யூடியூப் சேனல்களை நம்பும் புல்டோசர் பாபா!


"புல்டோசர் பாபா நே தியா ஐசா ஜவாப் தோ பில்பிலா உதா விபக்ஷ்" என்ற தலைப்பில் ஒரு யூடியூப் வீடியோவில்-புல்டோசர் பாபாவின் பதில்கள் எதிர்க்கட்சிகளை உலுக்கியது-குறித்த செய்தி. பாபா அதில் சோர்வாக காணப்பட்டார்.  அந்த சோர்வு புரிந்துக்கொள்ளக்கூடியதாய் இருந்தது. இந்த வீடியோ பிப்ரவரி 22 அன்று வெளியிடப்பட்டது, மேலும் அஜய் சிங் பிஷ்ட் என்ற யோகி உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக தனது பதவியைத் தக்கவைக்க கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக பிரச்சாரம் செய்து வந்தார்.  முஸ்லீம் வீடுகளை அவரது அரசாங்கம் இடிப்பதை மேற்பார்வையிட்டதற்காக பிஷ்ட் "புல்டோசர் பாபா" என்ற பெருமையைப் பெற்றார்.  அடுத்த நாள், உலகின் மிகப் பெரிய மாகாணத் தேர்தல்களில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு, அறிவிப்பு முதல் முடிவுகள் வரை மூன்று மாத கால மாரத்தான் ஓட்டம்.  அப்போது பாரதீய ஜனதா கட்சியின் மாநில பிரச்சாரத்தின் தனி முகமான பிஷ்ட் மிகவும் பிஸியான கால அட்டவணையைக் கொண்டிருந்தார்.


நாட்டின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்கள் பிரத்தியேக நேர்காணல்களுக்காக அவரை சூழ்ந்தன. எல்லாவற்றுக்கும் அவர் ஒப்புக்கொள்ள வில்லை சில சேனல்களே வெற்றிபெற்றன.

  ஒரு பெரிய ஆங்கில தொலைக்காட்சி சேனலின்  உத்தரபிரதேச தேர்தலுக்கான முதன்மை


நிருபர் ஒருவர், மூன்று மாதங்களுக்கும் மேலாக முயற்சி செய்தும், முதல்வருடன் ஒரு பத்து நிமிடம் கூட பேச முடியவில்லை என்று சக ஊடகவியலாளர்களிடம் அங்கலாய்தார்.  அதற்குப் பதிலாக 'கபர் இந்தியா ' என்ற யூடியூப் சேனலுக்கு யோகியின் ஒரு நேர்காணல் சென்றது, அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் முதல் வீடியோவை-மோட்டார் பைக்கிற்கான விற்பனைத் தளத்தை- பதிவேற்றியிருந்தனர்.  இந்த நேர்காணல்களின் வரம்பை குறைத்து மதிப்பிடுவது எளிது.  புல்டோசர் பாபா நேர்காணல் யூடியூப்பில் கிட்டத்தட்ட கால் மில்லியன் பார்வைகளையும், பேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் பார்வைகளையும் பெற்றது.  பிஷ்ட் விரைவில் பல யூடியூபர்களுக்கு பேட்டி அளித்தார். ராஜதர்மா என்ற யூ டியூப் சேனல் யோகியின் நேர்காணல் , 'இந்தத் தேர்தலை மாற்றும் 3 கேள்விகள்' என்ற தலைப்பில் ஒரு நேர்காணலைப் பதிவேற்றியது, அதே நேரத்தில் ஹெட்லைன்ஸ் இந்தியா 'குற்றவாளிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் யோகி ஆதித்யநாத்தின் நெருப்புப்   பேட்டி' என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பதிவேற்றியது.

  தி ராஜ்தர்மா மற்றும் ஹெட்லைன்ஸ் இந்தியா ஆகிய இரு சேனல்களின் நேர்காணல்களும் யூடியூப்பில் ஒவ்வொன்றும் அரை மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றன.

இந்த YouTube சேனல்கள், பிரதான ஊடகச் சேனல்கள் பொறாமைப்படக்கூடிய  வகையில் தளங்களில் தங்கள் உள்ளடக்கத்தை மிக வேகத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கின்றன.

மேலும் பெரும்பாலும் விசுவாசமான பார்வையாளர்களை இவை கொண்டிருக்கின்றன.  ரிபப்ளிக் டிவியின் நிறுவனரும், பிரபல நட்சத்திர ஆங்கருமான அர்னாப் கோஸ்வாமியின் முதலமைச்சர் யோகியுடனான நேர்காணல் யூடியூப்பில் நான்கு லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.
ஆனால் முதலமைச்சருடன் யூடியூபர்கள் நடத்திய அந்த நேர்காணல்கள் அவரது சொந்த PR (Public Relations)குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டவை" என்று இதே போன்ற உள்ளடக்கத்தை வெளியிடும் 'ஓ நியூஸ் ஹிந்தி' என்ற சேனலின் யூடியூபரான ரிஷப் அவஸ்தி  கூறுகிறார்.  அவருக்குவாய்ப்பு கிடைக்கவில்லையே என்றும்  வருத்தப்படுகிறார்.

பெரிய மீடியாக்களை விட யூடியூப் சேனல்கள் விரைவாக, பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் செய்தியை கொண்டுபோய் சேர்கின்றன என்பதை யோகி தெரிந்து வைத்திருக்கிறார்.

மணிக்கணக்கில் யூடியூப்  சேனல்களில் பெரும் பாலும் மூழ்கிக் கிடக்கும் நடுத்தர சமூகம்  தான் யோகியின் இலக்காக இருந்து வருகிறது. தமிழகத்தில் கூட  சீமான் போன்ற அரசியல் தலைவர்களின்  பேச்சுக்கள்,  நேர்காணல்கள் , செய்தியளர் சந்திப்புகள் பெரும்பாலும் யூடியூப் சேனல்களில் தான் வெளிவருகின்றன். பெரிய சேனல்கள், தேசிய ஏடுகள் போன்றவை சீமான் போன்றவர்களை  விட்டு விலகியே இருக்கின்றன அல்லது அவரது செய்தகளை தவிர்க்கின்றன் அந்த இடத்தைத்தான் யூடியூப் சேனல்கள் ஆக்கிரமித்திருக்கின்றன.

-ஃபைஸ்


Comments