குவாண்டனமோ சிறை: விசாரணையே இல்லாமல் 20 வருடங்கள் கழித்து விடுதலையான முஸ்லிம் கைதி!
குவாண்டனமோ சிறை: விசாரணையே இல்லாமல் 20 வருடங்கள் கழித்து விடுதலையான முஸ்லிம் கைதி!
கியூபாவில் உள்ள அமெரிக்காவால் நடத்தப்படும் குவாண்டனாமோ இருந்த மூத்த கைதியான சைபுல்லா பராச்சா, விசாரணையே இல்லாமல் கிட்டத்தட்ட 20 வருட காவலுக்குப் பிறகு விடுதலையாகி அவரது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார்.
வெளியுறவு அமைச்சகம் பராச்சாவை திருப்பி அனுப்புவதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களுடனான பேச்சுவார்தையை நிறைவு செய்துள்ளது, ”என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் கடந்த அக் 29ம் தேதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
75 வயதாகும் பாகிஸ்தானிய தொழிலதிபரான சைஃபுல்லா பராச்சா கடந்த 2003 ஆம் ஆண்டு தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு ஆயுதக் குழுவிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த மே மாதத்தில், சைஃபுல்லா பராச்சாவால் அமெரிக்காவிற்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல் இல்லை என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா அவரது விடுதலைக்கு ஒப்புதல்அளித்தது. குவாண்டனா மோவில் உள்ள பெரும்பாலான கைதிகளைப் போலவே, பராச்சா மீது முறைப்படி குற்றம் சாட்டப்படவில்லை மற்றும் அவரது தடுப்புக்காவலை
எதிர்த்து மேல் முறையீடு செய்ய சிறிய சட்ட அதிகாரம் அவருக்கு இருந்தது.பராச்சா ஒருமுறை, குவாண்டனாமோவில் சிறை வாழ்க்கை என்பது உங்கள் சொந்த கல்லறையில் உயிருடன் இருப்பது போன்றது என்று விவரித்திருந்தார்.
பிரிட்டனைத் -ஐ தளமாகக் கொண்ட மனித உரிமைகள் தொண்டு நிறுவனமான Reprieve, பராச்சாவை "நிரந்தரக் கைதி" என்று வர்ணித்துள்ளதோடு,
"இது ஒரு பெரிய வெற்றி, ஆனால் சைஃபுல்லா பராச்சா, தனது வாழ்க்கையின் முக்கியமான காலத்தை இழந்த பிறகு ஒரு பலவீனமான முதியவராக தனது குடும்பத்திற்குத் திரும்புகிறார். இந்த அநீதியை ஒருபோதும் சரிசெய்ய முடியாது,” என ரிப்ரீவ் ட்வீட் செய்துள்ளது.
பராச்சா ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் ஆவார், வணிகரீதியிலான பயணத்தில் தாய்லாந்தில் இருந்தபோது அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால் கடத்தப்பட்டார் என்று கூறியுள்ள ரிப்ரீவ் மனிதஉரிமைகள் அமைப்பு,
முதலில் அவர் பாக்ராம் விமான தளத்திற்கு அனுப்பப்பட்டார், இது கைதிகளை கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்குவதில் பெயர்போன அமெரிக்காஙின் கொடுஞ்சிறையாகும். இங்கிருந்து ஒரு வருடம் கழித்து, அவர் குவாண்டனாமோவுக்கு மாற்றப்பட்டார். ”என்று ரிப்ரீவ் தெரிவித்துள்ளது.
இரண்டு மாரடைப்பு உட்பட, அமெரிக்க காவலின் போது பராச்சாவின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்தது.9/11 தாக்குதலுக்குப் பிறகு உலகின் மிகவும் மோசமான தடுப்புக் காவல் வசதி கொண்ட குவாண்டனாமோ நிறுவப்பட்டது.
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் படையெடுப்பின் போது பிடிபட்ட அல்-கொய்தா உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை இங்கே சிறை வைத்தது அமெரிக்கா. 700 க்கும் மேற்பட்ட, பெரும்பாலும் முஸ்லீம்கள் கைதிகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இச்சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் காவலை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான எந்த சட்ட வழிமுறைகளும் இருக்கவில்லை.
அமெரிக்கா முன் வைத்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"
என்ற வெற்று கோஷத்தின் போது கைது செய்யப்பட்ட 780 கைதிகளில், 732 பேர் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 40 கைதிகள் இப்போது அங்கேயே இருக்கிறார்கள் என்கிறது அல்ஜசீரா செய்தி நிறுவனம்.
மனித உரிமையை உலகில் அதிகம் பேசும் முதன்மையான நாடு அமெரிக்கா. உலகிலேயே மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபடும் நாடும் அமெரிக்காதான். அதற்கு சான்று தான் குவாண்டனமோ சிறையும் அங்கு விசாரணைக் கைதிகள் நடத்தப்படும் விதமும்!-ஃபைஸ்

Comments
Post a Comment