விலகி நில்லுங்கள்" -ஆர்எஸ்எஸ்-பிஜேபியை எச்சரித்த சீக்கிய அமைப்பு!

Gurcharan singh Grewal

 " விலகி நில்லுங்கள்"
-ஆர்எஸ்எஸ்-பிஜேபியை எச்சரித்த சீக்கிய அமைப்பு!



ஷிரோமணி குருத்வாரா பிர்பந்தக் கமிட்டி (SGPC)   ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவை சீக்கிய விவகாரங்களில் தேவையற்ற தலையீட்டை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது.


உச்ச பட்ச குருத்வாரா  (SGPC)  அமைப்பின் ஸ்தாபக நாளில் ,  அதன் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் கிரேவால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எழுதிய கடிதத்தில்,  பெரும் தியாகங்களுக்குப் பிறகு எஸ்ஜிபிசி உருவானது என்றும், அதன் உருவாக்கத்திற்காக தொடங்கப்பட்ட போராட்டம் நாட்டின் சுதந்திரத்திற்கு அடித்தளம் அமைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆனால் கெடுவாய்ப்பாக, பாஜக ஆளும் மத்திய அரசும், பாஜக தலைவர்களும் எஸ்ஜிபிசி விவகாரங்களை சிக்கலாக்க நேரடியாக தலையிடுகின்றனர்.  நவம்பர் 9 ஆம் தேதி SGPC யின் ஆண்டுத் தேர்தலின் போது இந்த குறுக்கீடு நிகழ்ந்த்தை உதாரணமாகச் சொல்லலாம்  என்றும் கிரேவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்னும், பிஜேபியின் சித்தாந்த ஊற்றுமுனை ஆர்எஸ்எஸ் ஆகும் என்றும்

பிஜேபி தலைமையிலான யூனியன் மற்றும் ஹரியானா அரசாங்கங்கள் மற்றும் அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் கட்சி தலைவர்கள் SGPC தேர்தலில் நேரடியாக தலையிடுவதாகவும்.

தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் இக்பால் சிங் லால்புரா குருத்வாரா அமைப்பை உடைக்க முயற்சிப்பதன் மூலம் சீக்கிய சமூகத்தின் மத விவகாரங்களில் தலையிடுவதாகவும் SGPC மற்றும் ஷிரோமணி அகாலி தளம் முன்பு குற்றம் சாட்டியிருந்தன.

Sikhs protest against RSS& BJP

நவம்பர் 9 அன்று நடந்த SGPC தலைவர் தேர்தலில், தற்போது வெளியேற்றப்பட்ட தலைவர் பீபி ஜாகிர் கவுருக்காக  இக்பால் சிங் ஆதரவு கோரியதாக SAD குற்றம் சாட்டியுள்ளது.

"SGPC தனது 102 ஆண்டுகால பெருமைமிகு பயணத்தை நிறைவு செய்துள்ளது, இக்காலகட்டத்தின் போது அது குருத்வாராக்களை நிர்வகிப்பதற்கும், சீக்கிய நம்பிக்கை  பிரசங்கிப்பதற்கும், சுகாதாரம், கல்வி மற்றும் மனிதாபிமானப் பணிகளைப்  முன்னெடுப்பதற்கும் முன்மாதிரியான பணிகளைச் செய்துள்ளது

சீக்கியர்களின் பிரச்சினைகளை SGPC பொறுப்புடன் தொடர்ந்து  வந்திருக்கிறது."என்கிறார் கிரேவால்.

கிரேவால்   மோகன் பகவத்திற்கு எழுதிய தனது கடித்த்தில், ""உங்களுக்குத் தெரியாமல் இது (தலையீடு) நடக்கிறது என்றால், நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும், அது உங்களுக்குத் தெரிந்தே நிகழ்கிறது என்றால், உங்கள் அமைப்பு (ஆர்எஸ்எஸ்) உங்கள் கருத்தியல் அணுகுமுறையைப் பற்றி சிந்திக்க இதுவே சரியான நேரம். அது  இந்த பன்முக கலாச்சார மற்றும் பல மத சமூகத்தில் பரஸ்பர மத உறவுகளில் ஒரு பிளவை ஏற்படுத்தும் இது எதிர்காலத்தில் இன்னும் ஆழமடையும் என்று நான் அஞ்சுகிறேன், ”என்று
குறி்ப்பிட்டுள்ளார்.

மேலும்,"இந்த நிகழ்வு சீக்கியர்களின் மனதில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும், இது நாட்டிற்கு நல்லதல்ல.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ. நடந்து வரும் பாதை என்பது சீக்கியர்களுக்கு எதிரான காங். இது போன்ற விவகாரங்களில் தலையிட்ட பாதையாகும்" என்றும்,

"இன்று, எஸ்ஜிபிசியின் வரலாற்று ஸ்தாபன நாளில், சீக்கியர்களின் பிரச்சினைகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.  நீங்கள் இதைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து, சீக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளிலிருந்தும், சீக்கியர்களின் பிரச்சினைகளைச் சிக்கலாக்கும் நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்றும் கிரேவால் மோகன் பகவத்தை எச்சரித்துள்ளார்.

கிரேவால் மோகன் பகவத்திற்கு கடிதம் எழுதிய
அதே நாளில், சத்தீஸ்கரின் அம்பிகாபூரில், "நாட்டில் வாழும் ஒவ்வொரு நபரும் ஒரு ‘இந்து’ என்றும், அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான்.  இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள் என்று 1925ல் இருந்தே  (ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டபோது) இதனைச் சொல்லி வருகிறோம்.  எந்த மதம், கலாச்சாரம், மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், இந்தியாவைத் தங்கள் 'மாத்ருபூமி' (தாய் பூமி) என்று கருதி, வேற்றுமையில் ஒற்றுமை பண்பாட்டுடன் வாழ விரும்புபவர்கள், இந்த வழியில் முயற்சி செய்பவர்கள் இந்துக்கள்தான்." என
  ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தார் மோகன் பகவத்!

-ஃபைஸல்

Comments