பேரூந்து நிறுத்தத்தையும் விட்டு வைக்காத மதவெறி!


மைசூரு-ஊட்டி சாலையில், குவிமாடம் வடிவிலான (மஸ்ஜிதைப் போன்ற தோற்றம் கொண்ட) பேருந்து நிலையத்தை இடிப்பது தொடர்பாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நவம்பர் 15ஆம் தேதி, உள்ளாட்சி பிரிவுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  அந்த பேரூந்து நிறுத்தத்தை இடிக்க 3 நாள் கெடுவும் விதித்திருந்தது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நெடுஞ்சாலை நிர்வாகச் சட்டம் 2003ன் படி NHAI நடவடிக்கை எடுக்கும்" என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

மீடியா செய்திபளின்படி, கர்நாடக பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா 'மஸ்ஜித் போன்ற' பேருந்து நிலையத்தை புல்டோசர் கொண்டு இடிக்கப்போவதாக மிரட்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த இடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது நெடுஞ்சாலைத்துறை !

Bus Stop With Domes

"சமூக வலைதளங்களில் நான் பார்த்திருக்கிறேன்.  பஸ் ஸ்டாண்டில் மூன்று குவிமாடங்கள் உள்ளன, நடுவில் பெரியதும் மற்றும் அதன் அருகில் இரண்டு சிறியவைகளும் உள்ளன.  அது ஒரு மஸ்ஜித் தான்" என்று சிம்ஹா டிவிட்டரில் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கிருஷ்ணராஜா தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.ஏ.ராமதாஸ், பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மைசூர் அரண்மனை போன்று அந்த பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது." என சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரூந்து நிறுத்தத்தையும் சங்பரிவாரின் மதவெறி விட்டுவைக்கவில்லை!

ஆகஸ்ட் 2022 ல், ஹைதராபாத் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத் என்ற இடத்தில் ஒரு மஸ்ஜிதை நகராட்சி அதிகாரிகள் இடித்ததை அடுத்து போராட்டம் நடத்தப்பட்டது.

டெக்கான் ஹெரால்டு செய்தியின்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நகராட்சி ஊழியர்கள் மத வழிபாட்டு தளத்தை சமன் செய்தனர்.  அதைத் தொடர்ந்து அப்பகுதி முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்ஐஎம் கட்சித் தலைவர் உவைசி தெலுங்கானா முதல்வரிடம் இது தொடர்பாக பேசிய பின் மாநகராட்சி அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்க்காமல், அந்த மஸ்ஜித் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக வந்த ஒரு புகார் மனு மீது எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கை என தெரியவர,  மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்த மஸ்ஜிதை அரசு செலவில் கட்டித்தர முதல்வர் உத்தரவிட்டார்.

-ஹிதாயா 

Comments