முதல்வரின் பேச்சை மறுக்கும் காவல்துறை!

முதல்வரின் பேச்சை மறுக்கும் காவல்துறை!



மகாராஷ்ட்டிராவின் முதல்வர், துணை முதல்வர் தேவேந்திர பட்டானவிஸ் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து- பாப்புலர் பிரண்ட் அமைப்பிற்கு எதிரான சமீபத்திய தேசம்  தழுவிய என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத் துறையின் ரெய்டை கண்டித்து புனேவில் அவ்வமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம் எழுப்பியதாக குற்றம் சாட்டியிருந்தனர். இதனைமராட்டிய காவல்துறை மறுத்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் அமைப்பினர், அவர்களின் தலைவர்களின் கைதை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை எழுப்பினார்கள் என முதல்வர்களும் தலைமைச்செயலக உயரதிகாரிகளும்   சொல்ல இது சரியா தவறா என ஆராயாமல், டைம்ஸ் நவ், ஏஎன்ஐ, ரிபப்ளிக் டிவி, நய் துனியா மற்றும் லோக்மாத் ஆகிய செய்தி சேனல்கள் அதை  அப்படியே வாந்தி எடுத்திருந்தன.

தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என சிவாஜியின் நிலமான புனேவில் யார்  கோஷம் எழுப்பினார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

பி எப் ஐ ஆர்ப்பாட்டம்


ஏஎன்ஐ செய்தி நிறுவனம் மற்றும் மேற்கூறிய செய்தி சேனல்கள், ‘சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ சோதனையைக் கண்டித்து அக்கட்சித் தொண்டர்கள் புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே அவர்கள் கூடியிருந்த இடத்திலிருந்து  பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் கேட்டது. இதில் தொண்டர்கள்
சிலரைப் போலீஸ் கைது செய்தது என செய்தி வெளியிட்டுள்ளன.

பிஎஃப்ஐ தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’கோஷம் எழுப்பினார்களா? என்றால் ஸ்பாட்டில் இருந்த போலீஸ் இல்லை எனமறுக்கிறது. இது தொடர்பாக வீடியோ செய்தி வெளியிட்டுள்ள புனே காவல்துறை,
, பாப்புலர் பிரண்ட் தொண்டர்கள், ‘ஜிந்தாபாத், ஜிந்தாபாத் பாப்புலர்
பிரண்ட் ஜிந்தாபாத்’ என்று தான் கோஷங்களை எழுப்பினர். ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’என்ற கோஷங்களை எழுப்பவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது !செய்தியாளர்களிடம் ,  “பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று ஒருவரும் கோஷம் எழுப்பவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல். அவர்களின்கோஷம் ‘பாப்புலர் பிரண்ட் ஜிந்தாபாத்’ என்பதாகவே இருந்தது” என பந்த் கார்டன் மூத்தபோலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாப் மன்கர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக டிவிட்டரில் அசல் வீடியோ பதிவுகளை பதிவேற்றம்
செய்துள்ள அஸார் டம்போலி என்ற சமூக  ஆர்வலர், மூன்று ஒரிஜினல்
வீடியோக்களையும் பாருங்கள். இந்த வீடியோ பதிவுகளில் நீங்கள் சர்ச்சைக்குரிய எந்த கோஷத்தையும் காண முடியாது. ‘டைம்ஸ் நவ்’ சேனல், தனது டி.ஆர்.பி வெறியைத் தீர்த்துக் கொள்ள பொய்யான வீடியோக்களை பரப்பி வருகிறது” என பதிவிட்டு வீடியோக்களையும்
பதிவேற்றம் செய்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே

“இது முற்றிலும் தவறான செய்தியாகும். எங்களது நகரத்தில் (புனே) அமைதியையும் ஒற்றுமையையும் கெடுக்க சில சேனல்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக பரிசோதித்திருக்கிறோம். ஆர்ப்பாட்டக்காரர்கள்தங்கள் அமைப்பிற்கு ஆதரவாகத்தான் கோஷங்களை எழுப்பினார்கள். பாகிஸ்தானுக்கு
ஆதரவாக அல்ல” என ஒரு இணையதள ஊடகத்திடம் இன்னொரு காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதல்வர்களே பொய்யான செய்தியை- காவல்துறையினரிடம் உண்மை நிலையை அறியக்கூட விரும்பாமல் அவசரப்பட்டு பரப்புகிறார்கள் என்றால் மராட்டிய அரசாங்கமே இஸ்லாமிய வெறுப்பை விதைப்பதாகத்தான் பொருளாகும். அதனால் மராட்டிய அரசை கலைத்தாலும் தவறில்லை . பொது அமைதிக்கு முதல்வர்களே பங்கம் விளைவித்தால் அந்த ஆட்சியை வேறு என்ன செய்ய?
- அபு. 

Makkal Report weekly

Oct 1-7,2022

Comments