துர்கா தேவி சிலை ஊர்வலம் : முஸ்லிம்களின் வீடுகளை எரித்த ஹிந்துத்துவாவினர் !

துர்கா தேவி சிலை ஊர்வலம் : முஸ்லிம்களின் வீடுகளை எரித்த ஹிந்துத்துவாவினர் ! உத்திரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள, இப்ராஹிம்பூர் கிராமத்தில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது, ஒரு மஸ்ஜித் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஹிந்துத்வா சாமியாரான அஜய்குமார் பிஷ்த் என்கிற யோகி ஆதித்யானந்த் ஆட்சி செய்து வரும் மாநிலத்தில் முஸ்லிம் சமூகம் தினமும் அச்ச சூழலுக்குள் தான் வாழ்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த விஜயதசமி விழாவை முன்னிட்டு, சுல்தான்பூரில் இந்துத்வாவினர் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தை (நம்மூர் விநாயகர் சதுர்த்தி போல) முன்னெடுத்தனர். முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கின்ற இப்ராஹிம்பூர் கிராமம் வழியாக ஊர்வலம் சென்ற இந்துத்வா கும்பல் கைகளில் வாட்கள் மற்றும் கொடூர ஆயுதங்களை ஏந்தி இருந்தது. இப்ராஹிம்பூர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்த கும்பல் அவர்களின் வீடுகளையும் தீக்கிரையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்வா குண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அல்லது குறைந்தபட்சம் வன்முறைத் தாக்குதல்களை கட்...