ஆசிரியர் சங்கம் கலைப்பு!
அராஜகத்தில் ஜாமியா பல்கலைக்கழகம்!!


ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பல்கலைக்கழகம் கடந்த நவ 17ம்தேதி , தற்போதைய ஜாமியா ஆசிரியர் சங்கத்தை (ஜேடிஏ) கலைத்ததுடன், பேராசிரியை சோனியா சுரபி குப்தாவை இடைநீக்கம் செய்துள்ளது. அவர்,
நிர்வபத்தின் அனுமதியில்லாமல்  ஆசிரியர் சங்கத் தேர்தலுக்கு அறிவிப்பு செய்தாரம்.
கல்வி நிறுவனங்கள்  இன்று முழுமையக காவிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மறுநாள், இப்போது கலைக்கப்பட்ட JTA, இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க பொதுக்குழுக் கூட்டத்தை (GBM) கூடரடியிருந்தது, ஆனால் இப்போது கலைக்கப்பட்ட அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆசிரியர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது.  பல்கலைக்கழகத்தின் சுமூகமான செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையில் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

அதோடு, JTA அலுவலகமும் பல்கலைக்கழக நிரவாகத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழல் ஜாமியா நிர்வாகத்திற்கும் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கும் இடையிலான விரிசலை மேலும் ஆழமாக்கியுள்ளது.

1962 இல் நிறுவப்பட்ட JTA, ஜாமியாவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களின் நலனில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

பேராசிரியர் குப்தா ஏன் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்?

பல்கலையில், ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க ஆய்வு மையத்தின் கெளரவ இயக்குனரான பேராசிரியர் குப்தா, நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த   ஜேடிஏ (JTA ) வின் தேர்தல்களை  நடத்த ஜேடிஏவால் தேர்தல் அதிகாரியாக (RO) நியமிக்கப்பட்டார்.   அக்டோபர் 26 அன்று தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட அவர்,   ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவம்பர் 16 அன்று செல்லுபடியாகத்தக்க ஙேட்பாளர்  பட்டியலை வெளியிட்டார்.

Jamia Millia Islamia

ஆயினும், , அவர் இதற்கு நிர்வகத்திடம் அனுமதி பெறாததால், அவரின் தேர்தல் அதிகாரி  நியமனம் சட்டவிரோதம் என்று பல்கலைக்கழகம் வாதிட்டது.

  இந்நிலையில, கடந்த 17ம் தேதி, வியாழனன்று, ஜாமியாவின் பதிவாளர், நஜிம் ஹுசைன் அல் ஜாஃப்ரி, குப்தா வெளியிட்ட அறிவிப்பை செல்லாது என்று அறிவித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில்,  தற்போதைய ஆசிரியர் சங்கத்தின் பதவிக்காலம் 15 மே 2022 அன்று முடிவடைந்ததைக் காரணம் காட்டி சங்கத்தை கலைக்க முடிவு செய்வதாக தெரிவிக்கப் பட்டிருந்த்து.

"நான் என்ன செய்தாலும், என்ன செய்திருந்தாலும், நான் JTA உறுப்பினராகச் செய்து கொண்டிருந்தேன்.  இது தேர்தலை நடத்துவதற்கு எனது சேவையை வழங்குவதாகும், இதைத் தவிர வேறு எதுவும் இல்லை.  நான் எந்த விதிகளையும் மீறவில்லை இவை அனைத்தும் நல்ல எண்ணத்தில்  செய்யப்பட்டது என்றே நான் உணர்கிறேன்" என்கிறார் குப்தா

தற்போதைய சங்கத்தை கலைக்கும் உத்தரவில், ஜே.டி.ஏ-வின் துணைச் சட்டங்கள்/அரசியலமைப்புச் சட்டத்தின் குறைபாடுகளை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க குழுவை அமைக்க ஜாமியாவின் துணைவேந்தர் நஜ்மா அக்தருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் .  ஜேடிஏ தேர்தலை வெளிப்படையாக மற்றும் சுமூகமாக நடத்துவது, உரிய செயல்முறைக்குப் பிறகு   , அதாவது அக்தரின் அறிக்கைக்கு பின் முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகத்தைக் கண்டிக்கும் ஆசிரியர்கள்!

JTA உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் சங்கத்தை கலைத்து, பேராசிரியர் குப்தாவை சஸ்பெண்ட் செய்த நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"ஆசிரியர்களின் கண்ணியம் நிர்வாகத்தால் ஆழமாக புண்படுத்தப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன்.  ஆசிரியர்கள் மற்றும் ஜே.டி.ஏ.வுக்கு எதிராக நிர்வாகம் இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுத்தது ஆசிரியர்களுக்கு பெரிய பின்னடைவு  மற்றும் மிகவும் வெட்கக்கேடானது, இவ்வளவு சக்திவாய்ந்த அமைப்பாக இருநரதும்கூட அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை, ” என்று ஜாமியா  ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஹாரிஸ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பெயர் வெளியிட விரும்பாத JTA உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "ஆசிரியர்கள் தங்களுடைய பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிருந்தனர், ஆனால் ஜாமியா நிர்வாகம் பகிரங்க மிரட்டல் விடுத்ததுடன், ஷோ-காஸ் நோட்டீஸையும் வழங்கியது, ஏற்கனவே கலைக்கப்பட்ட ஒரு சங்கத்தின் நீங்கள் பொறுப்பில்  இருப்பதாகக் கருதுவது மேலும் பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்வதாக இருந்தது" என்கிறார்.


மேலும் , "எனவே, நாங்கள் திடீரென்று ஒரு ஆன்லைன் JTA கூட்டத்தை நடத்தினோம், எங்கள் நலனைப் பாதுகாக்க விரும்பும் எவரும் ஒருவர் அனைத்து ஆசிரியர்களுக்கும் வெளிப்படையான அச்சுறுத்தலை நிர்வாகம் விடுத்துள்ளதால் ,  நீங்கள் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஏனெனில் ஏதாவது நடந்தால் நீங்கள் இலக்காக்கப்படுவீர்கள் என அறிவுறுத்தினார்" என்கிறார்கள் அவர்கள்.

JTA எழுப்பிய முக்கிய  பிரச்னை  என்னவென்றால்,  பல்கலையின் பதிவாளர் டாக்டர் நாஜிம் ஹுசைன் அல் ஜாஃப்ரி தன் பதவிக் காலத்தை முடித்து விட்டார் அவருக்கு 62 வயதாகிவிட்டதால் அந்தப் பதவியில் தொடர முடியாது, ஆனால் பல்கலைக்கழகம் அவரை பணியில் தொடர அனுமதித்துள்ளது.  ஜேஎம்ஐ மற்றும் அரசு விதிகளின்படி, அவர் (டாக்டர் நாஜிம்)  பணியில் தொடர முடியாது.  இதனால் அவர்கள் எரிச்சல் அடைந்து ஜேடிஏ மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜேடிஏ வின் செல்லுபடியகும் காலம் மே மாதமே முடிந்துவிட்டது என, அதனை கலைத்ததற்கு காரணம் சொல்லும் பல்கலை நிர்வாகம், ஆறு மாதம் வரை எதை பிடுங்கிக்கொண்டிருந்தது  என்று தான் கேட்கத் தோன்றுகிறது!
-ஃபைஸல்

Comments