்; புதிய உறுப்பினர்களை ஐஎஸ் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார் அமீன்.

Amin

அமீன் இறந்துவிட்டதாக போலீசார் தகவல் அளித்தனர் என அமீனின் தந்தை மியான் குட்டி, மக்தூப் மீடியா என்ற இணையதள ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். கடந்தஅக்.7ம் தேதி இரவு அமீன் தனது பெற்றோர்களுடன் பேசியிருக்கிறார். அதாவது இறந்து
போவதற்கு முந்தைய நாள். அப்போது, தனது கடுமையான தலைவலியிலிருந்து நிவாரணம் பெற்றதாகவும் அவர்களிடம் சொல்லியிருக்கிறார். அமீனின் சக சிறைவாசி.

"அமீன் காலையில் ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குஎடுத்துச் செல்லப்பட்டார்" என்று சொன்னதாக மியான் குட்டி தெரிவித்திருக்கிறார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மண்கடா நகரத்தைச் சேர்ந்தவர் அமீன். "என்ஐஏவால்தில்லியில் அமீன்  கைது செய்யப்படுவதற்கு முன் இஸ்லாமிய கல்வியைக் கற்கபெங்களூரு சென்றிருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் தொடங்கியதாகக்கருதுகிறோம்." என்கிறார் மியான் குட்டி.  

Tihar jail

  அமீனுக்கு எதிரான இந்த வழக்கில் என்ஐஏ, பெங்களூரு என்ஐஏ சிறப்பு
நீதிமன்றத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல்
செய்திருந்தது. இந்த வழக்கில் இதர குற்றவாளிகளாக முஹம்மது வக்கார் லோன் என்கிறவில்சன் காஷ்மீரி, மிசா சித்திக், ஷிஃபா ஹாரிஸ் என்கிற ஆயிஷா, உபைத் ஹமீத் மட்டா,மாதேஷ் சங்கர் என்கிற அப்துல்லாஹ், சும்மர் அப்துல் ரஹ்மான் மற்றும் முஸம்மில் ஹுசைன் பட் ஆகியோரை குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது என்.ஐ.ஏ.

Comments