தில்லி கலவர வழக்கில் குற்றம்ச்சாட்டப்பட்டவர்கள் விடுதலை !

 தில்லி கலவர வழக்கில் குற்றம்ச்சாட்டப்பட்டவர்கள்  விடுதலை !

2020ல் வடக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரத்தில், ஒரு வீட்டை தீவைத்து அழித்த
குற்றத்தில் கைது செய்யப்பட்டிருந்த 10 பேரை தில்லி நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் விடுதலை செய்திருக்கிறது. இருப்பினும் அவர்கள் கலவரத்திற்கான குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.

பிப்ரவரி 20, 2020 அன்று காலையில் தில்லி மஜ்பூர் பகுதியில் சாலையில் பார்க்கிங்செய்யப்பட்டிருந்த மனுதாரரின் வாகனத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்ட ஓர் வழக்கு
விசாரணையில் இருந்து வந்தது.

தனது தீர்ப்பில் நீதிபதி அமிதாப் ராவத், பொதுச்சாலையில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த மனுதாரரின் வாகனம் கொளுத்தப்பட்டதாக கூறப்படுவதால் வீட்டை அழிக்கும் உள்நோக்கத்துடன் நெருப்பு அல்லது வெடிபொருள் மூலமாகவோ நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. அதனால் கலவரம் செய்த
குற்றத்திற்காக மட்டுமே இந்த வழக்கை சம்மந்தப்பட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை குற்றவாளிக்கு 7 வருடத்திற்கும்
குறைவானது என்பதால் இந்த வழக்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு
மாற்றப்பட்டுள்ளது. “எனவே குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் குற்றத்தைச்
செய்திருக்கிறார்கள் என்று கருத முகாந்திரம் (prima facie) உள்ளது. ஆனால், பிரத்யேகமாக இந்த விசாரணையை செஷன்ஸ் நீதிமன்றத்திற்குள் உட்படுத்த முடியாது” என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி.

தில்லி ஜாஃப்ராபாத் போலீஸ், இந்த கலவரம் தொடர்பாக
முஹம்மது சலீம், மெஹராஜித்தீன், சொஹைப் ஹாஜி இஸ்லாம், அனிஷ் மாலிக், ஆரிஃப் சைஃபி, ஷானு மாலிக், பாப்பி, ஃபுர்கான் மற்றும் முஹம்மது சல்மான் ஆகியோர் மீது வழக்குத் தொடுத்திருந்தது. கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸ்
வழக்கு பதிவு செய்திருந்தது. 2020 வடக்கு தில்லி கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், அரசுத் தரப்பிடம் நீதிமன்றத்தின் முன்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆடியோ வீடியோ வடிவிலான ஆதாரங்களை தங்கள் நேர்மைக்கு எவ்வித சமரசமும் செய்யாமல் உள்ளபடியே உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபைஸ்

Comments