![]() |
Bulozer Rally With Yogi |
குஜராத்:
புல்டோசர் பேரணியுடன் வரவேற்கப்பட்ட யோகி!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குஜராத்தின் மோர்பி வான்கனேர் தொகுதிக்கு தேரதல் பிரச்சாரம செய்ய கடந்த செப் 10ம்தேதி வந்தபோது இந்துத்துவாவினரால் புல்டோசர்கள் மற்றும் "புல்டோசர் பாபா" , "ஜெய் ஸ்ரீராம்" ஆகிய கோஷங்களுடன் வரவேற்கப்பட்டிருக்கிறார்.
புல்டோசர் பேரணியின் போது, இந்துத்துவாவினர் முஸ்லிம்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் யோகியின் (முஸ்லிம்கள்) வீடு இடிப்புக் கொள்கைகளைப் பாராட்டி, "யோகி அதை முல்லாக்களுக்கு எதிராக (முஸ்லிம்கள்) திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்" என்று உரத்து முழங்கியுள்ளனர்.
பாஜகவுக்காக பிரச்சாரம் செய்யும் போது, இந்துத்துவா வெறியரான புல்டோசர்பாபா ராமர் கோயில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ததைக் பாராடரடினார்.
"காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் இன்று ராமர் கோவில் நிற்குமா? நரேந்திர மோடியும், அமித் ஷாவும் காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நிராகரித்தனர்” என்று யோகி ஆதித்யநாத் பேசியிருந்தார்.
மோர்பியில் யோகி ஆதியநாத்தின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தின் நுழைவாயிலில் மூன்று ஜேசிபிகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு பிஜேபி உள்ளூர் தலைவர் ஹிரேன் பரேக் ஆதித்யநாத்தை "புல்டோசர் பாபா" என்று அறிமுகப்படுத்தினார் - இது முஸ்லீம்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் சொத்துக்களை இடித்துத் தள்ளும் யோகி அரசாங்கத்தின் வெளிப்படையான செயல்பாடாகும்.
சமீப காலங்களாக, இந்தியா முழுவதும் உள்ள இந்து(த்வா) தேசியவாத பாரதீய ஜனதா அரசாங்கங்களின் கைகளில் புல்டோசர்கள் ஒரு ஆயுதமாக மாறி முஸ்லிம் சமூகத்தின் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் அழிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களின் வீடுகளை இடிக்கும் கொள்கைக்காக முதல்வர் ஆதித்யநாத்தை வலதுசாரி ஊடகங்கள் "புல்டோசர் பாபா" (புல்டோசர் சாமியார்) என்று பெருமையாக அழைக்கின்றனர்; இந்த மதவெறியரை மக்கள் மத்தியில் ஹீரோவாக சித்திரிக்கின்றன இந்த ஊடகங்கள்!
Comments
Post a Comment