கர்நாடக வரலாற்றில் உருவான வகுப்புவாத அரசியல்!


 கர்நாடக வரலாற்றில் உருவான வகுப்புவாத அரசியல்!

மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் ஒரு புதிய  வகுப்புவாத வன்முறை சூரல் உருவாகி வருவதாகத் தெரிகிறது.

கடந்த அக் 30ம் தேதி, கர்நாடகாவின் ஷிவமோக்கா நகரில் மூன்று முஸ்லீம்களைத்  தாக்கி மிரட்டியதற்காக 10-15 அடையாளம் தெரியாத நபர்கள் மீது தொட்டபேட் காவல் நிலையம் எஃப்ஐஆர் (0417/2022) பதிவு செய்தது.  அவர்களில் ஒருவர் காய்கறி வியாபாரி.  அப்பகுதியில் வியாபாரம் செய்யக்கூடாது என அவர் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.  அடுத்த நாள், அதே காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் (0418/2022) இன் படி, ஒரு இந்து இளைஞர் மூன்று முஸ்லீம்களால் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Miller Committee Report


பிப்ரவரியில், பஜ்ரங் தள் தொழிலாளி ஹர்ஷா கொலை செய்யப்பட்டதை அடுத்து மாவட்டம் கொதிநிலைக்கு வந்தது.  பின்னர், சாவர்க்கரின் புகைப்படத்தை சேதப்படுத்தியதால் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

NewsClick என்கிற இணையதள ஊடகம் இப்பகுதியின் வரலாறு மற்றும் வகுப்புவாத வன்முறையின் பாதை குறித்து கர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் சிவசுந்தரை நேர்காணல் செய்திருந்தது.  நேர்காணலில் இருந்து ஒரு பகுதி இங்கே...

? கர்நாடகாவில் வகுப்புவாத உணர்வு எவ்வளவிற்கு தலை தூக்கியுள்ளது?

! கன்னட தேசியவாதத்தின் தோற்றம் எப்போதும் ஒரு திலகர் (பால கங்காதர திலக்) மின்னோட்டத்தைக் கொண்டிருந்தது. ஒரு சமூக நீதி இயக்கமாக உருவெடுத்த தமிழ் தேசியம் போலல்லாமல், கன்னட தேசியவாதம் இந்து நாகரிகத்திலும் இந்துத்துவத்திலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது.  ஆனால் அது இப்பகுதியில் முஸ்லிம்களின் இருப்புக்கு எதிரான இயக்கமாக வெளிப்படையாக வெளிப்படுத்தப்படவில்லை.

Shiv Sunder

கன்னடர்களின் பெருமையாகக் கருதப்பட்ட விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி, பஹ்மனி படைகளால் ஏற்பட்டது.  நாடா தேவி (கர்நாடகாவின் பெண் தெய்வம்) புவனேஸ்வரி போன்ற பிற சின்னங்கள் இந்து பிராமணீயமானவை.  மஞ்சள் மற்றும் சிவப்பு கொடிகள் கூட அர்ஷினா (மஞ்சள்) மற்றும் குங்குமத்தைம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.  ஆனால் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வு வெகு காலத்திற்குப் பிறகுதான் வருகிறது.  உதாரணமாக, பெங்களூரில் 1928 இல் ஒரு வகுப்புவாத மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்கள் கூட   இடையிடையே தானே தவிர அடிக்கடி இல்லை.

? இந்தப் பிராந்தியத்தை அரசியல் எப்படி வடிவமைத்தது?

! அன்றைய ஆதிக்க சமூகங்கள் நிலம் வைத்திருந்தவர்கள் தான்.  மில்லர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், மைசூர் சமஸ்தானத்தில் இடஒதுக்கீடு 1920 களில் ஒக்கலிகாக்கள் (கௌடாக்கள்) மற்றும் லிங்காயத்துகளுக்கு வழங்கப்பட்டது.  தமிழ் மற்றும் மராத்தி பகுதிகளிலும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டன.  சூத்திர சமூகங்கள் கல்வியைப் பெற்றதால், குவெம்பு (ஒக்கலிகா) போன்ற பல இலக்கியவாதிகள் தோன்றினர்.  அக்காலத்தில் இலக்கியத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் இருந்தது.  60 மற்றும் 70 களில், ஒரு புதிய தலைமுறை தோன்றியது - அரசியலிலும் இலக்கியத்திலும்.  புகழ்பெற்ற எழுத்தாளர்களான பி லங்கேஷ் மற்றும் சந்திரசேகர் பாட்டீல் ஆகியோர் லிங்காயத்துகள்.  அவர்கள்  வகுப்புவாதத்திற்கு கடும் எதிர்ப்ப்பாளர்கள் மற்றும் லோஹியாவின் அரசியலால் ஈர்க்கப்பட்டனர்.  

தலித் சங்கர்ஷா சமிதி (டிஎஸ்எஸ்) மற்றும் ராஜ்ய ரைதா சங்கம் போன்ற பிற அமைப்புகள் இந்த நேரத்தில் பிறந்தன.  டிஎஸ்எஸ் நிலமற்ற தொழிலாளர்களுக்காகப் போராடியபோது, ​​ரைதா சங்கம்  நிலம் உள்ள சமூகங்களின் சார்பாக - தெற்கு கர்நாடகாவில் ஒக்கலிகாக்கள் மற்றும் வட கர்நாடகாவில் லிங்காயத்துகள் சார்பாக பரப்புரை செய்தது.  இந்த சங்கங்கள் சாதியை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அவை வகுப்புவாத அணிதிரட்டலை எதிர்த்தன.  60-80 களில் இருந்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக வகுப்புவாதம் எதுவும் இல்லை.  இது ஒரு பொற்காலம்.  தேவராஜ் அர்ஸின் கீழ் இயங்கிய கட்சி நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் நில உச்சவரம்புகளை அறிமுகப்படுத்தியபோது காங்கிரஸுக்கு எதிரான உணர்வு இருந்தது.

அதுவரை நிலப்பிரபுத்துவ சக்திகளின் கோட்டையாக காங்கிரஸ் இருந்தது.  ஜனதா கட்சியின் உருவாக்கம் காங்கிரஸுக்கு எதிரான மனநிலையிலிருந்த நிலப்பிரபுத்துவ மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு ஒரு இடைத்தரகராக செயல்பட்டது. ஆனால் ஒரு வலுவான தளம் இல்லை.  1983 இல், ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது,  ராமகிருஷ்ண ஹெக்டே கர்நாடகாவின் (முதல் காங்கிரஸ் அல்லாத) முதலமைச்சரானார்.  அப்போதும் கூட, லிங்காயத்துகளுக்குப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு முக்கிய தலைவர் இல்லை.  ஒக்கலிகாக்கள் எச்.டி.தேவே கவுடாவைக் கொண்டிருந்தனர்.


? வகுப்புவாத பதட்டங்கள் எப்போது வெளிப்படத் தொடங்கின?


! ராம ஜென்மபூமி இயக்கம் உருவான பிறகு வகுப்புவாத மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன.  பாரதிய ஜனதா கட்சி (BJP) முக்கியத்துவம் பெறத் தொடங்கியது மற்றும் பிஎஸ் எடியூரப்பாவை கட்சியின் மாநிலத் தலைவராக நியமித்தது.  அது போலவே, லிங்காயத்துகளும் இந்து உணர்வுகளை ஈர்க்கும் மற்றும் லிங்காயத் நிலப்பிரபுத்துவ சக்திகளை வரவேற்கும் ஒரு புதிய தளத்தைக் கொண்டிருந்தனர்.

சிக்மகளூரில் உள்ள பாபாபுதன் தர்கா கோவில் விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது.  இந்துக்களும் முஸ்லீம்களும் பிரார்த்தனை செய்யும் ஒத்திசைவான கலாச்சாரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.  இருப்பினும், சங்பரிவார் ஒத்திசைவான இந்தக்  கலாச்சாரத்தை இஸ்லாமிய ஆக்கிரமிப்பாக சித்தரித்தது.  திப்பு சுல்தான்  கோவிலை தர்காவாக மாற்றினார் என்று பரப்புரை செய்தனர்.  பாஜகவின் வகுப்புவாத அரசியலுக்கு உதவிய இந்தக் கதையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை.  மத மாற்றம், பசுக்கொலை போன்ற பிற பிரச்சனைகளை கையில் எடுத்து மதத்தின் பெயரால் இளைஞர்களைத் திரட்டியது பாஜக.

மும்பை-கர்நாடகா மற்றும் கடலோர கர்நாடகா பகுதிகளில், வகுப்புவாத மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன.  பண்டுகள், பிராமணர்கள் மற்றும் பில்லாவாக்களின் உதவியுடன், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கடலோர கர்நாடகத்தில் ஒரு தளத்தை உருவாக்கியது.  பண்டுகள் மற்றும் பிராமணர்கள் பாரம்பரிய நிலப்பிரபுக்கள்.  70களின் நிலச் சீர்திருத்தக் கொள்கைகளால், பண்டுகள் மற்றும் பிராமணர்கள் நிலத்தை இழந்தனர், அதே நேரத்தில் பில்லாவாக்கள் மற்றும் மொகாவீர்கள் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் நிலத்தைப் பெற்றனர்.  இன்று இவர்கள் அனைவரும் பா.ஜ.க. வில் ஐக்கியமாகியுள்ளனர். தாராளமயமாக்கலுக்குப் பிறகு, ரியல் எஸ்டேட் மற்றும் நிதி மூலதனம் கட்டுப்பாடுகள் இல்லாமல் வளரத் தொடங்கியது.  மாஃபியாவால் ரியல் எஸ்டேட் கைப்பற்றப்பட்டது, அதில் பன்ட்டுகள் பெரும் பங்கு வகித்தன.  இதற்கிடையில், சட்ட விரோத சுரங்கம் காரணமாக வட கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் அரசியல்  செல்வாக்கு பெற்றனர்.  இது மாநிலத்தில் பாஜகவின் நிலையை மேலும் வலுப்படுத்தியது.

? ஷிவ்மோக்கா எப்படி வகுப்புப் பதட்டம் கொண்ட மாவட்டமாக மாறியது?

! ஷிவ்மோக்கா மாவட்டம்  முழுக்க முழுக்க கர்நாடகா மாநிலத்தின்

உருவகமாக செயல்படுகிறது.  பி.லங்கேஷ், யு.ஆர்.ஆனந்தமூர்த்தி போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களை ஷிவ்மோக்கா நமக்கு வழங்கியது. சாந்திவேரி கோபால கவுடா, பங்காரப்பா போன்ற பல சோசலிச தலைவர்கள் இருந்தனர். பிறகு பி.எஸ். எடியூரப்பா போன்றவர்களிடம் இப்பகுதி மாறியது. இது கர்நாடகாவின் உருவகமாக மாறியுள்ளது.

-ஃபைஸல்

Comments