முஸ்லிம் வியாபாரிகளைத் தடுக்கும் இந்துத்வா ஆதரவு தரும் அரசு!
முஸ்லிம் வியாபாரிகளைத் தடுக்கும் இந்துத்வா
ஆதரவு தரும் அரசு!
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில், கோவிலுக்கு அருகில் கடை வைத்திருந்த முஸ்லீம் வியாபாரி, இந்துத்துவா குழுவைச் சேர்ந்தவர்களால் வெளியேற்றப்பட்டிருக்குறார்.
மாநிலத்தில் முஸ்லிம் வணிகர்களைக் குறிவைக்கும் இந்துத்துவா குழுக்களின் இத்தகைய போக்கு தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.
சமீபத்திய சம்பவமாக, குடகு மாவட்டம் பொன்னம்பேட்டையில் உள்ள ஹரிஹர சுப்ரமணிய கோவிலில் கடந்த நவம்பர் 29 செவ்வாய்கிழமை அன்று நடந்தது.
கல்லூரி விரிவுரையாளரும், இந்துத்துவா குழுவான துர்கா வாஹினியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அம்பிகா என்பவர், முஸ்லிம் வியாபாரிகளிடம், கோவிலுக்கு அருகில் நீங்கள் வியாபாரம் செய்ய அனுமதியில்லை என்று கூறியுள்ளார்.
“இங்கு வந்து வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டையை மறைக்க வேண்டிய அவசியம் அவருக்கு (முஸ்லிம் வியாபாரிக்கு) இல்லை. தங்களுடைய உண்மையான அடையாள அட்டையைக் காட்டி இங்கு வந்திருக்கலாம். இந்துக்களைத் தவிர வேறு யாரையும் இங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் கூறியபோதிலும், அவர்கள் போலி அடையாள அட்டை மூலம் இங்கு வியாபாரம் செய்கிறார்கள், ”என்று அம்பிகா ஒரு முஸ்லீம் வியாபாரி கோவில் பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவதைக் காட்டும் ஒரு வீடியோவில் பேசுகிறார்.
குடகு பகதியில் முஸ்லிம் வணிகர்களை இப்படி ஒதுக்கி வைப்பது, கர்நாடகாவில் இந்துத்துவா குழுக்கள் கோவில்களில் முஸ்லீம் வணிகங்களைப் புறக்கணிக்கும் ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த மாத தொடக்கத்தில், பெங்களூருவில் உள்ள வி.வி.புரத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த திருவிழாகால கண்காட்சியின் போது முஸ்லிம் வர்த்தகர்களை புறக்கணிக்க இந்துத்துவா குழுக்கள் அழைப்பு விடுத்திருந்தன. விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி- பெங்களூரு மாநகராட்சி) கமிஷனர் துஷார் கிரி நாத் மற்றும் தெற்கு பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் பி கிருஷ்ணகாந்த் ஆகியோரிடம் முஸ்லீம் வியாபாரிகளை தடை செய்யக் கோரி மனு அளித்துள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைக்கு பெங்களூருவில் உள்ள தெருவோர வியாபாரிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. "தெரு வியாபாரிகள் கடின உழைப்பால் ஒன்றிணைக்கப்படுகிறார்கள், அவர்களின் சாதி மற்றும் மதத்தால் அல்ல. அவர்கள் அரசாங்கத்திடம் பிச்சை எடுத்து தங்கள் வாழ்க்கையை வாழவில்லை, மாறாக வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தின் வியாபரிகளைத் தடை செய்ய மதத்தை தவறாகப் பயன்படுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது. இது அவர்களின் உரிமைகளுக்கு எதிரானது" என்று கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அரசாங்கத்தின் மௌனம் அவர்களின் நிலைப்பாடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதைக் குறிக்கிறது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை தெருவோர வியாபாரிகள் மத்தியில் அச்சமான சூழ்நிலையை உருவாக்கும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
Muslim shops being closed in the subramanya temple premises |
கடந்த மார்ச் 2022 இல், இந்துத்துவா குழுக்கள் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள முல்கியில் உள்ள பப்பநாடு கோவில் கண்காட்சியில் இருந்து முஸ்லிம் வியாபாரிகளை வெளியேற்றியது, இது, கடலோர கர்நாடகம் முழுவதும் கோவில் திருவிழாக்களை குறிவைத்தது நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
பாப்பாநாட்டில் உள்ள துர்காபரமேஸ்வரி கோவிலுக்கு 800 ஆண்டுகளுக்கும் மேலான சமகால வரலாறு உள்ளது. கோவிலின் வளாகத்தில் நிறுவப்பட்ட ஒரு பலகை, இது "நவீன சமய நல்லிணக்கத்திற்கான சாட்சி" என்று விவரிக்கிறது. "ஒரு முஸ்லீம் வணிகரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக் கோயிலில், இன்று முஸ்லிம்கள் பிரசாதத்தை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கும் நடைமுறை அரிதாக உள்ளது " என்று அந்த பலகை மேலும் கூறுகிறது. அதேபோன்று, காவுப் மாரியம்மா திருவிழாவில் அதிக அளவில் பங்கேற்ற முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
-அபு
Comments
Post a Comment