ஆசிரியர் சங்கம் கலைப்பு! அராஜகத்தில் ஜாமியா பல்கலைக்கழகம்!! ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பல்கலைக்கழகம் கடந்த நவ 17ம்தேதி , தற்போதைய ஜாமியா ஆசிரியர் சங்கத்தை (ஜேடிஏ) கலைத்ததுடன், பேராசிரியை சோனியா சுரபி குப்தாவை இடைநீக்கம் செய்துள்ளது. அவர், நிர்வபத்தின் அனுமதியில்லாமல் ஆசிரியர் சங்கத் தேர்தலுக்கு அறிவிப்பு செய்தாரம். கல்வி நிறுவனங்கள் இன்று முழுமையக காவிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. மறுநாள், இப்போது கலைக்கப்பட்ட JTA, இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க பொதுக்குழுக் கூட்டத்தை (GBM) கூடரடியிருந்தது, ஆனால் இப்போது கலைக்கப்பட்ட அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆசிரியர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தின் சுமூகமான செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையில் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, JTA அலுவலகமும் பல்கலைக்கழக நிரவாகத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழல் ஜாமியா நிர்வாகத்திற்கும் பல்கலைக்கழகத்தின் ...