குஜராத் சட்டமன்றத்தில் துடைத்தெறியப்பட்ட முஸ்லிம் பிரிதிநிதித்துவம்!. 

 குஜராத் சட்டமன்றத்தில்
துடைத்தெறியப்பட்ட முஸ்லிம் பிரிதிநிதித்துவம்!.
 

குஜராத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 10% மக்கள் இருக்கிறார்கள்.  ஆனால் மந்திரி சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இல்லாமல் உள்ளனர்.


  இந்துத்வா தேசியவாத பாரதிய ஜனதா கட்சி 1998 முதல் குஜராத்தில் ஆட்சி செய்து வருகிறது, அப்போது முதல் அதற்கு ஒரு முஸ்லீம் அமைச்சர் கூட இல்லை.

குஜராத்தில்  முஸ்லிம்கள் தோராயமாக 11 சதவிகிதம் ள்ளனர்.  25 சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமான இருப்பைக் கொண்டுள்ளனர்.

குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சியின்  வரலாற்றில் போட்டியிட்ட ஒரே முஸ்லீம் உறுப்பினர் 24 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார், அதே நேரத்தில் காங்கிரஸ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முஸ்லிம்களை குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கடைசியாக 1995 இல் நிறுத்தியது.

வரவிருக்கும் தேர்தல்களில், காங்கிரஸ் இதுவரை பரிந்துரைத்துள்ள 140 வேட்பாளர்களில் ஆறு முஸ்லிம்கள் உள்ளனர், அதேசமயம்,  பாஜக அறிவித்துள்ள 166 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.

Gujrat Muslim Women Casting Vote

குஜராத் சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சி அடைந்திள்ளது 1980 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், குஜராத் சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அப்போது 10 சதவீதமாக இருந்தது, இது சிறுபான்மை சமூகத்தின் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் சமமாக இருந்தது.

1980ல்,  10 க்கும் மேற்பட்ட  முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தனர்.  அதோடு, குஜராத்தில் இருந்து மூன்று ராஜ்யசபா எம்.பி.க்களும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக.  தற்கு காரணம், முன்னாள் முதல்வர் மாதவ்சிங் சோலங்கியின் ' க்காம்' KHAM (க்ஷத்ரிய, ஹரிஜன், ஆதிவாசி, முஸ்லிம்) தேர்தல் தேர்தல் நிலைபாடுதான் அல்லது அரசியல் கணக்குதான்!
இதனை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதால் இது சாத்தியமானதாக  அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1990ல் மூன்று முஸ்லிம்கள் வெற்றி பெற்றபோது 11 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே சீட்டு பெற்றனர்.

2012ல், குஜராத் சட்டமன்றத்தில் மொத்த முஸ்லீம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை  வெறும் இரண்டாக இருந்தது, 2007ல் 5 ஆகவும், 2002ல் 3 ஆகவும் இருந்தது.

2002 தேர்தலில் முஸ்லிம்களுக்கு வெறும் ஐந்து சீட்டுகளையே காங்கிரஸ் வழங்கியது.  2002 முதல், முஸ்லீம் வேட்பாளர்களுக்கு காங்கிரஸின் சீட்டு விநியோகம் 6ஐ தாண்டவில்லை.

2012 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து முஸ்லிம்கள் மட்டுமே  போட்டியிட்டனர்.

2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.

மாநில சட்டசபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்.


Gujrat assembly

1980 - தேர்தலில் 17 முஸ்லிம்கள் போட்டியிட்டு, 12 பேர் வெற்றி பெற்றனர்

1985 ல்- 11 முஸ்லீம்கள்  தேர்தலில் நின்று 8 பேர் வெற்றி பெற்றனர்.

1990 - 11 முஸ்லிம்கள் போட்டியிட்டனர் இதில் 2 பேர் வெற்றி பெற்றனர்.

1995 – 1 முஸ்லிம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1998- 9 முஸ்லீம்கள் தேர்தலில் நின்றார்கள் (தோல்வியடைந்த பாஜகவின் 1 பேர் உட்பட), 5 பேர் வெற்றி பெற்றனர்.

2002ல் - ஆறு முஸ்லிம்கள் போட்டியிட்டனர், மூன்று பேர் வெற்றி பெற்றனர்.

2007ல்- ஆறு முஸ்லிம்கள் போட்டயிட்டு, ஐந்து பேர் வெற்றி பெற்றனர்.

2012 - ஐந்து முஸ்லிம்கள் போட்டியிட்டு, இருவர் வெற்றி பெற்றனர்.

2017ல் - ஆறு முஸ்லிம்கள் போட்டியிட்டு , மூன்று பேர் வெற்றி பெற்றனர்
பாஜக முஸ்லிகளின் வாக்குகள் தேவையில்லை என பகிரங்கமாகவே பிரகடனம் செய்து தேர்தல் களம் கண்டு வருவதால் ஒரு முஸ்லிம் வேட்பாளர்களைக்கூட அது நிறுத்துவதில்லை என்பது கவனிக்கத்தக்கது..
-அபு



Comments