இது பாஜகவின் சதி!
-பாயும் ஜார்கன்ட் முதல்வர்!!


அமலாக்க இயக்குனரகம் (ED) முன் ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சட்டவிரோத சுரங்க வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தனது அரசாங்கத்தை சீர்குலைக்கும்  சதி என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Hemant Soran


"1,000 கோடி ரூபாய் அளவிற்கு  சட்டவிரோத சுரங்கப் புள்ளிவிவரங்கள் எவ்வாறு எட்டப்பட்டன என்பது எனக்குப் புரியாத ஒன்று.  இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் சாத்தியமில்லை.  நான் அரசியல் சாசன பதவியில் இருக்கிறேன், சம்மன் அனுப்பப்படும் விதத்தைப் பார்த்தால், அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும் போல்  தெரிகிறது.  இது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதி” என்று  .செப் 17ம்தேதி செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் முதல்வர் சோரன்!

ஜார்கண்ட் முக்தி மோர்சாவின் தலைவரான முதல்வர் சோரன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

"அது நடக்க, 8 கோடி மெட்ரிக் டன் கற்கள் வெட்டப்பட வேண்டும், இது சட்டப்பூர்வமாக வெட்டப்பட்ட அளவை விட நான்கு மடங்கு அதிகம்" என்று விளக்கமளிக்கிறார் சோரன்.

இந்த வழக்கில் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் பச்சு யாதவ் மற்றும் பிரேம் பிரகாஷ் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.  ₹ 1,000 கோடி ரூபாய் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான குற்றத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்கிறது.

மேலும்,
“நான் முதலமைச்சராக அரசியலமைப்புக்கு உட்பட்ட பதவியை வகிக்கிறேன்.  ஆனால் விசாரணை நடக்கும் விதம், நான் அழைக்கப்பட்ட விதம் ஆகியவற்றைப் பார்த்தால் நான் நாட்டை விட்டு ஓடிப்போகும் நபர் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.  பெரிய தொழிலதிபர்களைத் தவிர வேறு யாரும் நாட்டை விட்டு ஓடியதாக எனக்கு நினைவில்லை.  எந்த அரசியல்வாதியும் அப்படி ஓடிப்போனதுமில்லை,'' என்றார்.

சோரனின் ஆட்சியை, 8 மிநிலங்களில் கவிழ்த்ததைப் போல கவிழ்துவிட சதிதிட்டம் தீட்டிய பாஜகவிற்கு கையில் கிடைத்திருக்கும் கருவிதான் சட்டவிரோத சுரங்க வழக்கு. அரசியல் பழி தீர்ப்புக்காகவே அமலாக்கத்துறையை பயன் படுத்தி வருகிறது ஒன்றிய மோடி அரசு!

-ஃபைஸ். 

Comments