பயங்கரவாதியாக பார்க்கப்பட்ட இந்திய முஸ்லிம் பெண்ணை பிரதிநிதித்துவ சபைக்கு தேர்வு செய்த அமெரிக்கர்கள்!
பயங்கரவாதியாக பார்க்கப்பட்ட இந்திய முஸ்லிம் பெண்ணை பிரதிநிதித்துவ சபைக்கு தேர்வு செய்த அமெரிக்கர்கள்!
23
வயதான இந்திய-அமெரிக்க முஸ்லீம் பெண்ணான நபீலா சையத், இல்லினாய்ஸ்
பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராகி அமெரிக்க மக்களை ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளார்.
சபையின் மிக இளவயது உறுப்பினராக இருக்கிறார் நபீலா!
இந்திய-அமெரிக்க
ஜனநாயவாதியான நபீலா, குடியரசுக் கட்சி வேட்பாளர் கிறிஸ் போஸை தோற்கடித்து,
அமெரிக்க இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
நபீலா, இல்லினாய்ஸ்
பலாடைன் பகுதியைச் சேர்ந்தவர். பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா
பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் (Political Science) மற்றும்
வணிகத்தில் இரட்டைப் பட்டம் பெற்றவர்.
நபீலா, தனது சமூகத்தில்
உள்ள இளம் முஸ்லீம் பெண்கள அதிகாரம் பெறுவதற்கான தலைமைப் பொறுப்புகளை
ஏற்கும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியும் இல்லினாய்ஸ் வடமேற்கு
புறநகரின் இஸ்லாமிய
சமூகத்தில் மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவித்தும் வருபவர்.
அரசியலில் அவருக்கு ஏற்பட்ட திடீர் ஆர்வம் மற்றும் அமெரிக்காவில் ஒரு
முஸ்லீமாக அவரது வாழ்க்கையைப் பற்றி இந்தியாவின் இணையதள ஊடகம் ஒன்றிற்கு
பேட்டியளித்துள்ளார்.
?அரசியலில் சேர உங்களைத் தூண்டியது எது?
! 2016 ஆம் ஆண்டு என்னை ஊக்கப்படுத்தியது, மிகவும் வெறுக்கத்தக்க ஒரு நபர்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆவதைப் நாங்கள் பார்த்தோம். டொனால்ட் ட்ரம்ப்
ஆட்சிக்கு வருவதைப் பார்த்தோம், அவர் பிரித்தாளும் வார்த்தைப் பிரயோகம்,
கடுமையான வார்த்தைப் பிரயோகம், அவர் வைத்திருந்த மற்றும் தொடர்ந்து
கொண்டிருக்கும் மோசமான நம்பிக்கைகள் மற்றும் அவர் ஆட்சிக்கு வருவதைப்
பார்த்து, ஒரு நாடாக நாம் எங்கு செல்கிறோம் என்பதைப் பற்றி எனக்கு மிகவும்
வருத்தமாக இருந்தது. அப்போதுதான் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று
முடிவு செய்தேன். என்னைப் போல ஒருவர், இந்தியர், முஸ்லீம் மற்றும்
இளைஞர்கள், அமெரிக்காவில் அரசியல் வெளியில் ஈடுபட வேண்டும். என்னைப்
பொறுத்த வரையில் நான் அரசியல் பக்கம் திரும்பியதற்கு அதுவும் ஒரு பெரிய
காரணம்.
? பிரச்சாரத்தை நடத்தும்போது எது மாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்?
! பொதுவாக, பிரச்சாரம் செய்வது மிகவும் கடினமான விஷயம் என்று நான்
நினைக்கிறேன். குறிப்பாக, குடியரசுக் கட்சியின் மாவட்டத்தை ஜனநாயகக்
கட்சியாக மாற்றினோம். இம்மாவட்டம் குடியரசு கட்சியின் வசமிருந்த்தது.
இங்கு ஒரு ஜனநாயகக் கட்சியின் வெற்றி வேட்பாளர் பெறுவார் என்று மக்கள்
எதிர்பார்க்கவில்லை, ஆனால் நல்வாய்ப்பாக எங்களால் அதைச் சாத்தியமாக்க
முடிந்தது.
? ஹிஜாப் அணிந்த இளம் பெண் தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் பார்த்தபோது என்ன எதிர்வினை ஏற்பட்டது?
! பொதுவாக, மக்கள் மிகவும் அன்பாகவும் உற்சாகமாகவும் இருந்தனர். என்னைப்
போன்ற இளம் வயதுபெண்ணை தங்கள் வீட்டு வாசலில் பார்ப்பதில் அவர்கள்
உற்சாகமடைந்தனர். மேலும் யாரோ ஒரு இளம்பெண் தங்கள் ஆதரவைக் கேட்பதையும்,
அவர்களின் முக்கிய பிரச்சனைகள் பற்றி கேட்பதையும் அவர்கள் நம்பிக்கையும்
மகிழ்ச்சியும் அடைந்தனர். எனவே நான் அவர்களின் வீட்டு வாசலில் நின்றபோது
பலர் உற்சாகமாக இருப்பதைப் பார்ப்பது எனக்கு நிறைவாக இருந்தது. நீங்கள்
பதவிக்கு போட்டியிடும் போது, மக்களிடம் பேசுவதும் உரையாடல்களில்
ஈடுபடுவதும், அவர்களுக்கு எது முக்கியம் என்று அவர்களிடம் கேட்பதும்
மிகவும் முக்கியம் என்பதை மக்களுக்கும் நமக்கும் மீண்டும் மீண்டும்
நினைவூட்டுகிறது என்று நினைக்கிறேன். எனவே அதைச் செய்வதன் மூலம தொடர்ந்து
மக்களைச் சென்றடைவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
? நீங்கள் அமெரிக்காவில் வளர்ந்த போது, நீங்கள் ஒரு முஸ்லீம் என்ற பாகுபாட்டை அனுபவித்தீர்களா?
!ஆம். நான் அப்படித்தான் நினைக்கிறேன், நகைச்சுவையாகவோ அல்லது
தீவிரமாகவோ நான் பயங்கரவாதி என்று அழைக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. மேலும்
இது மிகவும் புண்படுத்தும், குறிப்பாக நல்லதைச் செய்யவேண்டும் என
நம்புகின்ற- சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒரு இளம்வயதினராக இருப்பதில்
மக்கள் உங்களைத் தீயவராக அல்லது கெட்ட எண்ணங்களைக் கொண்டவர்களாக
ஆக்கிவிடுவார்கள். எனக்கும், சில சமயங்களில் அப்படி எனக்கும் ஏற்படுவது
வருத்தமாக இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவில் வளர்ந்து வரும்
நான், பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பையும் பெற்ற அதிர்ஷ்டசாலியாக நான்
இருந்து இருக்கிறேன் என்றுதான் கூறுவேன்.
அதுதான் இந்த நாட்டின்
அழகு என்று நான் நினைக்கிறேன், இது தேர்வு ஜனநாயகம் உள்ளது என்பதைக்
காட்டும் ஒரு வழியாகும். பார்க்க மிகவும் அருமையாக உள்ளது.
நான்
உங்களுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டுமானால், ஒரு முறை நான்
வாக்ஷிங்டன் டிசியில் இருந்தேன். நான் அங்கு பயிற்சிக்காக சென்று
இருந்தேன். அப்போது ஒருவர் என் மீது துப்பியது ஒரு பயங்கரமான அனுபவம்.
எச்சில் என் மீது படவில்லை, ஆனால் அந்த நபர் என் மீது துப்ப முயன்றார்.
அவர்கள் துப்பினால் என்னை அடிக்க முயற்சிப்பது போல. எனவே, அந்த
நிகழ்வுகள், டிரம்ப் ஜனாதிபதியான பிறகு உருவான வெறுப்பை இயல்பாக்கும்போது
என்ன நடக்கும் என்பதை நான் உணர்கிறேன். எனக்கு சரியாக நினைவில்
இருந்தால், அது டிரம்ப் தொப்பி அணிந்த ஒரு நபர், அவர் டிரம்ப் தொப்பியை
அணிந்திருந்தார் என்று நான் தான் நினைக்கிறேன். அவர் இருந்தாரா என்பது கூட
எனக்குத் தெரியாது. நான் அதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை, பின்னர் அது
தவறாக இருக்கும். ஆனால் என் மீது வெறுப்பை உணர்ந்த ஒருவர் என் மீது துப்ப
முயன்றார், அது எனக்கு வருத்தமாக இருந்தது.
?உலக முஸ்லிம் பெண்களின்
தற்போதைய நிலை குறித்து உங்கள் கருத்து என்ன? குறிப்பாக, பிரான்சில்
ஹிஜாப் தடை செய்யப்பட்டிருப்பது, இந்தியாவில் ஹிஜாப் குறித்த சர்ச்சை
பற்றி?
! நான் சொல்ல விரும்பும் மிக முக்கியமான விஷயம்
என்னவென்றால், ஹிஜாப் ஒரு தேர்வு தான். பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டுமா
அல்லது ஹிஜாப் அணியக்கூடாதா என்ற தேர்வு பெண்ணுக்கு உள்ளது. அந்தத் தேர்வு
பறிக்கப்படக் கூடாது.
? 9/11 பயங்கரவாத தாக்குதல் அமெரிக்காவிலும்
எல்லா இடங்களிலும் வாழும் முஸ்லிம்களின் பிம்பத்தில் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தியது. ஒரு குழந்தையாக அது உங்களை பாதித்ததா?
! ஆம், 9/11
நடந்தபோது எனக்கு இரண்டு வயது. 9/11க்குப் பிந்தைய உலகில் நான்
வளர்ந்தேன், அங்கு நிறைய பேர் பயத்தையும் சிலர் மதவெறியையும் எதிர்வினையாக
வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. . சில சமயங்களில், மக்கள் எல்லா
முஸ்லீம்களையும் மிகவும் வெறுக்கத்தக்கவர்களாக ஆக்கியது போலவும், நம்
அனைவரையும் பயங்கரவாதிகளாகப் பொதுமைப்படுத்தியது போலவும் நான் உணர்ந்தேன்.
நான் நேசிக்கன்ற, நான் அக்கறை கொண்ட என் சமூகம், எனக்குத் தெரிந்தவர்கள்,
என் சமூகத்தில் எனக்குத் தெரிந்த-மற்றவர்களுக்கு உதவுவதில் அக்கறை கொண்ட
என் சமூகதின் முஸ்லிம்கள் முதலானவர்களைப் பார்க்க எனக்கு கஷ்டமாக
இருந்தது.
அவர்கள் நன்கொடை மற்றும் தொண்டு கொடுப்பதில் அக்கறை
காட்டுகிறவர்கள். அவர்கள் நல்ல மனிதர்கள். மேலும் இஸ்லாமிய நம்பிக்கையில்
பலர் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தீங்கு விளைவிக்க காரணமான ஒரு
சிலரும் உள்ளனர், இதனால் ஒட்டுமொத்த சமூக்க் குழுவும் மோசமாக உள்ளது என்று
அனைவரும் கருதுகிறார்கள்.
இது அனைத்து வெவ்வேறு சமூகங்களிலும்
இருப்பதைக் காண்கிறோம். வெவ்வேறு சிறுபான்மை குழுக்களிடம் இதைத்தான்
பார்க்கிறீர்கள். இந்த வகையான வெறுக்கத்தக்க செயல்கள் நிறுத்தப்பட
வேண்டும். இது வன்முறைக்கு வழிவகுக்கும்!
? இந்தியாவின் மத சுதந்திர நிலை குறித்து ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?
! எனக்கு சரியாகத் தெரியாத விஷயங்களைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
? நீங்கள் எப்போதாவது ஹைதராபாத் சென்றிருக்கிறீர்களா?
! ஆம், நான் சிறுவயதில் சில முறை சென்று வந்தேன். சமீபத்தில் இல்லை.
நான் ஹைதராபாத் சென்ற போது எனக்கு பன்னிரெண்டு வயது இருக்கலாம் என்று
நினைக்கிறேன்.
-சஹர் ஹிபா கான் (மக்தூப் மீடியா இணையதள இதழ்)
தமிழில்: அபு ஃபைஸல்.
Comments
Post a Comment