இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இஸலாமிய வெறுப்பு!

 இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும்  இஸலாமிய வெறுப்பு!


கடந்த வாரம் கர்நாடகாவில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் ஒரு முஸ்லீம் மாணவர் தனது ஆசிரியரை எதிர்கொள்ளும் வீடியோ வைரலானபோது, ​​அது 21 வயதான ஹம்ஸா சித்திக் மனதில் விரும்பத்தகாத நினைவைத் தூண்டியுள்ளது..


யார் இந்த ஹம்ஸா சித்திக்?


உ.பி மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் சித்திக்.சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய அந்த மணிப்பால் பல்கலைக் கழக சம்பவத்தின் வீடியோவில், ஒரு இளம் பொறியியல் மாணவர் தனது மத அடையாளத்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசுவது வேடிக்கையானது அல்ல என்று தனது ஆசிரியரை திட்டுகிறார்.  2008ல் மும்பையைத் தாக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி அஜம்ல் கசாப்புடன் தனது முஸ்லிம் மாணவனை ஆசிரியர் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

மீரட் இளைஞர்.!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் உச்சக்கட்டத்தில், 2019ல் மீரட்டில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை அடுத்து, சித்திக் இதேபோன்ற அதிர்ச்சிகரமான அனுபவத்தை 2019ல் சந்தித்தார்.  முதன்முறையாக இந்திய குடியுரிமைச் சட்டத்தில் மதக் கூறுகளை அறிமுகப்படுத்திய சட்டம், நாடு முழுவதும் போராட்டங்களைத் தூண்டியது.

போராட்டம்,வன்முறை, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தி சித்திக்கின் வகுப்பறையை எட்டியதும், சித்திக் தனது ஆசிரியர் தன் மீது திரும்பியதை நினைவு கூர்கிறார்.  “இவர்கள் [முஸ்லிம்களைக் குறிப்பிட்டு)] எந்தச் சட்டத்தையும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்’ என்று என் ஆசிரியர் கூறினார்,” என்று   ஸ்குரல்.இன் இணதள செய்தி ஊடக்திடம்  சித்திக் கூறியுள்ளார். மேலும்,   "அப்போது அவர் என்னைப் பார்த்து, ‘உனக்குக் கல் எறியத் தெரியும்’ என்றார்.  எனது மற்ற வகுப்பு தோழர்கள், அவர்களில் பலர் எனது நண்பர்கள், எதுவும் நடக்காதது போல் சிரித்தனர்." என்றும் கூறியுள்ளார் சித்திக்!

சித்திக்கைப் போலவே, பல இளம் முஸ்லிம்கள் மணிப்பால் பல்கலைக்கழக மாணவரின் அனுபவத்துடன் தொடர்புபடுத்தும் சம்பவங்களை தாங்களும் எதிர்கெண்டதாக  கூறுகிறார்கள்.  இந்திய சமூகம் மற்றும் அரசியலில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தின் பின்னணியில், இவர்கள் வகுப்பறைக்குள் சகாக்களிடமிருந்தும், அதைவிட தொந்தரவாக ஆசிரியர்களிடமிருந்தும் வெறுப்பை எதிர்கொள்கின்றனர்.

பாகிஸ்தானியர்கள் மற்றும் பயங்கரவாதிகள்!

மணிப்பால் சம்பவம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவைச் சேர்ந்த கல்லூரி மாணவியான 21 வயதான ஹசீனா பானு, வகுப்பில் இஸ்லாமோபோபிக் கருத்துகளை தனது ஆசிரியரிடமிருந்து எதிர்கொண்டார்.  பானுவின் கூற்றுப்படி, நவம்பர் 21 அன்று, அவரது வரலாற்று ஆசிரியர், டெல்லியில் நடந்த வன்முறைக் கொலை வழக்கை எடுத்துப்பேசியுள்ளார், அதில் முக்கிய சந்தேக நபர் ஒரு முஸ்லீம் ஆவார்.


"இந்த முஸ்லீம்களுக்கு கருணை உணர்வு இல்லை. ஒரு இந்துவைக் கொன்றால் ஒரு ஹஜ் யாத்திரைக்கான வெகுமதி கிடைக்கும் என்றும், இரண்டு இந்துவைக் கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.  அவர்களிடமிருந்து இந்துக்கள் விலகி இருக்க வேண்டும்" என்று இந்து மாணவர்களைக் கேட்டுக்கொண்ட ஆசிரியர்.  "அவர்கள்( இந்திய முஸ்லிம்கள்) பாகிஸ்தானியர்கள் மற்றும் பயங்கரவாதிகள்.  இந்துக்கள் எறும்பை கொன்ற பிறகும்   வேதனை அடைகிறார்கள்." என்று கூறியதாக ஹசீனா பானு தெரிவித்துள்ளார்.

இந்த இஸ்லாமோஃபோபியாவை தாங்கிக் கொள்ள முடியாத பானு  ஆசிரியரை எதிர்கொண்டார்.  "அப்படிப்பட்ட கருத்துக்களை நீங்கள் எப்படி கூற முடியும்?"  என்று ஆசிரியரிம் பானு கேட்க,  .
  "இது குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது" என தனது அறியாமையை வெளிப்படுத்தயுள்ளார் அந்த ஆசிரியர் என்கிறது Scroll.in.

தில்லி மாணவர் ஹசன்!
 

  24 வயது ஹசன், ஒரு இதழியல் துறை மாணவர். தில்லியில் உள்ள தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனில் தனது ஆசிரியரிடமிருந்து  இஸ்லாம் குறித்த தப்பெண்ணத்தை எதிர்கொண்ட அனுபவங்களை நினைவு கூர்கிறார்.  2020 ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் ஊடக சித்தரிப்பு அல்லது பெரும்பான்மைவாதத்தை ஆதரிப்பதில் அதன் பங்கை ஆராய்ந்து அவர் முன்வைத்த ஆராய்ச்சி தலைப்புகள் நிராகரிக்கப்பட்டதாக கூறுகிறார்.  இதற்கு இஸ்லாமிய வெறுப்பு தான் காரணம் என்றும் ஹசன் குற்றம் சாட்டுகிறார்.


" இது போன்ற  சொல்வன்மை மற்றும் உங்கள் சமூகத்தின்    அற்பமான சிந்தனையிலிருந்து நீங்கள் வெளியே வர வேண்டும்," என்று அவரது ஆசிரியர் ஹசனிடம் கூறியதோடு,  ஹசன்  எங்கே  பட்டம் பெற்றார் என்றும் கேட்டிருக்கிறார் அந்தப்  பேராசிரியை.  " ஜாமியா மில்லியாவில்" என்று ஹசன் பதில சொன்னபோது- அந்தப் பேராசிரியை, "இந்த மனநிலை எங்கிருந்து வருகிறது என்று இப்போது எனக்குப் புரிகிறது" என்று
கூறியுள்ளார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா சிறுபான்மை நிறுவன அந்தஸ்துடன் டெல்லியில் அமைந்துள்ள ஒரு பிரபல மத்திய பல்கலைக்கழகம் ஆகும்.

ஹிந்துத்வா பிடியில் சிக்கியுள்ள கல்வி நிறுவனம்!

பின்னர், மற்றொரு சந்தர்ப்பத்தில், ஹசன்,  இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள வலதுசாரி ஊடகங்களை ஒப்பிட்டு ஒரு ஆராய்ச்சி தலைப்பை முன்வைத்தபோது, ​​அதே  பேராசிரியை தனது மாணவனைத் தாக்க இஸ்லாமிய வெறுப்பை விதைத்திருக்கிறார்.


"  சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கததிற்கு எதிராக போராட்டங்கள் நடந்த அதே தெருக்களிலிருந்து, களத்திலிருந்து இந்தப் பிரச்சாரங்கள்  வருகிறதா, என்று  CAA எதிர்ப்பு இயக்கத்தைப் பற்றி குறிப்பிட்டு பேசினார என  Scroll.in க்கு விவரித்திருக்கிறார் ஹசன்.

அந்த நேரத்தில் இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் , அது அவரது கல்வியை பாதிக்கும்  . என்று பயந்து அமைதி காத்திருகரகிறார் ஹசன். அது அவரை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் சேரும் மனநிலையை ஏற்படுத்தியது.  “இந்து வலதுசாரிகளின் பிடியில் சிக்கிய கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறியது ஒரு பெரிய நிம்மதி” என்கிறார் ஹசன்.


பிராந்திய பரவல்!

இந்தியா முழுவதும் வகுப்பறையில் இஸ்லாமோஃபோபியாவின் பிரச்சனை வளர்ந்தாலும், சில பகுதிகள் மற்றவர்களை விட மோசமாக இருந்தன.

46 வயதான ஹபீசா ஷேக், மும்பையில் வளர்ந்து, நகரத்தில் உள்ள கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் ஒரு பள்ளியில் படித்தவர். "அங்கு தான் எந்தவிதமான வகுப்புவாத விரோதத்தையும் எதிர்கொள்ளவில்லை.  இருப்பினும், இது எனது  மகளின் காலத்தில் மாறியது." என்கிறார்

திருமணமான பிறகு ஹஃபீசா ஷேக் உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள-தேசிய தலைநகரின் புறநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியான கிரேட்டர் நொய்டாவுக்கு குடிபெயர்ந்தார்.  2016 ஆம் ஆண்டில், அவரது மகள் 5 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்த ஒரு விரும்பத்தகாத அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
  "சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்பு, ஒரு வகுப்பு தோழன் எனது மகளுக்கு  சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளான். ஏன் என்று அவள் கேட்டதற்கு, 'அது பாகிஸ்தானின் சுதந்திர தினம் என்பதால்' என்று அவன் சொல்லியிருக்கிறான்.  என் மகள் வீட்டிற்கு வந்தபோது, ​​தான் இந்தியராக இருக்கும்போது, பாகிஸ்தானுடன் ஏன் தொடர்பு படுத்துகிறார்கள் என்று எங்களிடம் கேட்டாள்."என்று தெரிவித்துள்ளார்.

இது ஷேக்கை தனது மகளின் ஆசிரியரிடம் எடுத்துச் சொல்லத் தூண்டியது, அந்த ஆசிரியரோ அந்த சிறுவனின் பெற்றோரிடம் விஷயத்தை எடுத்துக் சொல்லியிருக்கிறார்.  பிரச்சினை தீர்க்கப்பட்டது, அதன் பின்னர் அவர்களின் பள்ளியில் இது போன்ற  சம்பவங்கள் நிகழ்வதில்லை," என்று  கூறும் ஷேக்,

"மகாராஷ்டிராவில் தனது குழந்தைப் பருவத்துடன் ஒப்பிடும்போது வட இந்தியாவில் வகுப்புவாத வெறுப்பு விகிதாச்சாரத்தில் அதிகமாக இருக்கிறது. எனக்கு 1992 மும்பை கலவரம் நினைவிருக்கிறது, ஆனால் நாங்கள் எந்த வன்முறையையும் நேரடியாக எதிர்கொள்ளவில்லை, ஏனென்றால் நாங்கள் சிந்தி, முஸ்லீம், கிரிஸ்துவர் என்ற கலப்பு சமூகப் பகுதியில் வாழ்ந்தோம்," என்கிறார்.

அலஹாபாத்தும் கொல்கொத்தாவும்!

இதேபோன்ற அனுபவத்தை உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரி மாணவிநான  நூர் மஹ்விஷ் பகிர்ந்து கொள்கிறார்.  மஹ்விஷ் கொல்கத்தாவில் பள்ளிக்கல்வியை முடித்திருக்கிறார். அங்கு அவர் எந்த இஸ்லாமிய வெறுப்பையும் எதிர்கொள்ளவில்லை.  இருப்பினும், அவர் 2019 ல் அலகாபாத்தில் சட்டக் கல்வி படிக்கத் தொடங்கியபோது நிலைமை மாறியது.  “எனது சட்டக் கல்லூரியின் முதல் ஆண்டில், இந்து திருமணச் சட்டம் மற்றும் முஸ்லீம் தனிநபர் சட்டம் குறித்த வகுப்பின் போது, ​​முத்தலாக் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தை  அரக்கத்தனமாக சித்தரித்ததால் எனது ஆசிரியையை எதிர்கொண்டேன். "அவர் [ஆசிரியர்] இந்து மற்றும் முஸ்லீம் தனியார் சட்டங்களைப் பற்றி பேசுவதற்கு 'ஹம் லாக் வெர்சஸ் வோ லாக்' (நாம் எதிர் அவர்கள் )வாரத்தையை பயன்படுத்தினார்." என்கிறார்.

பெருகும் வெறுப்பு!


2017 ஆம் ஆண்டு வெளியான 'மதரிங் எ முஸ்லீம்'. (ஒரு முஸ்லிம் தாய்) புத்தகத்தின் ஆசிரியர் நாஜியா இரம் கூறுகையில், இந்தியாவில் முஸ்லீம்கள் மீதான தப்பெண்ணம் எப்போதும் இருந்து வருகிறது, ஆனால் அதன் தொனியும் தீவிரமும் மாறிவிட்டது, குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில்!.

வகுப்பறையில் முந்தைய கலந்துரையாடல்கள் பெரும்பாலும் தீங்கற்ற மற்றும் அரிதாக இருக்கும்.  இப்போது அவை அடிக்கடி நிகழ்கின்றன, மேலும் அவை நகைச்சுவைக்கு பதிலாக விரோதத்தை முன்வைக்கின்றன.  இஸ்லாமிய வெறுப்பு இப்போது எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை இது காட்டுகிறது" என்கிறார் இரம்.

மேலும், இரம் தனது புத்தகத்திற்காக 12 மாநிலங்களில் உள்ள முஸ்லிம் மாணவர்களிடம் பேசியதில். அவர்களில் 80% பேர் பள்ளியில் தங்கள் மத அடையாளத்தின் அடிப்படையில் துன்பறுத்தலை சந்தித்ததாக கூறியுள்ளனர்.

பொதுவெளியை ஆக்கிரமிக்கும் மத வெறுப்பு!

நாட்டில் உள்ள பரந்த காலநிலை வகுப்பறையை விஷமாக்குவதற்கு காரணம் என குற்றம் சாட்டும் இரம், "வகுப்பறைகளில் நாம் காணும் வெறுப்பு, நமது தலைவர்களின் உரைகளில் அல்லது நமது தொலைக்காட்சியில் ஒவ்வொரு இரவும் செய்தி' விவாதங்களில் ஒளிபரப்பப்படும் வெறுப்பின் நீட்சியாகும்.
இது, இறுதியில் அனைத்து சமூகங்களின் குழந்தைகளையும் பாதிக்கும்.

குழந்தைகளின் இத்தகைய மனநிலைக்கு  பொறுப்பு. கல்வியை போதிக்கின்ற  ஆசிரியர்களே பிரச்சனையின் ஒரு பகுதியாக மாறும் போது, ​​ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பிரச்சாரம் பொதுவெளியில்  எவ் வளவு தூரம் ஆழமாக வேரூன்றுகிறது என்பதைக் காட்டுகிறது."
என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் இரம்.

- அபு
நன்றி: Scroll.in

Comments