தலித் விரிவுரையாளரை நீக்கிய பல்கலைக்கழகம்!
==============================================

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள மஹாத்மா காந்தி வித்யாபீடத்தின் தலித் கெஸ்ட் விரிவுரையாளராக இருக்கும் மிதிலேஷ் குமார் கவுதம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.. எதற்காக அவர் நீக்கப்பட்டார்? சமூக வலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன் மிதிலேஷ் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். '  நவராத்திரி விரதம் இருப்பதை விட இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ஹிந்து சட்டத்தை ஒன்பது நாட்களுக்கு படித்தால் அடிமைத்தனம் மற்றும் அச்சத்திலிருந்து  (ஹிந்து ) பெண்களின் வாழ்வு விடுதலைப் பெறும்" என்று தனது ஆலோசனையை சொன்னது தான் அந்தப் பதிவு!  நவ்ராத்திரி விழாவை முன்னிட்டு ஹிந்து பெண்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் பொலிடிகல் சயின்ஸ் துறையின் கெஸ்ட் விரிவுரையாளராக இருந்து வருகிறார். அவரது பதிவின் காரணமாக இதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் அவர் பல்கலையின் வளாகத்திற்குள்ளேயே நுழையக் க்கூடாதென்றும் தடை விதிக்கப்பட்டிருக்கிறார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இது மிதிலேஷின் பதிவு குறித்து பல்கலையின் தாளாளரிடத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து அவரை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் பல்கலையின் தாளாளர்.




மிதிலேஷ் தனது சோசியல் மீடியாவில் " நவராத்திரியில் ஒன்பது நாட்கள் விரதமிருப்பதற்கு பதிலாக அந்த ஒன்பது நாட்களுக்கும் பெண்கள் இந்திய அரசியல் சாசன சட்டதையும் ஹிந்து சட்டத்தையும் படித்தால் அடிமைத்தனம் மற்றும் அச்சஉணர்விலிருந்து அவர்களின் அவர்களின் வாழ்க்கை விடுதலை அடையும்.. ஜெய் பீம் " என்பதாக பதிவிட்டிருந்தார். இது தான் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்திற்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டாக்டர். மிதிலேஷ் குமார் கவுதமிற்கு எதிராக கடந்த செப் 29  அன்று ஏ பி வி பி யினர் ஹிந்து மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாக புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். கவுதமி இந்த கருத்தின் காரணமாக பல்கலையின் மாணவர்கள்  மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது .இது  பல்கலையில் சூழல் மற்றும் தேர்வை பாதிக்கும் என்பதால் [பொலிடிகல் சயின்ஸ்  துறையின் கெஸ்ட் விரிவுரையாளராக டாக்டர். மிதிலேஷ் குமார் கவுதமை, பல்கலைக்கழக சட்டம்  14.04- (01)  ன் படி  பல்கலையிலிருந்து அகற்றச் சொல்லி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, அவர் பல்கலைக்குள் நுழைவதும் கூட தடை செய்யப்படுகிறது என பல்கலையின் தாளாளராîன சுனிதா பாண்டே வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்திய நாட்டில் அதன் அரசியலமைப்பை படியுங்கள் என்று குடிமக்களுக்கு அறிவுரை சொல்லுவது தவறா ?



Comments