கர்நாடகா: ஜாமியா மஸ்ஜிதை உரிமை கோரும் சங்பரிவாரம்!


 கர்நாடகா:
ஜாமியா மஸ்ஜிதை உரிமை கோரும் சங்பரிவாரம்!


கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள,1786-87ல் திப்பு சுல்தான் தனது அரண்மனைக்கு அருகில் கட்டிய ஜாமியா மஸ்ஜிதிற்குள் தொழுகை நடத்த அனுமதி கோரி கர்நாடகாவில் உள்ள வலதுசாரி குழுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 108 மனுக்களை தாக்கல் செய்ய உள்ளன - இந்த ஆண்டு முழுவதும் இக்கோரிக்கை வலிறுத்தி  அவர்கள் பல போராட்டங்களை நடத்திய பின்னர் இறுதியாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

Jamia Masjid

கர்நாடக மாநிலத்தில் இயங்கும் பஜ்ரங் சேனாவின் மாநிலத் தலைவர் பி.மஞ்சுநாத் ,  மனுக்கள் தயாராக இருப்பதாகவும், வரும் நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார் என்கிறது இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு!


"108 என்பது இந்துக்களுக்கு ஒரு விசேஷமான எண், அதனால்தான் நாங்கள் ஆத்தனை மனுக்களை தாக்கல் செய்கிறோம், எனக் கூறிஉள்ளார் மஞ்சுநாத்.

  ஹனுமான் கோவிலை இடித்துவிட்டு அந்த  இடிபாடுகளில் ஜாமியா மஸ்ஜித்  கட்டப்பட்டது என்றும், இந்துக்களுக்கு உள்ளே பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு என்றும்    விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உட்பட பல வலதுசாரி குழுக்கள்,  கூறி வருகின்றன.

Bajrang Sena Protest

இந்த மசூதி 1786-87ல் இல் கட்டப்பட்டது மற்றும் இது இந்திய தொல்லியல் துறை (ASI) மூலம் பராமரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தளமாகும்.

கடந்த காலங்களில் தங்கள் கோரிக்கைகளுக்கு மாவட்ட அதிகாரிகளும் மாநில அரசும் பதிலளிக்கவில்லை என்று வலதுசாரி குழுக்கள் கூறிவருகின்றன.  அதேவேளை, இதனை பாதுகாக்குமாறு மஸ்ஜித்  நிர்வாகம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்துக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதாகக் குற்றம்சாட்டும் மஞ்சுநாத், மனுக்கள், புகைப்படங்கள் மற்றும்  இந்துக் கட்டிடங்கள் மற்றும் கோவில் இடிக்கப்பட்டதைக் காட்டும்இந்த மசூதி 1782 இல் கட்டப்பட்டது மற்றும் இது இந்திய தொல்லியல் துறை (ASI) மூலம் பராமரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தளமாகும்.

கடந்த காலங்களில் தங்கள் கோரிக்கைகளுக்கு மாவட்ட அதிகாரிகளும் மாநில அரசும் பதிலளிக்கவில்லை என்று வலதுசாரி குழுக்கள் கூறியுள்ளன.  இதேவேளை, இதனை பாதுகாக்குமாறு மசூதி நிர்வாகம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்துக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய மஞ்சுநாத், மனுக்கள், புகைப்படங்கள்,  இந்துக் கட்டிடங்கள் மற்றும் கோவில் இடிக்கப்பட்டதைக் காட்டும் வீடியோக்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்  என்கிறார்.

மேலும், ஜாமியா மஸ்ஜித் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு சொந்தமானது.  வரி செலுத்துவோரின் பணத்தில் குறைந்தபட்சம் ₹10 லட்சத்தை அதன் பராமரிப்புக்காக அரசாங்கம் செலவிடுகிறது.  தொல்லியல் துறைக்கு சொந்தமான எந்த கட்டிடத்திலும் வெளியாட்கள் தங்க அனுமதி இல்லை.  ஆனால், குறைந்தபட்சம் 50 பேராவது அந்த கட்டிடத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.அங்கு மதரஸாக்கள் இயங்கி வருகின்றன" கூறும்  மஞ்சுநாத் .

"மஸ்ஜிதிற்குள்  வசிப்பதாகக் கூறப்படும் நபர்கள் கட்டிடத்தை சிதைத்து சேதப்படுத்துகிறாரகள்; இது ஒரு கிரிமினல் குற்றம் அகும். அது இந்துக்களின் சொத்து என்பதைக் காட்டும் அனைத்து ஆதாரங்களையும் அவர்கள் சேதப்படுத்துகிறார்கள்.  அந்த மக்களை தூக்கி எறிய வேண்டும் என்பதே எங்களின் முதல் கோரிக்கை" என்கிறார்.
Police security

அதோடு, "இரண்டாவதாக, இது ஒரு இந்து கோவில்.  இதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன.  புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களைப் பார்க்கும் எவரும் இது ஒரு இந்து கட்டிடவஅமைப்பு என்பதை ஒப்புக்கொள்வார்கள்.  இதையெல்லாம் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்.

அவர்கள்  கோயிலை முழுவதுமாக இடிக்கவில்லை.  மேலே இருந்த கட்டிடத்தை மட்டும் இடித்துவிட்டு மஸ்ஜிதைக் கட்டினார்கள்.  மீதமுள்ள கட்டிடம் அப்படியே உள்ளது. இப்போது இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் எப்போதாவது கோவில் இந்துக்களுக்கு வழிபாட்டிற்காக திருப்பித் தரப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் மஞ்சுநாத்  கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், சிக்கமகளூருவில் உள்ள காளி மடத்தைச் சேர்ந்த ரிஷிகுமார் சுவாமி ஜாமியா மஸஜித்தை இடிக்க அழைப்பு விடுத்ததற்காக கைது செய்யப்பட்டார்.  1784 ஆம் ஆண்டு ஹனுமான் கோயிலை இடித்து 18 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர் திப்பு சுல்தான் கட்டியதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பல இந்து அமைப்புகள் மாவட்ட அதிகாரிகளிடம் மசூதியை ஆய்வு செய்ய கோரியும், அவர்களின் கூற்றுகள் உண்மை என கண்டறியப்பட்டால் கோவிலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். கர்நாடகாவில் பாஜக வகுப்புவாத அரசியல் செய்ய வாய்த்திருப்பது தான் பாபா புதான்கிரி தர்கா, பெங்களூரு சாம்ராஜ்பேட் ஈத்கா திடல் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டனம் ஜாமியா மஸ்ஜித்!

-அபு

Comments