தண்ணீர் தொட்டிக்கு தீட்டு கழித்த சாதி வெறியர்கள் !
![]() |
Water Tank Purified With Cow Urine By Upper Caste |
கர்நாடகாவில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் இருக்கும ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து ஒரு தலித் பெண் தண்ணீரைக் குடித்துவிட்டார் என்பதற்காக அந்த தொட்டியில் இருந்து குடிநீரை வெளியேற்றிய உயர் சாதி இந்துக்கள், பிறகு தொட்டியை கோமியம் கொண்டு சுத்தப்படுத்தியுள்ளனர்
கிராமத்தில் கடந்த நவ 18ம்தேதி நடந்த ஒரு தலித் தம்பதிகளின் திருமணத்தின் போது இந்த சம்பவம் நடந்தது. திருமண விழாவிற்கு மணமகளின் உறவினர்கள் அந்த கிராமத்திற்கு வந்திருந்தனர். திருமண விருந்துண்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது அதிலிருந்த பெண் ஒருவர் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்துள்ளார்
அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சாதிய இந்து மற்றவர்களை அழைக்க, அவர்கள் அனைவரும் சேர்ந்து தொட்டியில் உள்ள தண்ணீரை அசிங்கப்படுத்தியதற்காக அந்தப் பெண்ணைத் திட்டியுள்ளனர்.
அந்தப் பெண் கிராமத்தை விட்டு வெளியேறிய பிறகு, லிங்காயத் பீடி பகுதியில் வசிப்பவர்கள் தொட்டியின் குழாய்களைத் திறந்து, தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி கோமியம் கொண்டு அதை சுத்தம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதில் ஒருவர் மீது கர்நாடக போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த தலித் இனத்தைச் சேர்ந்த கிரியப்பா என்பவர் அளித்த புகாரின் பேரில் தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக
வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம கணக்கர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து சம்பவத்தை உறுதி செய்தனர். பின்னர் அதிகாரிகள் தஹசில்தாரிடம் அறிக்கை சமர்ப்பித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
அடப்பாவிகளா?
- அபு
Comments
Post a Comment