பயன் தரும் முதல்வரின் முத்தான திட்டம்

 பயன் தரும் முதல்வரின் முத்தான திட்டம்


'நம்ம ஸ்கூல்' திட்டம்' என்ற அற்புதமான திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.  இது பொதுமக்கள் மற்றும் அரசு இணையும் திட்டம்  என்று அழைக்கப்படுகிறது.

டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனை தலைவராகவும், செஸ் கிராண்ட் மாஸ்டர் திரு.விஸ்வநாதன் ஆனந்தை நல்லெண்ணத் தூதராகவும் இந்த முயற்சியில் இணைத்துள்ளார் முதல்வர்.


"நீங்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டிலும் உங்கள் சொந்த ஊரிலும் உங்கள் வேர்கள் வலுப்படவேண்டும். உங்களை வளர்த்த உங்கள் மண்ணுக்கு  அதை நீங்கள் திருப்பிச் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு நம்ம ஸ்கூல் திட்டம் வாயிலாக, நம்ம பள்ளி வாயிலாக நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. நம்முடைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும், பெருநிறுவனங்களையும், தமிழ்நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள் அவர்கள் நம் வளத்தையும், நம்பிக்கையையும் திட்டங்களையும் வளர்த்தெடுப்பார்கள்.

அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்களும் அரசுடன் கை கோர்க்க வேண்டும். தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2வது இடம். தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் முதலிடத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்களும் அரசுடன் கை கோர்க்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத காலம் எது என்று யாரைக் கேட்டாலும், 'அது என்னுடைய பள்ளிக் காலம்தான்' என்று பலரும் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்த அந்தக் காலத்தைத்தான் யாராலும் மறக்க முடியாது. அதேபோல் உங்களுக்கு நெருக்கமான நண்பர் யார் என்று கேட்டால், பெரும்பாலும் பள்ளிக்காலத் தோழர்களைத்தான் நாம் சொல்வதுண்டு. நேற்றுப் பார்த்தவரைக் கூட மறந்துவிடுவோம். ஆனால் நாம் குழந்தைகளாக இருந்தபோது, கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பெயரை நிச்சயமாக நாம் மறக்க மாட்டோம்
அவர்கள் முகங்கள் நமக்கு அடிக்கடி வந்து நிழலாடும். அந்தளவுக்கு ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக் காலம்தான். 

நாம் இந்தளவிற்கு உயர்வதற்கு, இந்த உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது அந்தப் பள்ளிக் கூடம் தான். அந்தப் பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா? என்ற உன்னதமான நோக்கத்தோடு 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' நம்ம ஊர் பள்ளி என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையுமே அரசாங்கம் செய்து விட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும் பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தைத் தெரிவிக்கலாம்.

அதற்கான வாசற்படிதான் இந்த நம்ம ஊர் பள்ளி திட்டம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து, அனைத்துத் துறைகளிலுமே மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் நாம் சென்று கொண்டிருக்கிறோம்." என்றெல்லாம் முதல்வர் உணர்ச்சிப் பொங்க தனது பள்ளிக்கால நினைவுகளோடு பேசியிருக்கிறார்.

இது  தமிழக மாணவ- மாணவிகளின் கல்வி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகும்.

பள்ளிப்பருவத்தை யாராலும் மறக்க முடியாது. அதேசமயம் தான் படித்த பள்ளிக்கூடத்தை நினைவில் வைத்து அதற்கு அனைத்து வகையிலும் உதவ வேண்டும என முனவருபவர்கள் மிக சொற்பமே.அந்த நிலையை மாற்றி நாமும் நமது பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தமிழக மக் கள் மத்தியில் இந்த திட்டத்தின் மூலம் விதைத்திருக்கிறார் முதல்வர்.

முன்னாள் முதல்வர் காமராஜரை கல்விக் கண் திறந்தவர், ஏழை மக்களும் கல்வி கற்க வகை செய்தவர் என்று பாராட்டுகிறோம். காமராஜரைப்போல முதல்வர் மு.க. ஸ்டாலினும், நம்ம ஸ்கூல் திட்டம் மூலம் வரலாற்றில் இடம் பெறுவார்.

அனைத்து மக்களுக்கும் கல்வி என்பது அரசியல் சாசனம் வலியுறுத்தும் அடிப்படை தேவை. அதனை மத்திய மாநில அரசுகள் எல்லா வகையிலும் நிறைவேற்ற திட்டங்களை வகுக்க வேண்டும். அந்த வரிசையில் ஒரு திட்டம்தான் இது.


எல்லாவற்றையும் அரசே செய்துவிட முடியாது. இது போன்ற திட்டங்கள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்படவேண்டியவை; மேம்படுத்தப்பட வேண்டியவை. நாம் கல்வியில் சிறந்து விளங்க, பல்துறையில் வல்லுனராக உருவாக, வாழ்வில் முன்னேற, வசதி வாய்ப்புகளுடன்  வளமாக வாழ, அந்தஸ் துடன் சமூகத்தில இயங்க என இப்படி நம் வாழ்வில் ஏற்றத்தை மட்டுமே உருவாக்கி விடுகிற நாம படித்த பள்ளிக்கூடங்களுக்கு நாம் கொஞ்சமாவது கைமாறு செய்யக் கூடாதா? அது நமது சந்ததிகளுக்கு தானே பயன்தரப் போகிறது? 


கல்வி தனியார் மயமாக்கப் பட்டு கல்வி ஒரு வியாபாரமாகி வரும் சூழலில்-கல்விக்கட்டணம் என்ற பெயரில் கல்விக் கொள்ளை மலிந்து போய் ஏழை மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடும்  நிர்பந்தம் ஏற்படும் இன்றைய காலக்கட்டத்தில் முதல்வர் அறிவித்திருக்கும் ' நம்ம
ஸ்கூல் திட்டம்' தமிழகத்தின் முத்தான திட்டங்களில் ஒன்றுதான்!





 

Comments