மக்கள் வரவேற்கும் திட்டம்!


ரேஷன் கடைகள் அனைத்திலும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருப்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். குறிப்பாக இல்லத்தரசிகள் இதனை வரவேற்பார்கள்.

ரேஷன் கடைகளில் மக்களுக்கு சிரமமில்லாமல் அதேசமயம், எளிதாக ரேஷன் பொருட்கள் கிடைக்கவும், திருட்டு, தவறுகள் நடக்காமல் இருக்கவும் அரசின் பொருட்கள் வீணாகாமல் இருக்கவும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது தமிழக அரசு..

அண்மையில்தான் தமிழக அரசு ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடைகளில் குப்பை இருக்க கூடாது. அதேபோல் பொருட்கள் வைத்து இருக்கும் பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும். தரையில் அரிசி, சர்க்கரை இறைந்து இருக்க கூடாது. அதை திரட்டி மக்களுக்கு கொடுக்க கூடாது. சுத்தத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் அரசு உத்தரவிட்டிருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப் பட்டு வந்தது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறியது.

ரேஷன் கடைகளில் கடந்த ஒரு வார பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க தற்போது மக்கள்
ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.இப்போது இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி மக்கள் தங்கள் தங்கள் விழிகளை  காண்பித்தால் அவற்றை  லேசர் கருவிகள் பதிவு செய்து கொள்ளும். இனி கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும்.

இது தொழில்நுட்ப முன்னேற்றம். இதன் மூலம் மக்கள் கியுவில் நிற்கும் நேரம் குறையும்; அலுவல் எளிதாக நடக்கும்: என்பது ஒரு புறமிருந்தாலும் மிக முக்கியமாக இதன்மூலம்   ழ ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னை மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது விரைவில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில்  பணியற்றுவோருக்கு எவ்வளவுதான் அறிவுறுத்தினலும் தண்டனை வழங்கினாலும் ரேஷன் பொருட்களை அவர்கள் திருடுவதை தடுக்கமுடியவில்லை.திருட்டுக்கு தண்டனை தருவதை விட திருட முடியாத நிலையை ஏற்படுத்துவது அறிவுப்பூர்வ நடவடிக்கை ஆகும். கதவை திறந்து போட்டுவிட்டு வீட்டில் திருட்டு  நடந்துவிட்டது என்று புலம்புவதில் என்ன அர்த்தமிருக்க முடியும்? திருட்டு நடப்பதற்கான வாசலை அடைப்பது தான் புத்திசாலித தனமாகும்.அதைத்தான் இப்போது தமிழக அரசு செய்திருக்கறது.

ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாக கூறி பதிவகளை போலியாக பதிந்து  வெளிச்சந்தையில்  விற்கும் பழக்கம் ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டதிலிருந்தே நடந்துரும் குற்றச் செயலாகும். ரேஷன் அரிசி, பருப்பு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விற்கப்படுகன்றன.
முக்கியமாக கேரளா, ஆந்திராவில் அதிக விலைக்கு இந்த பொருட்களை விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த திருட்டு அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. மக்களால் வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் கருவிழி பதிவுகள் திட்டத்தால் இனி மீண்டும் அரசு கிடங்கிற்கே செல்லும்  மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருவது தடுகப்படும்.

சமீபத்தில் கூட அரிசி பற்றாக்குறை புகார் வந்தால், 24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். அரிசி திருடப்பட்டுள்ளதா என்பதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கருவிழி பதிவையடுத்து மக்களுக்கான  ரேஷன் பொருட்கள் மீது அரசின் முத்திரை பதித்தி பார்கோடு பொறிக்கப்பட்டு அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் பார்கோடு   பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்குது - விற்பனை செய்வது குற்றம் என அறிவிக்கவும் தமிழக அரசு தயாராகி் வருகிறது.


ஏற்கெனவே, தமிழக அரசு ரேஷன் கடைகளில் செய்துள்ள மாற்றங்களை சில மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன.. கருவிழி பதிவு திட்டம் மக்கள் வரவேற்கும் திட்டம் மட்டுமல்ல பிற மாநிலங்களும் பின்பற்றத்தக்க திட்டம் தான்!

Comments