ஸ்ரீரங்கபட்டினம் ஜாமியா மஸ்ஜித் விவகாரம்:
நீதிமன்றம் சென்ற பஜ்ரங் தள்!




கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்திலுள்ள   ஜாமியா மஸ்ஜிதை காலி செய்யக் கோரி பஜரங் தளம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்ததன் மூலம் மீண்டும் இந்த விவகாரத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மஸ்ஜித் ஒரு காலத்தில் இந்து கோவிலாக இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

Jamia Masjid

“மாண்டியா மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீரங்கப்பட்டனம் நகரத்தின் ஜாமியா மஸ்ஜிதில் இந்துக் கடவுள்கள் மற்றும் கோயில் அமைப்புகளின் தடயங்கள் உள்ளன.  எனவே, மஸ்ஜிதை உடனடியாக காலி செய்ய வேண்டும், மேலும்,மஸ்ஜித்  வளாகத்தில் அமைந்துள்ள கல்யாணியில் ( நீர்த்தடாகம்) இந்து பக்தர்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பஜ்ரங் தள் தொண்டர்கள் மேலும் மஸ்ஜிதை வாரணாசி கியான்வாபி மஸ்ஜித் போன்று மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  பஜ்ரங்தளத்தின் மாநிலத் தலைவர் மஞ்சுநாத் கடந்த செப் 16 அன்று மனு தாக்கல் செய்ததுள்ளார்.  மஞ்சுநாத் உள்பட 108 அனுமன் பக்தர்கள் மனு அளித்துள்ளனர்.

இந்து பாரம்பரியத்தில் 108 என்ற எண் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, எனவே, 108 பக்தர்கள் வழக்கில் கட்சிகளாக மாறியுள்ளனர் என்று பஜ்ரங்தள் வட்டாரங்களே தெரிவிக்கின்றன.

பஜ்ரங் தள நிர்வாகிகள், மைசூர் கெசட்ஓ, ஜாமியா மஸ்ஜிதில் உள்ள இந்து கட்டிடக்கலை வடிவம், இந்து சிற்பங்களையொத்த கல்வெட்டு, புனித நீர்த்தடாகம் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரங்களாக நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.

முன்னதாக, இந்துத்துவா குழுக்கள் மஸ்ஜிதில் வழிபாடு நடத்த அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்தன.  இந்த விவகாரம் மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
 

ஜாமியா மஸ்ஜிதை இந்துத்வா  செயற்பாட்டாளர்களிடமிருந்து  பாதுகாக்குமாறு மஸ்ஜித் நிர்வாகிகள்  ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நரேந்திர மோடி விசார் மஞ்ச் என்ற அமைப்பு, மஸ்ஜிதை ஆய்வு செய்வதற்காக மனுக்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்முள்ளனர். மேலும் ஹனுமான் கோவிலை இடித்து ஜாமியா மசூதி கட்டப்பட்டது என்று ஆதாரங்களுடன் தங்கள்  உறுதியாக நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மஸ்ஜித்-இ-ஆலா (பெரிய மஸ்ஜித்) என்றும் அழைக்கப்படும் ஜாமியா மஸ்ஜித், ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டைக்குள் அமைந்துள்ளது.  இது திப்பு சுல்தானின் வ ஆட்சியின் போது 1786-87 ல் கட்டப்பட்டது.

ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டை 1454 CE இல் விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளரான திம்மண்ண நாயக்கரால் கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறா்கள். இந்தக் கோட்டை 1495 இல் உடையார்கள், ஆற்காட்டின் நவாப், பேஷ்வாக்கள் மற்றும் மராட்டியர் என அடுத்தடுத்து கைப்பற்றப்பட்டது. கிருஷ்ணராஜ உடையாரின் (1734-66) ஆட்சியின் போது,



 ​​இப்பிராந்திய ராஜ்ஜியம் ஒரு வலுவான இராணுவப் படைகளைக் கொண்டதக மாறியது.அப்போது திப்பு சுல்தானின் தந்தையான இராணுவ ஜெனரல் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டின் கீழ் இப்பகுதி வந்தது.  1782 ல், ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் இப்பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றி கோட்டைகளைக் கட்டினார்.   பிரிட்டிஷ்ஷார்  பலமுறை திப்பு மீது படையெடுத்தனர்.

திப்பு சுல்தான் தனது அரண்மனைக்கு அருகில் 1786-87 ல் ஜாமியா மஸ்ஜிதைக்  கட்டினார்.  மஸ்ஜிதில் மூன்று கல்வெட்டுகள் உள்ளன, அவை .
இறைத்தூதர் முகமது (ஸல்) அவர்களின்  ஒன்பது பெயர்களைக் குறிப்பிடுகின்றன.  இந்த, கல்வெட்டுகள் திப்பு சுல்தான் மசூதியைக் கட்டிய விதத்தையும் விவரிக்கின்றன.  நவீன இந்தியவில்,   பெங்களூரிலுள்ள       இந்திய தொல்லியல் துறையின்  பொறுப்பில்  மஸ்ஜித் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.  மஸ்ஜிதி்ல் ஒரு மதராசா மற்றும் அறைகளுக்கு கன்னிமாடம் (cloister) உள்ளது.

மஸஜித் கட்டப்பட்ட விதம்  குறித்தும் கல்வெட்டுக்கள் விளக்குகின்றன. அதில் எங்கும் ஹனுமன் கோவில். பற்றியோ அது இருந்தது அல்லது இடிக்கப்பட்டது குறித்தோ எந்தக் குறிப்பும் இல்லை. ஆனாலும், ஹனுமன் கோவிலை இடித்துவிட்டுத்தான் மஸ்ஜித் கட்டப்பட்டதாக வரலாறரறுப் புரட்டுகளை பரப்பி வருகிறார்கள் சங்பரிவரத்தினர்.

-ஃபைஸ்

Comments