சிறுபான்மையினருக் கான பெல்லோஷிப்பை நிறுத்திய மத்திய அரசு - புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்!

 சிறுபான்மையினருக் கான
பெல்லோஷிப்பை நிறுத்திய மத்திய அரசு

- புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்!




சிறுபான்மையினர் போன்ற சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் விரோத அணுகுமுறைக்கு எதிராக, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கடந்த டிச 13 ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

டிசம்பர் 08 அன்று, மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், முஸ்லிம், சீக்கியர், பார்சி மாணவர்களுக்காக யுஜிசியால் செயல்படுத்தப்படும் சிறுபான்மையினருக்கான மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப்பை (MANF) அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.  அறிவியல், மனிதநேயம், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் M.Phil./Ph.D பட்டப்படிப்பை தொடரும் பௌத்த, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சிறுபான்மை சமூகங்களின் ஆராய்சிப் படிப்புக்கு இது வழங்கப்படுகிறது.


பெல்லோஷிப்பை நிறுத்துவதற்கான மத்திய அரசின் முடிவு, நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகங்களின் ஆராய்ச்சி  மாணவர்ளுக்கு வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப்பை  நிறுத்தக் காரணம், அதனுடன்  பிற அரசாங்க திட்டங்கள் பல பிற அரசாங்க திட்டங்கள் செயல்படுத்துவதே என்ற வினோதமான காரணத்தை கூறியுள்ளார் ஸ்மிருதி இரானி.

1-8 வகுப்பு மாணவர்களுக்கான OBC ப்ரீ-மெட்ரிக் கல்வி உதவித்தொகையை நிறுத்தி வைப்பதற்கான மத்திய அரசின் முடிவை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கூட்டு எதிர்ப்புக் கூட்டம் ஃபெல்லோஷிப்பை சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
இந்த உதவித்தொகை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவிப் பேராசிரியர் தகுதியைப் பெற பெரிதும் உதவுகிறது.

கூட்டு நடவடிக்கை குழுவில் (JAC)Fraternity Movement,   , ASA, NSUI மற்றும் MSF போன்ற பல்வேறு மாணவர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

ஒரு மாணவரால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெல்லோஷிப்களை வைத்திருக்க முடியாது என்பதால், MANF ஐ நிறுத்துவதற்கு அரசாங்கம் கூறியுள்ள  காரணங்கள் தெளிவற்றவை மற்றும் திருப்தியற்றவை என்று JAC சுட்டிக்காட்டுகிறது .

மேலும்,   மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப்புடன்    செயல்படுத்தப்படும் அரசாங்கதின் வேறு திட்டங்கள் ஏதேனும் முரண்பாடுகளை க் கொண்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்ளும அது கூறுகிறது.

சமீபத்தில், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அகில பாரதிய ஷேக்ஷிக் மகாசங் (ABRSM)  இணைந்து நடத்திய நிகழ்வு, உயர்கல்வி நிறுவனங்களை காவி நிறமாக்குவதற்கும், தாழ்த்தப்பட்ட குழுக்களை கல்வி இடங்களிலிருந்து ஒதுக்கி வைப்பதற்குமான பெரிய நிகழ்ச்சி நிரலை வெளிக்கொணருகிறது என்று கூட்டியக்கம் அடித்துச் சொல்லுகிறது!
-அபு

Comments