ஆர் .எஸ் எஸ் அமைப்புடன் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தொடர்பு ஆதாரத்துடன் கூறும் சீக்கியத் தலைவர் !
ஆர் .எஸ் எஸ் அமைப்புடன் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தொடர்பு
ஆதாரத்துடன் கூறும் சீக்கியத் தலைவர் !
ஹரியானா சீக்கிய குருத்துவாரா (மேலாண்மை) சட்டம் (HSGMC) 2014 தொடர்பான சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தியல் தாக்கம் கொண்டிருக்கிறது என கடந்த 23ம் தேதி குற்றம் சாட்டியுள்ள ஷிரோன்மணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டி (SGPC)யின் தலைவர் ஹரீந்தர் சிங் தாமி, இந்த தீர்ப்பைத் தந்த உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவருக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன்
தொடர்பு உள்ளது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரபந்தக் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி விவாதித்தஹரீந்தர் சிங் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “HSGMC சட்டம் 2014ஐ தனி சட்டமாக்கியது தொடர்பாக இரண்டு நீதிபதிகளால் கொடுக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவருக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நேரடித் தொடர்பு உள்ளது. அதனால் இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பாக இருப்பதற்கு பதிலாக அரசியல் நலன்களை
நோக்கமாகக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஹரீந்தர் சிங், “அந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவருக்கு ஆர்.எஸ்.எஸ்
அமைப்புடன் தொடர்பு இருக்கிறது என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அவரது பெயரை விரைவில் பகிரங்கப்படுத்துவேன்”.என்றும் தெரிவித்துள்ளார்.
ஹரீந்தர் சிங் தலைமையில் நடத்தப்பட்ட SGPC யின் செயற்குழு கூட்டம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்து தீர்மானம் இயற்றியுள்ளது. ஹரியானா சீக்கிய குருத்துவாரா (மேலாண்மை) சட்டம் 2014ன் செல்லுபடிதன்மையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
SGPC என்ற சீக்கிய குருத்துவாரா பிரபந்தக் கமிட்டி, சீக்கிய மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கதும் சீக்கிய மக்களின் பெரும் ஆதரவு பெற்ற கமிட்டியுமாகும். இது, சீக்கிய குருத்துவாராக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஹரியானா சீக்கிய குருத்துவாரா (மேலாண்மை) கமிட்டி சட்டம் 2014 கொண்டு வரப்படுவதற்கு முன் சீக்கிய குருத்துவாராக்கள் சட்டம்
1925ன் கீழ் குருத்துவாராக்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த குருத்துவாராக்கள் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் உள்ளன. இவற்றின் நிர்வாகத்தை அமிர்தசரஸ்சைத் தலைமையகமாகக் கொண்ட, ஷிரோன்மணி குருத்துவாரா (மேலாண்மை) பிரபந்தக் கமிட்டியான SGPC செய்து வந்தது.
ஹரியானா சீக்கிய குருத்துவாராக்கள் (மேலாண்மை) சட்டம் 2014, ஹரியானாவில் SGPCக்கு பதிலாக குருத்துவாராக்களை பராமரிக்க தனி கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்கிற சீக்கியர்களில் ஒரு பிரிவினர் சுமார் 20 ஆண்டுகளாக கோரி வருவதின் விளைவாக கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றம் இதுகுறித்த சமீபத்திய தீர்ப்பில், ஹரியானா சீக்கிய குருத்துவாரா மேலாண்மை சட்டத்தை உறுதிப்படுத்தியதோடு, மாநிலத்தில் சீக்கிய சிறுபான்மையினரின் விவகாரங்கள் சீக்கியர்களால் மட்டுமே
நிர்வாகி க்கப்பட்டு வருகிறபடியால் இது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 25 மற்றும் 26 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் எந்த அடிப்படை உரிமைகளையும்மீறுவதாகக் கூறமுடியாது எனக் கூறியிருந்தது. இந்தத் தீர்ப்புதான் SGPC கமிட்டியைக் கோபப்படுத்தியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 25ம் தேதி, சண்டிக்கரின் கல்கிதார்
நிவாஸில் செயற்குழுவைக் கூட்டிய SGPC சீக்கிய குருத்துவாரா சட்டம் 1925 அமலில் இருக்கும் போது மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட குருத்துவாரா சட்டம் 2014 SGPCக்கு உள்ள வரம்பிற்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஹரீந்தர் சிங், “குருத்துவாரா சட்டம் 2014 தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தது, சீராய்வு மனுவை தாக்கல் செய்ய SGPC செயற்குழு முடிவு செய்திருக்கிறது. அதோடு, செப்டம்பர் 30, 2022 அன்று, இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சிறப்பு
கூட்டத்திற்கு SGPCயின் அனைத்து உறுப்பினர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஹம்ரீந்தர் சிங் கூறுகையில், “சீக்கிய குருத்துவாரா
சட்டம் 1925ல் எந்த திருத்தமாவது மேற்கொள்ளும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. அது கூட, SGPCயின் பொதுமன்றத்தின் அல்லது பொதுக்குழுவின் ஒப்புதலுடன் தான் செய்ய முடியும்” என்றும் தெரிவித்துள்ளதோடு, 1959ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, குருத்துவாரா விவகாரங்களில் தலையிட்டது. ஆனால், அது சீக்கியர்களின்
கோரிக்கையை ஏற்க வேண்டியிருந்தது. 1959 ஏப்ரல் மாதம், சீக்கியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஷிரோன்மணி அகாலிதள் தலைவர் குரு தாராசிங் ஆகியோருக்கிடையில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, சீக்கிய குருத்துவாராக்கள் சட்டம் 1925ல் திருத்தம் செய்ய SGPC பொதுக்குழுவின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என ஆக்கப்பட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.
SGPCக்கு எதிராக காயை நகர்த்தும் ஆர்.எஸ்.எஸ் சீக்கியர்களுக்கு மத்தியில்
பிரிவினையை ஏற்படுத்தி தனக்கு ஆதரவான ஒரு குழுவை உருவாக்கப் பார்க்கிறது.இந்து ராஷ்ட்டிரத்திற்கு எதிராக சீக்கிய சமூகம் நிற்கும் என்பதால் இந்த சதித்திட்டத்தை அது தீட்டியுள்ளது.
ஹரியானாவில் முஸ்லிம்கள் மாநகராட்சி திடல்களில் தொழுகை நடத்த அரசு தடை விதித்த போது, முஸ்லிம்கள் விரும்பினால் தங்கள் குருத்துவாராக்களில் தொழுகை நடத்தலாம் என அழைப்பு விடுத்தது இந்த ஸஃப்க் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஃபைஸல்
Makkal Report WeeklyOct 1-7,2022
Comments
Post a Comment