தனி நபர் மசோதா மூலம்
அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கும் ஒன்றிய அரசு!
பொது
சிவில் சட்டத்தை தயாரிப்பதற்கான குழுவை அமைக்க வகை செய்யும்
சர்ச்சைக்குரிய தனி நபர் மசோதாவை கடந்த டிச 9 ம் தேதி மாநிலங்களவையில்
தாக்கல் செய்திருக்கிறது ஒன்றிய அரசு.
எதிர்கட்சிகளின் கடும்
எதிர்ப்புக்கு மத்தியில், இந்தியாவில் பொது சிவில் சட்ட மசோதா 2020’
மாநிலங்கள் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அரசியல் சாசனத்திற்கு
எதிரானதாகும்.
பிஜேபி எம்பி கிரோடி லால் மீனா,பொது சிவில்
சட்டத்தைத் தயாரிப்பதற்கும், இந்தியா முழுவதும் அதைச் செயல்படுத்துவதற்கும், தனி நபர் மசோதா செயல்பாட்டின் போது அதோடு தொடர்புடைய
விஷயங்களுக்காகவும் தேசிய ஆய்வு மற்றும் விசாரணைக் குழுவை அமைப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த அனுமதி கோரினார்.
இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகம் (எம்டிஎம்கே), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சமாஜ்வாதி
(எஸ்பி), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), சிபிஐ (மார்க்சிஸ்ட்), தேசியவாத
காங்கிரஸ் (என்சிபி) மற்றும் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளின்
உறுப்பினர்கள்
இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்புத்
தெரிவித்தது, அது நிறைவேற்றப்பட்டால், அது நாட்டில் நிலவும் சமூகக்
கட்டமைப்பையும் வேற்றுமையில் ஒற்றுமையையும்
அழித்துவிடும்என்று கூறினர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவை
வாபஸ் பெறக் கோரிய நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர்
வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான
தீர்மானத்மிற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் பெற்று
நிறைவேற்றப்பட்டது.
கடந்த காலங்களில், இந்த மசோதா அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்டிருந்தாலும், மாநிலங்கள் அவைக்கு இந்த மசோதா
நகர்த்தப்படவில்லை.
மதத்தை கருத்தில் கொள்ளாமல் அனைத்து குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளைப்
பாதுகாப்பதற்கான சட்டங்களின் தொகுப்பை இந்த மசோதா கூறுகிறது என்றாலும்
இந்தியா போன்ற பனமுகத்தன்மை மற்றும் பல கலாச்சாரங்கள், ஆயிரக்கணக்காண சமுக
வழக்கங்களைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இது மக்களால் விரும்பி
பின்பற்றத்தக்கதாக இருக்காது.மதச்சார்பின்மையை இது அழித்துவிடும்.
அமைச்சர அல்லாத பாராளுமன்ற உறுப்பினர் தனி நபர் மசோதா அல்லது தனியார் உறுப்பினர் மசோதாவின் உறுப்பினராக கருதப்படுவார்.
மாநிலங்கள்
அவையில் நிறைவேற்றப் பட்டிருக்கும் இந்த மசோதா பொது சிவில்
சட்டத்தைமட்டுமல்ல; அரசியலமைப்பின் முகப்புரையில் திருத்தம்
செய்வதற்கான ஒன்றிய அரசின் சூழ்ச்சியின் ஒரு வடிவமாகும் இது.
அரசியலமைப்பின்
முகப்புரையில் Socialist, Secular and Integrity.( சோஷலிஸம்,
மதச்சார்பின்மை மற்றும் (தேசிய) ஒருமைப்பாடு) என்று குறிப்பிடப்பட்டுள்ளதை
நீக்க இந்த மசோதா வழிவகுக்கும். இந்தியாவின் பனமுக கலாச்சாரத்திற்கு
பெருமையாக, மணிமகுடமாக அரசமைப்புச சட்டத்தில்
அமைந்துள்ள இந்த
வார்த்தைகளை நீக குவதன் மூலம் இந்தியாவை இந்துதேசமாக மாற்ற முடியும் என
ஆர.எஸ்எஸ் மற்று பிஜபி உறுதியாக நம்புகிறது் அதனால்தான் ஜனநாயக மாண்புகளை
குலைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பயன்படுத்தி
எதிர்கட்சிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தான் விரும்பியதைச் செய்ய
நினைக்கிறது பிஜேபி!
இந்த மசோதா முகவுரையில் உள்ள
'சம அந்தஸ்து மற்றும் சம வாய்ப்பு, பிறக்க, உணவளிக்க, கல்வி, வேலை பெற
மற்றும் கண்ணியத்துடன் நடத்தப்பட'.முதலான வார்த்தைகளை மாற்ற முயல்கிறது.
அரசியலமைப்பின்
ஒரு பகுதியாக, அரசியலமைப்பின் பிரிவு 368 இன் கீழ் முகவுரையை திருத்தலாம்,
ஆனால் முகவுரையின் அடிப்படை அமைப்பை திருத்த முடியாது.
கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம் வழக்கில் 1973 இல் உச்சநீதிமன்றத்தீர்ப்
தற்போதைய நிலையில் 42வது திருத்தச் சட்டம் 1976 மூலம் முகவுரை ஒருமுறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.
அந்த திருத்தத்தின் போது
சோசலிஸம், மதச்சார்பின்மை மற்றும் ஒருமைப்பாடு( Socialist, Secular And Integrity) ஆகிய மூன்று புதிய வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டது.
Comments
Post a Comment