கடந்த கால தவறுகளை களைய வேண்டிய காங்கிரஸ்!
கடந்த கால தவறுகளை களைய வேண்டிய காங்கிரஸ்!
குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச சட்டசபை தேர்தல்களில்- தேர்தலு
க்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
அந்த கருத்துக் கணிப்புகளில் குஜராத்தில் பாஜக அமோக வெற்றி்பெறும் என்று ரிபப்ளிக் டிவி, நியூஸ் எக்ஸ், இந்தியா டுடே , என்டிடிவி உள்ளிட் ட ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் தெரிவித்துள்ளன
அதே சமயம், இமாசலப் பிரதேசம் காங்கிரஸ் கட்சிக்குத்தான் என
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
குஜராத்தில் பாஜக மாபெரும் வெற்றிபெறும் என்று எல்லா கருத்துக்கணிப்புகளும் கூறியுள்ள நிலையில் காவி வட்டாரம் 7 வது முறையாக குஜராத்தில் பஜக ஆட்சிக்கு வரும் குக்ஷியில் இருக்கிறது.
குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 2012 தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்த தொகுதிகளிலிருந்து, காங்கிரஸ் 16 தொகுதிகளை வென்றெடுத்திருந்தது... ஆனால், 2017 தேர்தலுக்கு பிறகு, திடீர் சறுக்கல் காங்கிரஸில் ஏற்பட்டது. இதற்கு காரணம், 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அப்போது பாஜகவுக்கு தாவியிருந்ததுதான்..
கடந்த தேர்தலிலும், பாஜக இங்கு வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசுக்கும் இக்கட்சிக்கும் இடையே வெறும் 10 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் இருந்தது.. அதனால்தானோ என்னவோ, இந்த முறை குஜராத்தில் தேர்தல் என்றதுமே, இரண்டு கட்சிகளின் மேலிட தலைவர்கள் சற்று கூடுதலாகவே கவனம் செலுத்தினார்கள்.
பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த தொகுதி என்பதால் இந்த முறை தேர்தலில் எதிர்பார்ப்புகள் கூடிவிட்டன.. 6 முறை குஜராத்தை ஆக்கிரமித்து கொண்ட பாஜக, 7வது முறையும் அரியணை ஏறுவதற்கான ஆசையை வளர்த்து கொண்டுள்ளது.. அதற்கான முயற்சியையும் கையில் எடுத்தது.. அதிரடி அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள், மற்றும் பிரச்சாரங்கள் என 3 வகைகளில் தங்கள் வியூகங்களை படரவிட்டனர்.. முக்கியமாக பிரதமர் மோடி, கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில்தான், அதிக அளவுக்கு இங்கேயே முகாமிட்டிருந்தார்.
குஜராத்தில் படிதார் மற்றும் அதன் உட்பிரிவான படேல் சமூகம் முழுமையாக பாஜகவின் வாக்குவங்கிகளாக உள்ளன.இந்த சமூகங்கள் ஏறக்குறைய 60 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கக் கூடியவர்களாய் உள்ளனர். இது பாஜகவின் வெற்றி வாய்ப்புக்கு முக்கிய காரணம்.
ஆனால் இங்கை காங்கிரஸ் 30-50 தொகுதிகளைப் பிடிக்கும. என்றும் கடந்த முறை பிஜேபியிடமிருந்து கைபற்றிய 16 தொகுதிகளை அது இழக்கும் என்றும் கணிப்புகள் சொல்கின்றன.
68 தொகுதிகள் கொண்ட இமாசல பிரதேச மாநிலத்தில் காங் வெற்றி பெறும் ஆனாலும் ஆளும் பாஜக டஃப் கொடுக்கும் என இந்தியா டுடேயின் கருத்து கணிப்பு கூறுகிறது.
பாஜகவுக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்தக் கட்சி 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை என வாக்குறுதிகளை அளித்துள்ளது.
ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் பாஜகவும், பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இரண்டு கட்சகளும் இங்கே வெறித்தனத்தோடு பிரச்சாரம் செய்தன.
68 தொகுதிகளைக் கொண்ட இமாசலத்தில் 35 இடங்கள் ஆட்சியமைக்க போதும் என்ற நிலையில்,மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 30-40-ல் வெற்றி பெறும் என்கிறது இந்தியா டுடே.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குஜராத்தில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாத நிலையில் இமாசலத்தில் ஒர்க் அவுட் ஆகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி பொதுவாக நாடு முழுவதும் பலவீனமாகவே உள்ளது. அதன் கடந்த கால தவறுகள் சரி செய்யப்பட வேண்டும். நாட்டின் பெரும்பான்மை
மக்களில் பெரும்பான்மையினர் இந்துத்வா ஆதரவாளர்கள் அல்ல அவர்கள் நாட்டின் பன்முகத்தன்மை, அமைதி, நாட்டின் வளர்ச்சியை நம்பக்கூடியவர்கள்.மதக்கலவரங்கள், வகுப்புப்பதட்டங்கள், வன்முறை அரசியலை விரும்பாதவர்கள். இவர்கள் எல்லாக் கட்சிகளிலும் சிதறிக்கிடக்கிறார்கள். அதனால் இந்துத்வா வெறியை மட்டுமே பரப்புரை செய்து பிஜேபி வெற்றி பெறுகிறது. பிஜேபி தான் இந்துக்களுக்கு பாதுகாப்பான கட்சி என பாஜக அவர்களை நம்ப வைத்தலும் அந்த கருத்தை உடைக்க வேண்டிய வியூகம் தெரியமல் திணறுகிறது காங்கிரஸ்.அதனால சில வேளை பாஜகவின் பாதையில் கூட அது பயணிக்கிறுது. இதனால் காங் இரட்டை வேடம் போடுவதாம இந்து பெருமக்கள் நம்பும் நிலையும் ஏற்படுகிறது.
தேர்தல் காலங்களில் சில மாநிலங்களில் வலுவாக உள்ள பிராந்திய கட்சிகளிடம் சீட் பேரத்தின் போது தான் பெரிய கட்சி என்ற சிந்தனையை ஒதுக்கி விட்டு வெற்றி வாய்ப்புள்ள தொகுதாகளாக தேர்வு செய்து களமிறங்க வேண்டும். சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, பொது எதிரியான பாஜகாவை வீழ்த்தும் வியூகத்தோடு 2024 பொதுத்தேர்தலை அது எதிர்கொள்ள வேண்டும்.
கடந்த கால தவறுகளிலிருந்து காங்கிரஸ் படிப்பினை பெற்றால் மக்கள் அதை ஆட்சியில் அமர்த்துவார்கள்.இந்தியா இந்துத்வா தேசமாக மாறாமல் மதச்சார்பற்ற தேசமாக தொடர்ந்து இருக்கும் என்பதை பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் தான் உறுதிப்படுத்த வேண்டும்!
Comments
Post a Comment