இது அநாகரிக செயல்!



கர்நாடக மாநிலத்திலுள்ள   மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவனை 'தீவிரவாதி' எனக் கூறிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கையை கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ளது.

மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேராசிரியரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாகவும், அதன் முடிவில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மணிப்பால் பல்கலைக்கழகத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.அங்கு ஒரு வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் சமூகம் சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு முஸ்லிம் மாணவனைப் பார்த்து நீ ஒரு தீவிரவாதி எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கொந்தளிக்கும்  அந்த மாணவன், "எப்படி நீங்கள் என்னை தீவிரவாதி எனக் கூறலாம்? நீங்கள் ஒரு பேராசிரியர். அனைவரின் முன்னிலையிலும் நீங்கள் என்னை தீவிரவாதி எனக் கூறுகிறீர்கள். ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு, தினம் தினம் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை எதிர்கொள்வது வேடிக்கையான விஷயம் அல்ல" எனக் கேட்க.  அந்த பேராசிரியரோ, "நீ எனது மகன் போல.." மழுப்புகிறார்.

விடாத அந்த மாணவன் "உங்கள் மகனிடம் இப்படிதான் பேசுவீர்களா? உங்கள் மகனை நீங்கள் தீவிரவாதி எனக் கூப்பிடுவீர்களா? அப்படி கூப்பிட்டால் அதுவும் தவறுதான். இது வகுப்பறை. நீங்கள் பாடம் கற்பிக்கிறீர்கள். நீங்கள் என்னை தீவிரவாதி என கூப்பிட்டிருக்க கூடாது" என்கிறார் காட்டமாக!?, இருவருக்குமிடைலான இந்த வாதப்பிரதிவாதங் களை  மற்றொரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட, கொஞ்ச நேரத்திலேயே அந்த வீடியோ  வைரலானது.  இது சர்ச்சை ஆனதால் இதனை  உணர்ந்த மணிப்பால் பல்கலைக்கழக நிர்வாகம், சம்பந்தப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இப்படி கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவர்கள், குறிப்பாக தாடி வைத்த  முஸ்லிம் மாணவர்கள் தீவிரவாதிகள் போன்ற கண்ணோட்டத்தோடு  நடத்தப்படும் சம்பவங்கள் நாட்டின் பல இடங்களில் நடந்து வருகிறது.

முஸ்லிம் இளைஞர்களை சந்தேகத்தின் பேரிலோ அல்லது விசாரணை என்ற பேரிலோ அழைத்துச் செல்லும் காவல்துறை உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் அவர்களை பயங்கரவாதிகளாகவே நினைத்து விசாரணை மேற்கொள்கின்றன.

பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் தீவிரவாதியின் தோற்றம் குறித்து படம் வரையச் சொல்லும் போது ஒரு மாணவன் தாடி, தொப்பி வைத்த நபரை வரைந்து ஆசிரியரிடம் காட்டியதாகவும் அந்த சம்பவம் குறித்து தனக்கு அதிரச்சியாக இருந்ததாகவும் இது குறித்து அறிவுரை கூறி இன்னொரு பள்ளி விழாவில் பேசியதாகவும்  தேசிய விருது பெற்ற தமிழ்திரைத்துறையின் இயக்குநர் ஒருவர் பகிர்ந்து கொண்டது நாட்டில்  முஸ்லிம் சமூகம் தீவிரவாத கண்ணோட்டத்தோடு பார்கப்படும் தீவிரத்தை உணர்த்துகிறது.

  மத்தியி்ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமிய வெறுப்பு நாட்டில் அதிகரித்துள்ளது. பிஜேபி தலைவர்கள்,ஏனைய சங்பரிவார அமைப்புகள் திட்டமிட்டே இஸ்லாமிய வெறுப்பை பரப்பி வருகின்றனர். இஸ்லாமிய மதரஸாக்கள்  பயங்கரவாதத்தை போதிக்கின்றன; தீவிரவாதிகளை உருவாக்குகின்றன என பிஜேபி தலைவர்கள் பகிரங்கமாக பொதுவெளியில் பேசி வருகிறாரகள்.இவர்கள் கண்டிக்கப் படுவதுமி்ல்லை ; தண்டிக்கப்படுவதுமில்லை.மாறாக, கட்சித் தலைமையால் கவுரவிக்கப் படுகிறர்கள் அவர்களின் இஸ்லமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் ஊக்கப்படுத்தப் படுகின்றன.

இந்துத்வா சாதுக்கள், பூசாரிகள் இந்தியவெங்கும முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைப் பேச்சுக்களைப பேசி வருகிறார்கள்.அவை அவர்களாலேயே சமூக வலைதளங்களில் பதிவேற்றப் படுகின்றன; பகிரப்பட்டு வைரலாக்கப் படுகின்றன.இவை பொதுமக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்த வெறுப்புணர்வை வளர்க்கின்றன.

இந்துத்துவா அமைப்புகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் யாரும் இந்து தீவிரவாதம் என்று சொல்வதில்லை. மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் அதிகாரப்பூர்வ அரசங்க கணககுபடி இந்துக்கள் தான் அவர்கள் குண்டுவெடிப்பு தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவர்கள் இந்து தீவிரவாதிகள் என்று சொல்லப்படுவதில்லை நக்ஸல்கள், மாவோயிஸ்டுகள் என்ற அடையாளத்தோடே அழைக்கப்படுகின்றன. உல்ஃபா தீவிரவாதிகள், போடோலேன்ட், அஸ்ஸாம் தீவிரவாதிகளும்  கூட இப்படித்தான் அழைக்கப்படுகிறார்கள்

ஆனால் முஸ்லிம்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக செய்தி வரும்போது அது இஸ்லாமிய பயங் கரவாதமாக, முஸ்லிம் தீவிரமாக அடையாளப்படுத்தப் படுகின்றன. இந்திய மீடியாக்கள் இந்த மோசமான போக்கை பெரும்பாலும் கடைபிடிக்கின்றன. செய்திகளிலும் பிரைம் டைம் நிகழ்சிகளிலும் கூச்சமில்லாமல் முஸ்லிம் தீவிரவாதி இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தைகளையே பயன்படுத்துகின்றன.

உச்சநீதி்மன்றத்தின் முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்சு ஒருமுறை, பள்ளிக்கூட மாணவன் தாடி வைத்தது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்கும் போது' "தாலிபானிஸத்தை இந்தியவில் ஏற்க முடியாது" என்று இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தார்

சமீபத்தில்கூட குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒன்றிய உள்துறை அமைசரசர் அமித்ஷா முஸ்லிம்கள் குறித்து சமூக விரோதிகள் என குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு சமூகம் குறித்து வெறுப்பை விதைப்பது அநாகரிக நடத்தை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்!

Comments