300 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் இடிப்பு!


AD 709 பானிபட்-கத்திமா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த 300 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை சாலை விரிவாக்கத்திற்காக என்று கூறி கடந்த  செப் 17 ம்தேதி இடித்துள்ளது உ.பியின் யோகி அரசு!

300 years old mosque

இது ஷேர்பூரில் பானிபட்-காத்திமா நெடுஞ்சாலையைத் தடுக்கும் வகையில. இருந்ததாக

இடிப்புக்கு அரசு காரணம் கூறியுள்ளது.

"இப்பகுதியில் வசிப்பவர்கள் மத வழிபாட்டுத்தலத்தை இடமாற்றம் செய்யுமாறு பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், காலக்கெடு முடிவதற்குள் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை  எனவே அதிகாரிகள் மசூதியை இடிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியதாயிற்று."
என்று சப் - டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்  (SDM)பர்மானந்த் ஜா மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசு நிலத்தில் உள்ள மேலும் இரண்டு கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என்று பர்மானந்த் ஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"அரசு நிலத்தில் கட்டப்பட்ட மேலும் இரண்டு மதக் கட்டமைப்புகள் நெடுஞ்சாலையின் அதே பகுதியில் இடிக்கப்பட உள்ளன

தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு வசதியாக இது ஒரு வளர்ச்சி நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

-ஹிதாயா
 

Comments