.பச்சையாக புளுகிய ராம் மாதவ்!
.பச்சையாக புளுகிய ராம் மாதவ்!
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான மத துன்புறுத்தல் பற்றிய செய்திகள் பொய்யானவை.இந்தியா எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்று இந்தோநேஷியாவின் பாலியில் கடந்த செப் 4ம்தேதி நடந்த சர்வதேச உச்சிமாநாட்டில் பச்சையாக புளுகியிருக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவரும் பிஜேபியின் முன்னாள் பொதுச்செயலாளருமான ராம் மாதவ்.
கடந்த ம்தேதி இந்தோனேசியாவின் பாலியில் G20 மத உச்சி மாநாட்டின் (R20) நிறைவு விழாவில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தேசிய கவுன்சில் உறுப்பினர் மாதவ், அடுத்த உச்சி் மாநாடு 2023 இல் இந்தியாவில் நடைபெறும் உச்சிமாநாட்டை முன்னெடுத்துச் செல்ல இந்தியா சிறந்த இடம் என்று தெரிவித்துள்ளார்
மேலும் அவர், “உலகின் அனைத்து மதங்களுக்கும் இந்தியா தாயகம். நூற்று எண்பது மில்லியன் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்கின்றனர், இது மிகப்பெரிய முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட இரண்டாவது அல்லது மூன்றாவது நாடாக உள்ளது. துன்புறுத்தல் பற்றிய பிரச்சாரத்திற்கு அப்பால், இந்தியா எப்போதும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளித்துவருகிறது, முஸ்லீம் தலைவர்களை குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை நீதிபதியாக ஆக்கியுள்ளது."என்றும் புளுகியுள்ளார்.
![]() |
| R20 Summit |
அதிகாரம் இல்லாத ரப்பர்ஸ்டாம்ப் பதிவிகளை விடுத்து ஒரு முறையாவது இந்தியா சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் ஆக்கியிருக்கிறதா என யாரும் கேட்கவில்லை அதனால் வாய்க்கு வந்த பொய்யை அள்ளி வீசியுள்ளார்.
"அவர்கள் (முஸ்லிம்கள்) இந்தியாவின் பொது வாழ்வில் பல முக்கிய பதவிகளை அலங்கரிக்கிறார்கள், மற்ற நாடுகளில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை இது நாம் காணாத ஒன்று" எனக் கூறிய மாதவ், “2050 க்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும்” என்றார்.
இந்த மத உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததில்- பாலியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் ராம் மாதவ். இவருடன் ராமர் கோயில் அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த கிரி மற்றும் பிற ஆன்மீகத் தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
அடுத்த R20 இந்தியாவில்......
---------------------------------------
R20 என்பது இந்தோனேசிய அரசாங்கம் G20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தும் தனித்துவமான உச்சிமாநாடு ஆகும். வரலாற்றில் முதன்முறையாக இது நடைபெற்றுள்ளது.
![]() |
| Raam Madhav |
மாநாட்டில்,“பாலி மத நல்லிணக்கத்தின் தனித்துவமான மற்றும் சரியான பன்முகத்தன்மை கொண்டதாகும். சீனர்கள் புத்த மதத்தையும் தாவோயிசத்தையும் இங்கு கொண்டு வந்தனர், ஜாவா மன்னர்கள் இந்து மதத்தை கொண்டு வந்தனர். பிற்கால முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் இஸ்லாம் வந்தது. இது சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுக்கு ஒரு சிறந்த உதாரணம் - 86% முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாட்டில் 83.5% இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணம் பாலி" எனப் பேசியுள்ளார் மாதவ்.
இந்தப் பயணத்தைத் தொடங்க இதைவிட சிறந்த இடம் இருந்திருக்க முடியாது. இப்பயணத்திற்கு இந்தியாவை விட சிறந்த நாடும் இருக்க முடியாது. ஆன்மிகத்தின் தாய்மையாக உள்ள இந்தியாவே அடுத்த ஆண்டு இந்த உச்சி மாநாட்டை முன்னெடுக்கும்" என்றும் 80% பொய்யோடு 20% உண்மை நிலையை பேசியுள்ளார் ராம் மாதவ்.


Comments
Post a Comment