ஹிஜாப்பிற்கு தடை விதித்த நீதிபதிக்குப் பதவி!
ஹிஜாப்பிற்கு தடை விதித்த நீதிபதிக்குப் பதவி!
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி, கர்நாடகாவில் அரசின் ஹிஜாப் தடையை உறுதி செய்த பெஞ்சில் ஒருவராக இருந்தவர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட 22வது சட்ட ஆணையத்தின் தலைவராக கடந்த செப் 7ம்தேதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, 21வது தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சௌஹான் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றதிலிருந்து இந்த கமிஷனின் நலைவர் பதவி காலியாக இருந்தது. சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசுக்கு ஆராய்ச்சி செய்து ஆலோசனை வழங்குவதுதான் சட்ட ஆணையத்தின் செயல்பாடு ஆகும்.
ஹிஜாப் தடை வழக்கில் கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம். ஹிஜாப் இஸ்லாத்தில் அவசியமில்லை என்று கூறிய நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் (முக்காடு) அணிவதற்கு மாநில அரசு விதித்த தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.சங்கரன், பேராசிரியர்கள் ஆனந்த் பாலிவால், டி.பி.வர்மா மற்றும் ராக்கா ஆர்யா, எம்.கருணாநிதி ஆகியோர் சட்ட ஆணையத்தின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 2009 இல் "லவ் ஜிஹாத்" என்று கூறப்படும் நிகழ்வுகளை விசாரிக்குமாறு மத்திய அரசு மற்றும் கேரள அரசாங்கத்திற்கு உத்தரவிட்டவர்தான் நீதிபதி சங்கரன். லவ் ஜிஹாத் எனபது இந்துத்துவாவினரால் பிரச்சாரம் செய்யப்படும் ஒரு சதிக் கோட்பாடாகும்.
இதில், முஸ்லிம் ஆண்கள் இந்துப் பெண்களை திருமணம் மூலம் கட்டாய மதம் மாற்றுகிறாரகள் என அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
அந்த மாதத்தின் பிற்பகுதியில், மாநில காவலதுறைத் தலைவர் 'லவ் ஜிஹாதில்' எந்த அமைப்பும் ஈடுபடுவதற்கான ஆதாரம் இல்லை. எவ்வாறாயினும், இதுபோன்ற வழிகளைப் பயன்படுத்தி மதமாற்றங்களை ஊக்குவிக்க சில குழுக்கள் இளைஞர்களிடையே செயல்படுவதாக கூறப்படும் தகவல்களை காவல்துறை தலைவர் .கூறியதக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது
Comments
Post a Comment