அஸ்ஸாம்: பாலிவுட் இயக்குனருக்கு உங்கள் கதையை அனுப்புங்கள்! -போலீஸை போட்டுத் தாக்கிய நீதிமன்றம்


அசாம் மாநிலம்.  நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ராவா காவல் நிலையத்திற்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து முஸ்லிம்களின் வீடுகளை இடித்ததற்காக காவல்துறையை கவுகாத்தி உயர் நீதிமன்றம்  கடுமையாக கண்டித்துள்ளது.

Guwahathi High Court

"விசாரணை என்ற பெயரில் எனது நீதிமன்ற அறையை தோண்டி எடுப்பீர்களா?”எனக் கேட்டிருக்கிறார் நீதிபதி!

நீதிமன்றத்தின் அடியில் ஏதோ இருப்பதாக நீங்கள் சொல்லிக்கொண்டு விசாரணை என்ற பெயரில் என் நீதிமன்ற அறையைத் தோண்டி எடுப்பீர்களா?"

ஜேசிபி மற்றும் புல்டோசர்களைப் பயன்படுத்தி விசாரணை என்ற போர்வையில் வீடுகளை இடிப்பது எந்த குற்றவியல் சட்டத்திலும் அனுமதிக்கப்படவில்லை" என்று தலைமை நீதிபதி ஆர்.எம். சாயா போலீஸை வறுத்தெடுத்துள்ளார்.


மேலும்,  "இந்த நாட்டில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்று தெரிகிறது.

இதுபோன்ற விஷயங்கள் [தண்டனையாக புல்டோசர்] ரோஹித் ஷெட்டி படங்களில் மட்டுமே நடக்கும்.  உங்கள் எஸ்பியின் கதையை இயக்குனர் ரோஹித் ஷெட்டிக்கு அனுப்புங்கள்.

காலனித்துவ ஆட்சியின் போது தண்டனைச் சட்டத்தை உருவாக்கிய பிரிட்டிஷ் அரசியல்வாதி லார்ட் தாமஸ் பாபிங்டன் மெக்காலே கூட, எந்த உத்தரவும் இல்லாமல் காவல்துறை இப்படி செய்யும் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

புல்டோசர்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நடிகர்கள் நோட்டீஸ் அல்லது இடிப்பு உத்தரவுகளை வழங்குவதை பாலிவுட் திரைப்படங்கள் கவனமாகக் காட்டுகின்றன."என்றெல்லாம் காவல்துறையை போட்டுத் தாக்கியுள்ளார் தலைமை நீதிபதி ஆர்.எம்.சாயா.

ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்த ஆண்டு மே மாதம், அசாமில் உள்ள நாகோன் நிர்வாகம், ஷஃபிகுல் இஸ்லாம் என்ற மீன் வியாபாரி காவலில் வைக்கப்பட்ட வழக்கில் அவர் காவல் மரணமடைவதற்கு ஒரு நாள் முன்னதாக மாவட்டத்தில் உள்ள படத்ராபா காவல் நிலையத்திற்கு தீ வைத்ததாக கூறி ஐந்து முஸ்லிம்களின் வீடுகளை இடித்தது.ஷஃபிகுல் இஸ்லாமின் வீட்டையும் மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது. சல்னாபரி பகுதியில் வசிப்பவர்கள், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் சேர்ந்து ஏழு வீடுகளை இடித்ததாகக் கூறினர்.

ஷஃபிக்குல் இஸ்லாம் சிவசாகர் என்ற இடத்திற்கு பேருந்தில் ஏறச் சென்றபோது அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  அவரை விடுவிக்க போலீசார் ரூ.10,000 மற்றும் ஒரு வாத்து லஞ்சம் கேட்டதாக இஸ்லாம் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.  "எங்களால் ஒரு வாத்து மட்டுமே கொடுக்க முடிந்தது, அதனால் அவர்கள் [போலீஸ்] அவரை அடித்துக் கொன்றனர்" என்று இஸ்லாமின் மனைவி கூறியிருந்தார்.


-ஃபைஸ்

Comments