மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கிறித்தவர்கள் 5 பேர் கைது!
மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கிறித்தவர்கள் 5 பேர் கைது!
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கட்டாய மதமாற்றம் செய்ததாக 5 கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 10 ம்தேதி இரவு காவல்துறயால் அழைத்துச் செல்லப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
![]() |
5 detention in conversion |
தேவாலயத்திற்கு அருகில் நின்று துண்டு பிரசுரங்களை விநியோகித்ததை உள்ளூர் மக்கள் எதிர்த்ததாகவும், பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததாகவும் கர்நாடக காவல்துறை கூறுகிறது.
ஈ.என். குமார நாகேசா மற்றும் இ.என். விஜய் கவுடா, இருவரும் மளவள்ளி நகருக்கு அருகில் உள்ள கியாத்தனஹள்ளியை சேர்ந்தவர்கள்; கந்தேகலைச் சேர்ந்த ஹேமந்த் குமார்; மைசூரை சேர்ந்த சுமந்த்; மற்றும் சாமராஜநகரில் வசிக கும் எஸ்.சி.சந்தீப் ஆகியோர் தான் கைது செய்யப்பட்ட நபர்கள்.
அன்னூர் கிராமத்தில் உள்ள தேவாலயத்தின் அருகே இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கேட்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக அந்த 5 பேர்மீது போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
கர்நாடக சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடகா மத சுதந்திர உரிமைப் பாதுகாப்பு மசோதா, 2022ஐ பிஜேபி அரசு நிறைவேற்றியது.
இந்த மதமாற்ற எதிர்ப்பு மசோதா மத சிறுபான்மையினர் மற்றும் உரிமை குழுக்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டது.
- ஃபைஸ்
Comments
Post a Comment