44 முஸ்லிம் குடும்பங்கள் வீடுகளை காலி செய்ய உ.பி அரசு நோட்டீஸ்

44 முஸ்லிம் குடும்பங்கள் வீடுகளை காலி செய்ய உ.பி அரசு நோட்டீஸ் உ.பி மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் உள்ள பத்ருனா தாலுகாவின் நுதன் ஹர்டோ கிராமத்தில் உள்ள 44 முஸ்லிம் குடும்பங்களை தங்கள் வீடுகளை காலி செய்யும்படி உத்தரபிரதேச அரசு கேட்டுள்ளது. 'ஆக்கிரமிப்பு நிலங்களில்' வீடுகள் கட்டப்பட்டதாக கூறி, நிர்வாகம் அவர்களுக்கு வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முஸ்லிம்களை கிராமத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்த லெக்பால் என்ற உள்ளூர் இந்துத்வா செயல்பாட்டாளர் சில வீடுகளையும் சேதப்படுத்தியதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். தனது மளிகைக் கடை சேதப்படுத்தப்பட்டதாக முகமது சபீர் அலி சித்திக் என்பவர் , இந்தியா டுமாரோ இணையதள ஊடகத்திடம் கூறியுள்ளார். “நான் ஒரு வேலையாக வெளியே சென்றிருந்தேன். திரும்பி வந்தபோது, எனது கடை சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டேன். சுவர் இடிக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. லெக்பால் மற்றும் அவரது ஆட்கள் கடையை சூறையாடி பொருட்களை கொள்ளையடித்ததாக என்னிடம் கூறப்பட்டது. " எனத் தெரிவித்துள்ளார். லெக்பால் ஆசப் அலியின் வீட...