பவுத்த மத மாற்ற சர்ச்சை!



 பவுத்த மத மாற்ற சர்ச்சை!


சத்தீஸ்கரில் அண்மையில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில், இந்து மதத்தைப் பின்பற்ற மாட்டோம் என்றும், இந்து கடவுள் மற்றும் தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்யமாட்டோம் என்றும் தலித்கள் உறுதிமொழி எடுக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

நவம்பர் 7ஆம் தேதி ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ வைரலானதை அடுத்து, அதன் ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர்களான ராஜ்நந்த்கான் மேயர் ஹேமா தேஷ்முக் மற்றும் மறைந்த ராணி சூர்யமுகி தேவி ராஜ்காமி சம்பதா நியாஸ் தலைவர் விவேக் வாஸ்னிக் ஆகியோரை நிகழ்வின் மேடையில் காணொளியில் காணப்படுகின்றனர்.  இதில் பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்நந்த்கான் எம்பி சந்தோஷ் பாண்டே கூறுகையில், "மாநிலத்தில் உள்ள பல கோயில்களையும்
ராஜ்காமி சம்பதா நியாஸ் நிர்வகித்து வருகிறது." என்கிறார்.

முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான ராமன் சிங்  , இதுபோன்ற சபதங்கள் எடுக்கப்படுவதற்கு முன்பே தான் அந்த  நிகழ்விலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறுகிறார்..

நவம்பர் 8 அன்று நடந்த , இந்த விழாவின் வீடியோ கிளிப் வைரலானது, அதில் மக்கள் இந்து மதத்தைப் பின்பற்ற மாட்டோம் என்றும் கடவுள் மற்றும் தெய்வங்களுக்கு சடங்குகளைச் செய்ய மாட்டோம் என்று சபதம் எடுப்பது பதிவாகியுள்ளது.

Dalit's Mass Conversion to Buddism

விஎச்பி, பஜ்ரங் தளம் மற்றும் பிற அமைப்புகள் ராய்பூரில் உள்ள புத்த மதத்தைச் சேர்ந்த வாஸ்னிக் அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

பின்னர், சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்சி நடப்பதாகக் கூறி, விஎச்பி மற்றும பஜரங் தளம்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாஸ்னிக்போலீஸில் புகார் அளித்தார்

மேயர் தேஷ்முக்கோ, விழாவிற்கு தான் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அத்தகைய சபதத்தை தான் ஆதரிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

"நிகழ்ச்சியில் நான் தனியாக இருக்கவில்லை.  முன்னாள் முதல்வர் ராமன் சிங், முன்னாள் எம்பி மதுசூதன் யாதவ் ஆகியோரும் உடன் இருந்தனர்.  எனக்கு இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது.  இது போன்ற மத விரோத சித்தாந்தத்தை நான் ஆதரிக்கவில்லை.  .  சபதம் எடுத்தபோது நான் அதை எடுக்கவில்லை, பின்னர் இடத்தை விட்டு வெளியேறினேன்," என்கிறார்.

நியாஸ் தலைவர் பதவியில் இருந்து வாஸ்னிக் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எம்பி சந்தோஷ் பாண்டே வலியுறுத்தியுள்ளார்.


"ராஜ்காமி சம்பத நியாஸ் பல கோவில்களை நிர்வகித்து வருகிறார்.  இப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஒருவர் அதன் தலைவர் பதவியை எப்படி வகிக்க முடியும்?” என்றும் பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

-ஹிதாயா

Comments