மௌலானா அபுல் கலாம் ஆசாத்துக்கு எதிராக. விஷத்தை கக்கிய சுரேஷ் சாவாங்கே!

 மௌலானா அபுல் கலாம் ஆசாத்துக்கு எதிராக. விஷத்தை கக்கிய சுரேஷ் சாவாங்கே!


தேசிய கல்வி தினத்தையொட்டி, இந்தியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் மௌலானா ஆசாத்துக்கு எதிராக சாவான்கே வெறுப்புணர்வு  கருத்துக்களை பதிவிட்டு அதை பிரதமர் மோடிக கு ஹேஷ்டேக் செய்திருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு எதரான உணர்வுகளை தூண்டி வருகன்ற சுதர்சன் டிவியின் சுரேஷ் சாவாங்கே,  குறிப்பிட்ட இடைவெளியில் தனது சேனலில் வெறுப்பு மற்றும் இஸ்லாமோஃபோபியாவை தொடர்ந்து விதைத்து வரும் ஒரு தொடர்  குற்றவாளியாக இருந்து வருகிறார்.  அவரது சமீபத்திய இலக்கு வேறு யாருமல்ல,  பிரபல சுதந்திர போராளியும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மவ் லானா அபுல் கலாம் ஆசாத் தான். இவர் சாரி சிந்தனை கொண்ட    முஸ்லீம் என்றும் அழைக்கப்பட்டார்.


2008 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 ஆம் தேதி, அபுல் கலாமின்  பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் இந்தியாவில் தேசிய கல்வி தினமாக அது கொண்டாடப்படுகிறது.  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அபுல் கலாமைக் கௌரவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  இந்த  ட்விட்டர் பதிவு பின்னர் சாவான்கேவால் மீண்டும் பகிரப்பட்டது, அதில் அபுல் கலாம் குறித்து இழிவான, வகுப்புவாத கருத்துகளை சேரத்து பதிவிட்டுள்ளார சவாங்கே.

"ஜோ பாரத் கே நஹி தே ஹ் வோ பாரத் ரத்னா யா பாரத் கே ஷிக்ஷா மந்திரி கேசே பனாயே கயே தேஹ்"( இந்தியாவைச் சேராத ஒருவர் எப்படி பாரத ரத்னா அல்லது கல்வி அமைச்சர் ஆக்கப்பட்டார்)என அந்தப் பதிவில்  சாவாங்கே குறிப்பிட்டுள்ளார்.


மேலும், "அங்ரேஸோ அவுர் ஜிஹாதியோன் கே சன்யுக்த் ஷத்யந்த்ர கா ஷிகர் கியா கயா தேஷ், ஷிகாரி கே நாம் பர் ராஷ்ட்ரிய ஷிகா திவாஸ் கேஸே மனா சக்தே ஹை?"(பிரிட்டிஷ் மற்றும் ஜிஹாதிகளின் கூட்டுச் சதியால் வேட்டையாடப்பட்ட ஒரு நாடு, வேட்டைக்காரர்  பெயரில் தேசிய கல்வி தினத்தை எப்படி கொண்டாட முடியும்?” )என்றும்,

"பிச்லே சர்க்கார் கா யே நிர்ணய பத்லா ஜாயே" (முந்தைய அரசாங்கத்தின்  முடிவை மாற்ற பரிசீலிக்க வேண்டும்) என்று குறிப்பிட்டுபிரதமர் நரேந்திர மோடி, கல்வி அமைச்சர், தர்மேந்திர பிரதான் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகிய பெயர்களில் ரிட்விட செய்துள்ளார்.

சுரேஷ் சவாங்கே வகுப்பு நல்லிணக்கத்தைத் தூண்டும் நோக்கத்துடன் வெறுக்கத்தக்க பேச்சில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல என்றாலும், இந்த நவம்பர் 11 டவிட்டர் இடுகையின் மூலம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒருங்கிணைந்த ஒரு மனிதரைத் தாக்கி அனைத்து வரம்புகளையும் தாண்டியிருக்கிறார்.  தொலைநோக்கு பார்வையாளராக இருந்த மௌலானா ஆசாத் கல்வி மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றில் முக்கியமான பங்களிப்பைச் செய்தார்.  அடிப்படைக் கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமையாகும், அது இல்லாமல் அவர்கள் குடிமகனாகத் தங்கள் கடமைகளை முழுமையாகச் செய்ய முடியாது என்று வலியுறுத்தியவர் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது



Comments