இன்னொரு மொழிப்போரை நோக்கித் தள்ளும் ஒன்றிய அரசு !
இன்னொரு மொழிப்போரை நோக்கித் தள்ளும் ஒன்றிய அரசு ! " உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழருக்கே ஏன்டா வாசகத்தை எழுதி பதியுங்கள். நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்துகொண்டான் என்பதோடல்லாமல் அவன் நம் எஜமானன் என்றால் இதைவிட நமக்கு மானமற்ற தன்மை - இழிதன்மை வேறு என்ன என சிந்தியுங்கள் " -ஹிந்தியை வலுக்கட்டாயமாக தமிழ் சமுதாயத்தின் மீது திணிக்கப் பட்டபோது மேற்கண்ட வேண்டுகோளை தமிழ் சமூகத்துக்கு விடுத்து 1938ல் குடியரசு இதழில் தலையங்கம் எழுதினர் தந்தைப் பெரியார். "நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்துகொண்டான் என்பதோடல்லாமல் அவன் நம் எஜமானன் என்றால் ..." என்ற பெரியாரின் வார்த்தைகள் இன்று உண்மைபபடுத்தப் படுத்துவதை பார்க்க முடிகிறது. நம் வீட்டு எஜமானர்களாகப் பார்க்கிறார்கள் மோடியும் அமித்ஷாவும். நாம் என்ன செய்ய வேண்டும் ; எதை உண்ண வேண்டும் எதை உடுத்த வேண்டும் என்று தீர்மானிக்க முயற்சித்தவர்கள் இன்று நாம் எதை பேச வேண்டும்; எதை எழுத வேண்டும்; எதை படிக்க வேண்டும் என்பதையும் என நம் மீது அதிகாரம் செல...