லவ் ஜிகாத் வழக்கு போட்ட குஜராத் போலீஸ் -சாட்டையடி தீர்ப்பு தந்த நீதிமன்றம்.
லவ் ஜிகாத் வழக்கு போட்ட குஜராத் போலீஸ்
-சாட்டையடி தீர்ப்பு தந்த நீதிமன்றம்.
மதமாற்றம் செய்யும் நோக்கில் இந்து பெண்களுக்கு ஆசை காட்டி முஸ்லிம் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதாக தொடர்ந்நு இந்துத்வாவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதனை லவ் ஜிஹாத் என சித்தரிக்கும் அவர்கள் வளர்ந்து வரும் இந்த போக்கை’ கட்டுப்படுத்த வேண்டும் என பிஜேபி ஆளும் மாநிலங்களில் மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் மத மாற்றத் தடை சட்டங்கள் மற்றும் லவ் ஜிஹாத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றி வைத்துள்ளன.
இந்த வகையில் குஜரத்தை ஆளும் பாஜக அரசு கடந்த பிப்ரவரி 2021 ல் திருமணம் அல்லது "லவ் ஜிஹாத்" மூலம் வலுக்கட்டாயமான அல்லது மோசடியான மத மாற்றத்தை தண்டிக்க முற்படும் மதச் சுதந்திரச் சட்டம், 2003 திருத்த மசோதாவை குஜராத் சட்டசபையில் நிறைவேற்றியது இந்த திருத்த சட்டம் தான் லவ் ஜிஹாத் தடைச் சட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்த சட்டத்தின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ₹5 லட்சம் வரை அபராதமும் விதிக்க மசோதாவில் வழிவகைகள் உள்ளன.
குஜராத் மாநில பிஜேபி அரசு கொண்டு வந்த 'லவ் ஜிகாதிற்கு எதிரான இந்த சட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் இளைஞர் , அவரது பெற்றோர் மற்றும் மதகுரு ஆகியோருக்கு எதிராக குஜராத் காவல்துறை தாக்கல் செய்த எஃப்ஐஆரை -
,கணவன்-மனைவி இருவரும் தங்களுக்குள் இந்த விவகாரத்தை "இணக்கமாக" தீர்த்துக் கொண்ட பிறகு,
குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
அவரகள் மீதான மேற்கொண்டு நடவடிக்கை தேவையற்றது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிபதி நிரல் ஆர். மேத்தா, "...இந்த நீதிமன்றமானது, குற்றவியல் நடவடிக்கையை மேலும் தொடர்வது, குற்றம்சாட்டப்பட்ட தரப்பினருக்கு தேவையற்ற துன்புறுத்தலைத் தவிர வேறில்லை என்றும், அதன் மீதான விசாரணை பயனற்றதாகவும் மேலும் தொடரும் என்றும் கருதுகிறது. இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதாக இருக்கும்" என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாக லைவ் லா என்ற சட்ட இணையதளம் கூறுகிறது.அந்த பெண் (பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்) முன்பு தனது கணவர், அவரது பெற்றோர் மற்றும் மத குரு மேல் குற்றம் சாட்டியிருந்தார். இவர்கள் திருமணத்தின் மூலம் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக குற்றம் சுமத்தியிருந்தார் என போலீஸ் எஃப்ஐஆரில் கூறியிருந்தது.
அவர்கள் அனைவரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A, 376(2) (n), 377, 312, 313, 504, 506(2), 323, 419, மற்றும் 120B மற்றும் பிரிவுகள் 4, 4(A), 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். (A), 4(2)(A), 4(2)(B) மற்றும் 5 குஜராத் மத சுதந்திர (திருத்த) சட்டம், 2021 மற்றும் பிரிவுகள் 3(1)(r)(s), 3(2) (5), 3(2)(5-a), 3(1)(w)(1)(2) பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
அதன்பிறகு, அந்த பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவரும் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். ஏனெனில் இந்த விவகாரம் இருதரப்பினரிடையே சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது, எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட எப்ஐஆருக்குப் பின் தொடரும் நடவடிக்கைகள் தரப்பினருக்கு குறிப்பிடத்தக்க வகையில் சிரமத்தை உருவாக்கும். என அதில். அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
குறிப்பிடத்தக்க வகையில், பெண் (பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும்) உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில், குஜராத் காவல்துறை தாங்களாகவே லவ்-ஜிஹாத் கோணத்தைக் கொண்டு வந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது, மேலும் அதில் மிகவும் தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள், குறிப்பாக வலுக்கட்டாய மதமாற்றக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், சாதாரண திருமண தகராறு குறித்து புகாரளிக்க வதோதராவில் உள்ள உள்ளூர் காவல் நிலையத்தை அணுகியதாகவும் இருப்பினும், காவல்துறை தாங்களாகவே, இந்த வழக்கில் "லவ் ஜிஹாத்" கோணத்தை கொண்டு வந்ததாகவும், தான் சொல்லாதவைகளை எஃப்.ஐ.ஆரில் புகார்களாக போலீசாரே சேர்த்ததாகவும் கூறியுள்ளார்.
...சில மதவாத அரசியல் குழுக்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, லவ் ஜிஹாத் கோணத்தைக் கொண்டுவந்தனத. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் அதீத ஆர்வத்தின் காரணமாகவும், தகவல் அளிப்பவர் குறிப்பிடாத அல்லது குற்றஞ்சாட்டப்படாதவற்றை எஃப்.ஐ.ஆர். இல் சேர்த்து இந்தப் பிரச்சினையை வகுப்புவாதமாக்கினர். ," என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது என்று குஜராத் அரசு வாதிட்டு வழக்கை ரத்து செய்ய எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும், அந்தப் பெண் தாக்கல் செய்திருந்த விவரங்களுக்குச் செல்லாமல், நீதிமன்றம் பின்வருவனவற்றைக் கவனித்து FIR ஐ ரத்து செய்ய முடிவு செய்தது:
"...மனுதாரர் எண்.1 மற்றும் பிரதிவாதி எண்.2 முறையே கணவன் மற்றும் மனைவி என்பதையும், மீதமுள்ள மனுதாரர்கள் மனுதாரர் எண்.1 இன் உறவினர்கள் என்பதையும் கருத்தில் கொண்டு, திருமண தகராறுகளின் காரணமாக, குற்றஞ்சாட்டப்பட்ட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, ஆனால், பின்னர், அந்தந்த குடும்ப உறுப்பினர்களின் மத்தியஸ்தத்துடன், தரப்பினருக்கு இடையே ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டு, அவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள். அவர்களுக்கெதிரான குற்றவியல் நடவடிக்கைகள் அவர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும், எனவே, இந்த நீதிமன்றம் தீர்வை ஏற்க விரும்புகிறது."
கெட்ட எண்ணத்துடன் புகாரைப் பதிவு செய்த குஜராத் காவல்துறைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சாட்டையடி தான்!
-ஃபைஸல்
Comments
Post a Comment