இஸ்லாம் மற்றும் கிறித்தவத்திற்கு மாறிய தலித்களின் உரிமையை மறுக்கும் ஒன்றிய அரசு!





இஸ்லாம் மற்றும் கிறித்தவத்திற்கு மாறிய தலித்களின் உரிமையை மறுக்கும் ஒன்றிய அரசு!



தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்கள் பட்டியல் சாதியினர் பட்டியலில் இருந்து விலக்கப்படுவதை
வரவேற்கும் ஒன்றிய அரசு  வரலாற்றுத் தரவுகள் அவர்கள் எந்தப் பின்தங்கிய நிலையையும் அல்லது ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டதில்லை என்று  உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இஸ்லாத்த்தைப் பொறுத்தவரை இப்படி பிரிவுகள் இல்லை; இஸ்லாத்திற்கு மாறும ஒரு தலித் இஸ்லாமியராகவே எந்நிலையிலும் கருதப்படுவார்.சமூகத்தில் சம அந்தஸ்தோடு நடத்தப்படுவார். தலித் கிறிஸ்டியன் , கிறித்தவ நாடார், கிறித்தவ கவுண்டர் போல இஸ்லாத்தில அழைக்கப்படுவதில்லை.  தென்னிந்திய மாநிலங்களில் தலித் முஸ்லிம் என இஸ்லாத்திற்கு மாறிய ஒரு தலித் அழைக்கப்படுவதில்லை ஆனால் வட மநிலங்களில் இந்த சொல்வழக்கு பரவலாக உள்ளது.

Dalit christian demanding scheduled status

தலித் கிறிஸ்தவர்களும், தலித் முஸ்லிம்களும் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான உரிமை யை கோர முடியாது என்று வாதிட்டுள்ள ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  ஒரு பிரமாணப் பத்திரத்தில் 1950 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை எந்தவிதமான அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதாக இல்லை என்று கூறியுள்ளது.  நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனுதாரர், (பொதுநல வழக்குகளுக்கான என்ஜிஓ மையம் -சிபிஐஎல்), அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை 1950 பாரபட்சமானது மற்றும் அரசியலமைப்பின் 14 மற்றும் 15 வது பிரிவுகளை மீறுவதாக அறிவிக்க வேண்டும், ஏனெனில் அதுஇந்து மதம், சீக்கியம் மற்றும் பௌத்தம் தவிர.இதர
மதங்களுக்கு மாறுபவர்களுக்கான அட்டவணை சாதி அந்தஸ்தை வழங்கவில்லை. என வாதிட்டிருக்கிறார்.

1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, 1950 இல் அடையாளம் காணப்பட்ட சமூகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட சமூகக் இழிவை மையமாக வைத்து பட்டியல் சாதிகளை அடையாளப்படுத்துவதாக NDA அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதோடு, அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதி) ஆணை, 1950, “சில இந்து சாதிகளின் பொருளாதார மற்றும் சமூக பின்தங்கிய நிலைக்கு வழிவகுக்கும் தீண்டாமை ஒடுக்குமுறை அமைப்பு நடைமுறையில்  கிறித்துவம் அல்லது இஸ்லாதில்  இல்லாத காரணத்தால் அவை இந்த அந்தஸத்திலிருந்து விலக்கப் பட்டுள்ளன.  அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை எதுவும்  அரசியல்அமைப்பு சட்டம்  1950ஐ பாதிக்காது என தெரிவித்துள்ளது.

Protest

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை (அனைத்து மதங்களிலும் தலித்துகளுக்கு பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து அளிக்க பரிந்துரை செய்கிறது) குறைபாடுடையது என்றும், எந்த ஒரு கள ஆய்வும் செய்யாமல் அறிக்கை உருவாக்கப்பட்டதால், கள நிலவரத்தை உறுதிப்படுத்த முடியாது என்றும் மத்திய அரசு கூறியது.  மேற்படி ஆணையம், இந்தியாவின் சமூகச் சூழலைப் பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் கொண்டதே தவிர, பட்டியல் சாதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளவற்றில்  தற்போதைய சாதிகளைச் சேர்ப்பதால் ஏற்படும் விளைவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை , எனவேநீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் முடிவுகளை அரசாங்கம் ஏற்கவில்லை என்று ஒன்றிய அரசு  கூறியுள்ளது.

இப்பிரச்சினையின் முக்கியத்துவம் மற்றும் உணர்திறனைக் கருத்தில் கொண்டு, பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்ற- , ஆனால் (இந்து, சீக்கியம் மற்றும் பௌத்தம் அல்லாத ) பிற மதங்களுக்குஙமாறிய மக்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான பிரச்சனைகளை ஆராய, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிஷனை ஒன்றிய அரசு அமைத்துள்ளது என நரேந்திர மோடி கூறியுள்ளது.

கிறித்தவம் மற்றும் இஸ்லத்திற்கு மாறும் தலித்களுக்கு பட்டியலின அந்தஸ்து இல்லை என்பது அப்பட்டமான பாரபட்சம், அநீதி மட்டுமல்ல; அயோக்கியதனம் என்றும் கூறலாம்.

Human Rights Rally


இந்த விவகாரத்தில் மட்டும் அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டும் மோடி அரசு, அரசியல் அமைப்பையே மாற்றத் துடிக்கிறது. பௌத்தம், சீக்கியம் ஆகியவை இந்து மதத்தின் ஒரு விரிவாகவே இருப்பதால் அவற்றுக்கு மாறும் தலித்களால் இந்து மதத்திற்கு   பாதிப்பு இல்லை.ஆனால் இஸ்லாம மற்றும் கிறித்தவத்திற்கு மாறுவது என்பது இந்து மதத்திற்கும் இந்துதேச கனவிற்கும் பெரும பாதிப்பை ஏற்படுத்தும என நினைக்கின்றன பிஜேபி உள்ளிட்ட சங்பரிவாரம்.
கிறித்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு மாறும் தலித்களுக்கு பட்டியலின அந்தஸ்து தருவதால் இந்தியாவின் குடி மூழ்கிவிடுமா என்ன?

Comments