கிறித்தவப் பள்ளிக்குள் புகுந்து ரகளை செய்த சங்பரிவாரம்!


 கிறித்தவப் பள்ளிக்குள் புகுந்து  ரகளை செய்த சங்பரிவாரம்!


மத்தியப் பிரதேசத்தின் குணாவில் உள்ள கிறிஸ்து சீனியர் மேல்நிலைப் பள்ளியில்
7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்,
"பாரத் மாதா கி ஜெய்"
முழக்கத்தை எழுப்பியதற்காக பள்ளிக்கூட நிர்வாகத்தால் அம்மாணவன் தண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து,கடந்த நவ 3ம் தேதி பள்ளிக்குள் அதிரடியாகப் புகுந்த சங்பரிவார கும்பல் ஒன்று "பாரத் மாதா கி ஜெய்" கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) தலைமையிலான கழுவினர்,  பள்ளி வளாகத்திற்குள் ஒரு ‘சுந்தர்கண்ட் பாதை’ என்ற இந்துத்வா பூஜையையும் செய்துள்ளனர்.

கடந்த நவ 2ம் தேதி  காலை பள்ளியின் அசெம்பிளி முடிந்து வகுப்பிற்கு திரும்பிச் செல்லும் போது அந்த மாணவன் பாரத் மாதா கீ ஜெய்  கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

St Joseph School

எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருப்பதால், ஒழுக்கமின்மைக்காக மாணவர் தண்டிக்கப்பட்டார் என்று பள்ளி நிர்வாகம் தொடர்ந்தது வீளக்கமளித்து வருகிறது.

“பிரச்சினை வேறு திசையில் கொண்டு செல்லப்படுகிறது.  ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டதால் மாணவர் தண்டிக்கப்பட்டார், ”என்கிறார் பள்ளியின் முதல்வர் தாமஸ் கொல்லப்பள்ளி
ஆனாலும் முதலவர்,

சங்பரிவாரம் மற்றும்  மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகளிடமிருந்து அழுத்தம் அதிகரித்ததால், அவர் எழுத்துப்பூர்வ உறுதிமொழியை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த உறுதிமொழியில், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்றும், மாணவனைத் தண்டித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிக் கூட்டத்தில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கங்கள் வரும் காலங்களில் எழுப்பப்படும் என்றும் பள்ளி முதல்வரிடம்  அவர்கள் நிர்பந்தப் படுத்தி எழுதி வாங்கியுள்ளனர்.

முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர சலுஜா பள்ளிக்கு வந்து மாணவியை தண்டித்த ஆசிரியர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய கோரியதால் விஷயம் விஸ்வரூபம் எடுத்தது.

வழக்குப்பதிவு செய்யப்படும் என நிர்வாகம் உறுதியளித்த பிறகே நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  ஜஸ்டின் மற்றும் ஜாஸ்மின் ஆகிய இரு ஆசிரியர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  சப் டிவிஷனல்  மாஜிஸ்திரேட் வீரேந்திர பாகேல் பின்னர் உறுதிப்படுத்தினார்.

-ஹிதாயா


Comments