ரிஷியை வாழ்த்துவோம்.
ரிஷியை வாழ்த்துவோம்.
பிரிட்டன் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சசி தரூர்
உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகலை தொடர்ந்து பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதலிடத்தில் இருந்தார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்டும் போட்டியிட இருந்தனர்.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு 100க்கும் குறைவாக இருந்த காரணத்தால் போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மார்டாண்ட் ஆகியோர் அடுத்தடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ரிஷி சுனக் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
![]() |
Rishi Sunak |
பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக்கிற்கு நம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "ரிஷி சுனக்கிற்கு அன்பான வாழ்த்துக்கள்! நீங்கள் பிரிட்டன் பிரதமராக வரும்போது, சர்வதேச பிரச்சனைகளில் நெருக்கமாக பணியாற்றலாம் என்றும், இலக்கு 2030ஐ செயல்படுத்தலாம் எனவும் எதிர்நோக்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். கொஞ்சம் தயக்கத்துடனேயே இதனை மோடி தெரிவித்ததாகவே தோண்றுகிறது. ஏனெனில், பெரும்பாண்மைவாதம் பேசி வரும் ஆர்எஸ்எஸ் ஸின் பிரதமர் மோடி பல சமயங்களில், தேர்தல் பிரச்சாரக் களங்களில் காங்கிரஸ் தலைவி சோனியாவை இத்தாலியைச் சேர்ந்தவர், வெளிநாட்டுப் பெண்மணி இந்தியாவில் பிரதமராகலாமா என்றெல்லாம் நாட்டுமக்கள் மத்தியில் பெரும்பாண்மை அரசியல் அநாகரிகத்தை விதைத்தவர். இன்று ரிஷியை வாழ்த்துவது எந்த அடிப்படையில்?
இந்திய வம்சாவளியை ச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ் அமெரிக்காவின் துணை
ஜனாதிபதி ஆகலாம்..அதில் மோடி பெருமைப் படுவாராம்..ரிஷி பிரிட்டன்
பிரதமரானால் அதில் கர்வம் கொள்வாராம் சோனியாவை மட்டும் ஏற்றுக்கொள்ளமாட்டாராம்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், "முதலில் கமலா ஹாரிஸ். இன்று ரிஷி சுனக். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்கள் தங்கள் நாடுகளின் பெரும்பான்மை இல்லாத குடிமக்களை அரவணைத்து அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இது இந்தியா மற்றும் பெரும்பான்மைவாத கட்சிகளும் கற்க வேண்டிய பாடம்." என்று 'நச்'செனப் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் மக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவரை லண்டன் மேயராக
ஆக்குகிறார்கள்..இந்தியா மற்றும் பாக் வம்சாவளியை அமைச்சராக
ஆக்குகிறார்கள். இந்தியாவில் இதை நினைத்துப் பார்க்க முடியுமா?
சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை மிகவும் சக்தி வாய்ந்த இடத்தில் அமர்த்தி
பிரிட்டன் மக்கள் சர்வதேச அளவில் அரிய காரியத்தை செய்து இருக்கிறார்கள்.
இந்தியாவின் பெரும்பாண்மைவாதம் பேசுபவர்களுக்கு இது பாடம்
Comments
Post a Comment